Tuesday, October 4, 2016

உலகளவில் நமது இந்திய ராணுவத்தின் அதீத வலிமைகளும் அதன் சிறப்புக்களும்


உலகளவில் நமது இந்திய ராணுவத்தின் அதீத வலிமைகளும் அதன் சிறப்புக்களும்

உலகளவில் நமது இந்திய ராணுவத்தின் அதீத வலிமைகளும் அதன் சிறப்புக்களும்
சமீபத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் யூரி தாக்குதலுக்கு பதிலடி தரும் விதமாக நேற்று நமது
இந்திய ராணுவத்தின் விமானப்படை, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியின் வான்பகுதிக்குள் சென்று அங்குள்ள தீவிரவாதிகள் நிலைகளின் மீது தாக்குதல் நடத்தி பாகிஸ்தானை யே கதிகலங்கச் செய்துள்ள‍து. மேலும் வளரும் நாடான நமது இந்தியா ராணுவ பலத்தில் எவ்வளவு சக்திவாய் ந்தது என நம்மில் பலருக்கு தெரிய வில்லை. இந்திய ராணுவத்தின் பலம் பற்றி இணையத்தில் படித்ததை இங்கு பகிர்ந்துள்ளேன்.

1)உலகில் மூன்றாம் பெரியராணுவம், இந்திய ராணுவம் தான் (அமெரிக்கா, சீனாவை அடுத்து).
2)உலகின் மிகஉயரமான போர்க்களமான (Siachen) சியாச்சின் (கடல்மட்டத்திலிருந்து  5000 மீட்டர் மேல்) இமாலய பகுதியில், இந்திய ராணுவ கட்டுப்பாட்டில் உள்ளது.
3) உலகின் மிக பெரிய தன்னார்வ ராணுவ காலாட்படை இந்தியாவில்உள்ளது.
4) இந்திய ராணுவம் உயரமான மலைப்பகுதி களிலும், பனி பிரதேசங்களிலும் போர்புரிந்து மிக சிறந்த போர் வீரர்களாக திகழ்கின்றனர்.
5)இந்தியராணுவம் 1970 களிலும் 1997களிலும் அணு ஆயுதசோதனையை உலகநாடுகளுக்கு தெரியாமல் சாமர்த்தியமா க செய்துள்ளது. அமெரிக்க சி.ஐ.எ-க்கு தெரி யாமல் சோதனை நடத்தியது அவர்களுக்கு பெரும் இழுக்கு.
6) இந்திய அரசின் மற்ற நிறுவனங்கள், அரசு துறைகளைபோல இந்திய ராணுவத்தில் சாதி /மதமற்ற இடஒதுக்கீடுகள் எதுவும்கிடையாது
7) 1971-ல் பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த லோங்வாலா போரில் (Battle of Longewala), வெறும் இருராணுவ வீரர்கள் மட்டுமே வீர மரணம் அடைந்தனர். ஒரே ஒரு டாங்கர் மட்டுமே வீழ்த்தபட்டது.
8) ஆசியாவிலேயே மிக பெரிய கடற்படை கேரளாவில் உள்ள எழிமலா கடற்படை.
9) உலகின்  மிக பெரிய குதிரை படை இந்திய ராணுவத்தில் உள்ளது.
10) இந்தியாவை தவிர தஜகஸ்தானிலும், பூட்டானிலும் இந்திய ராணுவ தளம் அமைக் கப்பட்டுள்ளது.
11) 1982-ல் இந்திய ராணுவம் உலகின் உயர மான இடத்தில உள்ள பெய்லி பாலத்தை (Bailey bridge), இமாலயத்தில் டிரஸ் மற்றும் சுரு நதிகளுக்கிடையே கட்டியுள்ளனர்.
12) 1971-ல்  பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் உட்பட 93,000வீரர்கள், இந்திய ராணுவத்திட ம் சரணடைந்து போரை முடிவுக்கு கொண்டு வந்தனர்.
13) 2013-ல் நடந்த ஆபரேஷன் ரகாத் Operation Rahat (உத்தர்கண்ட்வெள்ளம்), உலகத்தில் நடத்தப்பட்ட மிகப்பெரிய பொது மக்கள் மீட்பு நடவடிக்கைகளில் ஒன்றாகும். கிட்டத்தட்ட 1,000,000 மக்கள் 12 நாட்களில் வெளி யேற்றப்பட்டனர்
14)1990ல் ஈராக் (சதாம்ஹுசேன்) குவைத்தை ஆக்கிரமித் தபோது இந்திய வான்படை 1,70,000 இந்தியர்களை வெளி யேற்றி கொண்டு வந்தது.

15)இந்தியா-ரஷ்ய கூட்டுத்தயாரிப்பில் உருவாக்க ப்பட்ட பிரம்மோஸ் (Brahmos) ஏவுகணை உலகின் அதிசக்திவாய்ந்த, வேகமான ஏவுகணைகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
16)அக்னிV (Agni-V) மற்றும் பிரித்வி (Prithivi) அதிதுல்லியமான கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைளா க இருக்கிறது.
17) ராணுவத்தின் உயரிய விருதான பரம் வீர் சக்ரா, இதுவரை 21 முறை மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. அதிலு ம் பெரும்பாலும் இறந்த பின்னர்தான் கொடுக்கப்பட்டுள்ளது.
18) நாடுமுழுவதும் 53கண்டோன்மெண்டுகளும் 9 இராணுவத்தளங்களை யும் நமது இந்திய ராணுவம் கொண்டுள்ளது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...