பொட்டுகடலை சாப்பிட்டால் சோகை உண்டாகாது. பொட்டுக்கடலை தின்பது உடலுக்கு மிகவும் நல்லது.
பொட்டுக்கடலையை பொரிகடலை, உடைத்தகடலை என்றும் கூறுவார்கள். பொட்டுக்கடலையை தேங்காயுடன் சேர்த்து சட்னியாக அரைத்து சாப்பிடுவார்கள். ஆனால் பொட்டுக்கடலையின் நன்மைகளை பற்றி பெருபாலான மக்களுக்கு தெரிவது இல்லை. பொட்டுக்கடலையில் உள்ள ஊட்டச்சத்துகள் நம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன. பொட்டுக்கடலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை பற்றி அறிவது நல்லது.
பொட்டுக்கடலையின் பயன்கள் :
கலோரிகள் 355
கொழுப்பு – 6.26 கிராம்
நார்ச்சத்துக்கள் – 16.8 கி
புரோட்டீன் – 18.64 கி
கொலஸ்ட்ரால் – 0 மி. கி
பொட்டாசியம் – 845 மி. கி
100 கிராம் பொட்டுக்கடலையில் 18.64 கி புரோட்டீன், 16.8 கி நார்ச்சத்துக்கள் இருப்பதால் இதை சாப்பிடுபவர்களுக்கு எலும்புகள், நரம்புகள் மற்றும் தசைகள் வலுப்பெறும். நீண்ட நேரம் கடினமான உடல் உழைப்பில் ஈடுபடுபவர்கள் பொட்டுக்கடலையை சிறிது சாப்பிட்டால் உடலுக்கு ஆற்றலை கிடைக்கும்.
இதய ஆரோக்கியம்:
இதயம் ஆரோக்கியமாக இருக்க புரதம் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். புரத சத்து அதிகம் நிறைந்த பொட்டுக்கடலையை அடிக்கடி சாப்பிடுவதால் இதய நலம் மேம்படும். மேலும் உடைத்த கடலை பருப்பில் மாங்கனீஸ், பாஸ்பரஸ், போலேட் மற்றும் காப்பர் போன்ற இதய நோய்களை குறைக்கும் சத்துக்களும் உள்ளன.செரிமான பிரச்சனை:
நாம் சாப்பிடும் உணவுகள் செரிமானம் ஆவதற்கு வயிறு, குடல் போன்ற உறுப்புக்கள் ஆரோக்கியமாக இருப்பது அவசியம். உடைத்த கடலை பருப்பில் உள்ள நார்ச்சத்து, செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது. மேலும் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றவும், உள்ளுறுப்புகளை சுத்தம் செய்து ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
நோயெதிர்ப்பு சக்தி:
சிலர் அடிக்கடி உடல்நலக் குறைவால் பாதிக்கப்படுகின்றனர். இவர்கள் உடைத்த கடலை பருப்புகளை சாப்பிட்டுவந்தால் நோயெதிர்ப்பு சக்தி மேம்படும், நோய்களின் தாக்குதல்களில் இருந்து விடுபடலாம். மேலும் பருப்பு வகைகள் அனைத்துமே மனிதர்களின் உடல் ஆரோக்கியதை மேம்படுத்த உதவுகிறது.
சருமம்:
உடைத்த கடலை பருப்பை தினமும் சாப்பிட்டு வருபவர்களுக்கு எளிதில் தோல் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படாது. பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் முகம் பொலிவாக இருக்கவேண்டும் என்று க்ரீம்களைப் பயன்படுத்துவார்கள். இவர்கள் தினமும் உடைத்த கடலை பருப்பை சாப்பிட்டு வந்தால் முகப் பொலிவு மேம்படுவதோடு, தோலில் சுருக்கங்கள் ஏற்படும் தன்மையும் நீங்கும்.
உடல் எடை:
உடைத்த கடலை பருப்பை சாப்பிட்டால், உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்கள் கரைக்கப்பட்டு, உயரதிற்கு ஏற்ற உடல் எடையை பெற உதவுகிறது. உடல் பருமன் உள்ளவர்கள் பொட்டுக்கடலையை சாப்பிட்டால் உடல் எடை குறையும், உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.
நரம்புகள்:
உடல் சீராக இயங்குவதற்கு நரம்புகள் ஆரோக்கியமாக இருப்பது அவசியம். உடைத்த கடலை பருப்பை சாப்பிட்டு வந்தால் இதில் உள்ள புரதங்கள் மற்றும் இதர சத்துக்கள் நரம்பு சம்பந்தமான பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்பை குறைக்கிறது.

No comments:
Post a Comment