திருஷ்டி என்பது என்ன? வயதுக்கேற்றபடி திருஷ்டி கழிப்பது எப்படி? – ஒரு பார்வை
திருஷ்டி என்பது என்ன?
ஒரு மனிதனின் கண் ஒளிக்கு, வீட்டை எரிக்கும் சக்தி உண்டு. மற்றவன் வாழ்க்கையையும் எரிக்கும் சக்தி உண்டு.”கல்லடி பட்டாலும்
கண்ணடி படக்கூடாது” என்பது பழமொழி. மனிதனின் கண்பார்வைக்குத் தனித்த மகத்துவம் உண்டு. மனத்தின் உணா்ச்சிகளை வெளிப்படுத்து வதில் கண்களுக்கு அதிகமான பங்கு உண்டு.
கண்பார்வை மூலமாகவே பார்க்கப்படும் பிற மனிதனி ன் மனநிலையையோ, உடல் நலத்தையோ, வாழ்க்கை நிலையையோ, மேன்மையாக்கிவிட முடியும் அல்லது சீா் குலைத்துவிட முடியும்.
சித்தா்கள், யோகிகள், ஞானிகள் இவா்களின் அருட் பார்வை பெற்ற ஒருவா் மேன்மையடையலாம். பொறாமை மிக்கவா்கள் பார்வையால் ஒருவனது உடல் நலம், தொழில், வியாபாரம் பாதிக்கப்படுவது உண்டு கண் பார்வை மூலமாகப் பிறா்க்குப்பாதிப்பு ஏற்படுவதைக்கண்திருஷ்டி என்று கூறுவா்.
ஒவ்வொரு மனிதருக்கும் வாழ்க்கையில் லட்சியங்களும்,ஆசைகளும்உண்டு.அதற்காக மனிதன் தன் எண்ணங்களை நிறைவேற்றுவதற்கு போராடுகிறான்.தன்னுடன் சமமான மனிதர் உயர்வடையும் பொழுது, சிலரு க்கு உயர்வடையும் மனிதரை பார்க்கும்பொழுது ஏக்கமாகவும், பலருக்கு பொறாமையாகவும் எண்ணங்கள் தோன்றுகின்றன. நம்முடைய தீய எண்ணங்களின் வெளிப்பாடே திருஷ்டி ஆகும்.
ஒரு மனிதன் வாழ்வில் எந்த நிலையில் எப்படி வரவேண்டும் என்பது கடவுளால் தீர்மானிக்கப்பட்டதாகும்.இதை விதி என்றும் சொல்லலாம். நல்ல எண்ணம்,அடுத்தவர் வளர்ச்சியில் மகிழ்ச்சியடைவது.நல்ல பண்பு , தர்ம குணம்,தன்னை போல பிறரை எண்ணுவது இந்த குணநலன்கள் உள்ள நபரை திருஷ்டி ஒன்றும் செய்யாது.
மற்றவர்வகள் நம்மை நல்ல விதமாக வோ, தீய விதமாகவோ நினைக்க வேண் டும் என்பதை,நாம் தீர்மானிக்க முடியாது. ஆனால் நாம் மற்றவர்களை எந்தவித கெட்ட எண்ணங்களும் இல்லாமல், பொ றாமை கொள்ளாமல் நினைத்து, நம் முடைய செயலையும், கடமையையும் செய்தாலே போதும், நம்முடைய வளர்ச்சியை,எந்த கண் திருஷ்டியாலும் தடுக்க முடியாது.
திருஷ்டி சுத்தி போடுவது எப்படி?
திருஷ்டி என்பது சம்ஸ்கிருத சொல். தமிழில் கண். திருஷ்டி கழித்தலை தமிழர்கள் கண்ணேறு கழித்தல் என்று கூறுவார்கள்.
திருஷ்டி என்பது சம்ஸ்கிருத சொல். தமிழில் கண். திருஷ்டி கழித்தலை தமிழர்கள் கண்ணேறு கழித்தல் என்று கூறுவார்கள்.
வயதுக்கேற்றபடி திருஷ்டி கழிப்பது எப்படி?
குழந்தை திருஷ்டி;
பிறக்கும் குழந்தை எல்லாம் அழகுதான். அழகோ அழகுன்னு எல்லாரும் கொஞ்சறப்போ ஏற்படுற திருஷ்டிக்கு பரிகாரம் தான் கருப்பு திருஷ்டி பொட்டு. எளிமையான இது எல்லோராலும் செய்யக்கூடிய ஒன்று. நெற்றியி லும் கன்னத்திலும் இடப்படும் மைப்பொட்டு குழந் தையின் திருஷ்டி யை போக்கும். கோயில்கள்ல தருகின்ற ஹோம ரட்சையை வைத்தால் இன்னும் கூடுதல் பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை!.
வாலிப திருஷ்டி;
ஒருகைப்பிடி உப்பை எடுத்து கையை நல்லா மூடி கிட்டு இளைஞனையோ / வாலிப பெண்ணையோ கிழக்கு நோக்கி இருத்தி இடமிருந்து வலமா மூணு தடவையும் வலமிருந்து இடமா மூணு தடவையும் சுத்தி அப்படியே சுத்தி அந்த உப்பை தண்ணியில போட்டுடுங்க. தண்ணியில உப்பு கரையரா மாதிரி திருஷ்டி எல்லாம் கரைஞ்சி போய்விடும்.
பெரியவங்களுக்கு;
புதிய சட்டி ஒன்று, ஊமத்தங்காய், படிகாரம் தெருமண் , இவைகளை சேகரித்துக் கொண்டு பெரியவர்களை தெருவாசலில்கிழக்கு முகமாகநிறுத்தி மண்சட்டிக்குள் ஊமத்தங்காய், படிகாரம், தெருமண் இவை மூன்றையும் போட்டு மண்சட்டி யை தலைக்கு இடமிருந்து வலமாகவும் வலமிரு ந்து இடமாகவும் மூன்று முறை சுற்றி தலை முதல் பாதம் வரை இறக்கி அப்படியே எடுத்துச் சென்று முச்சந்திகள் கூடும் இடத்தில் போட்டு உடையுங் கள். கையோடு ஒரு துடைப்பம் எடுத்துச் சென்று ஓரமாக பெருக்கித் தள் ளுங்கள். இதனால் யாருக்கும் பாதிப்பு ஏற்படாமல் போகும். பின்னர் வீடு திரும்பி கை கால் கழுவி தலையில் சிறிது தண்ணீர் தெளித்துக் கொண்டு வீட்டிற்குள் நுழையவும். பிள்ளையையும் அவ்வா றே செய்ய செய்து உள்ளே அழைத்துச் செல்லவும்.
மாதம் ஒருமுறை மூன்று கண் கொட்டாங்கச்சி எடுத்து அதை அடுப்பில் பற்றவைத்து ஒரு தட்டில் வைத்து சுற்றி தெருவில் ஓரமாக போடலாம்.
இன்னும் சில வீடுகளில் கடுகுமிளகாய், உப்பு சிறிது தெருமண், தலைமுடி இவற்றினை கையில் எடுத் துக் கொண்டு குழந்தையை உட்காரவைத்து ஊரு கண்ணு, உறவு கண்ணு, நாய் கண்ணு, நரிக் கண்ணு, நோய்கண்ணு, நொள்ள கண்ணு கண்டக் கண்ணு, கள்ளக் கண்ணு, அந்த கண்ணு, இந்த கண்ணு எல்லாம் கண் ணும் கண்டபடி தொலையட்டும் கடுகு போல வெடிக்கட்டும் என்று இடமி ருந்து வலமாகவும் வலமிருந்து இடமாகவும் சுற்றி அடுப்பில் போடுவார்கள்.
இன்னும் சில வீடுகளில் கடுகுமிளகாய், உப்பு சிறிது தெருமண், தலைமுடி இவற்றினை கையில் எடுத் துக் கொண்டு குழந்தையை உட்காரவைத்து ஊரு கண்ணு, உறவு கண்ணு, நாய் கண்ணு, நரிக் கண்ணு, நோய்கண்ணு, நொள்ள கண்ணு கண்டக் கண்ணு, கள்ளக் கண்ணு, அந்த கண்ணு, இந்த கண்ணு எல்லாம் கண் ணும் கண்டபடி தொலையட்டும் கடுகு போல வெடிக்கட்டும் என்று இடமி ருந்து வலமாகவும் வலமிருந்து இடமாகவும் சுற்றி அடுப்பில் போடுவார்கள்.
இதுவும் ஒரு எளிமையான திருஷ்டி பரிகாரமே!
இந்த திருஷ்டி பரிகாரங்கள் நம்முடைய முன்னோர்கள் தொன்றுதொட்டு கடைபிடித்து வந்தவை ஆகும்.இதை கடைபிடிப்பது அவரவர் விருப்பம் ஆகும்.
No comments:
Post a Comment