கையில் செலவுக்கு காசு பணம் இல்லாமல் வறுமையில் சிக்கிக் கொண்டு தவிக்கும் கஷ்டம் என்னவென்று பணம் இல்லாமல் கஷ்டப்படுபவர்களுக்கு தான் தெரியும். தங்கம் என்ன விலையை தொட்டாலும் அதை வாங்குவதற்கு கூட்டம் நகை கடையில் அலைமோதத்தான் செய்கிறது. பண்டிகை நாட்கள் என்றால் புத்தம் புது துணிகள் வாங்குவதற்கு கூட்டம் அலைமோதுகிறது. அதே சமயம் டிவி, மிக்ஸி, மொபைல் போன், கம்ப்யூட்டர், என்று எலக்ட்ரானிக் பொருட்களும் விற்றுக் கொண்டுதான் இருக்கின்றது. ஆடம்பர வாகனங்களை வாங்குபவர்கள் வாங்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் இந்த எல்லா வசதிகளும் ஒரு சேர ஒரு சாராரை மட்டும்தான் போய் சேருகிறதே தவிர, எல்லோருக்கும் எல்லா வசதிகளும் சமபங்கு கிடைப்பது கிடையாது. மிகவும் பணக்காரராக இருப்பவர்கள் இன்னும் இன்னும் இன்னும் பணக்காரர் ஆகி கொண்டுதான் இருக்கிறார்கள். பணத்திற்காக மாத வருமானத்திற்காக கஷ்டப்படுபவர்கள், மேலும் மேலும் கஷ்டப்பட்டு கொண்டுதான் இருக்கிறார்கள். நீங்களும் பணத்திற்கு ரொம்ப கஷ்டப்படுறீங்களா. உங்களுடைய வறுமையை நீக்க அயராது உழைக்க வேண்டும். அதனுடன் சேர்த்து இதோ ஒரு சுலபமான ஒரு தாந்திரீக பரிகார முறை. தாந்திரீகம் என்றாலே அது நம்பிக்கையின் அடிப்படையில் செய்யக்கூடிய பரிகாரம்தான். நீங்களும் இதை நம்பிக்கையுடனே செய்து பாருங்கள். காலையில் எழுந்து சுத்தபத்தமாக குளித்துவிட்டு பூஜையறையில் ஒரு விளக்கு ஏற்றி வைத்துவிட்டு சாமியின் முன்பு அமர்ந்து ஒரு சிறிய வெள்ளை பேப்பரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சிவப்பு பேனாவைக் கொண்டு ‘ஹீம்’ என்ற வார்த்தையை எழுதிக் கொள்ளுங்கள். எழுதிய இந்த பேப்பரை உங்கள் பர்சில் மடித்து வைத்துக் கொள்ளலாம். உங்களுடைய ஹேண்ட் பேக்கிலும் மடித்து வைத்துக் கொள்ளலாம். பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் சுலபமாக தீரும். வருமானம் இல்லாமல் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறீர்கள். அவசர தேவைக்கு கடன் வாங்க செல்லும்போது இப்படி எழுதி எடுத்த சென்றால் சரியான நேரத்தில் கடன் கிடைக்கும். ஹவுசிங் லோன், எடுகேஷன் லோன், முயற்சி செய்வீர்கள் அல்லவா. அப்படிப்பட்ட இடத்திற்கும் இதை உங்கள் கையால் எழுதி எடுத்துச் செல்லுங்கள் நல்லது நடக்கும். கணக்கு எழுதி வைக்க கூடிய புத்தகங்கள், பீரோ, இப்படி பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் எல்லாம் இந்த வார்த்தை எழுதி இருந்தால் அந்த இடத்தில் பணப்புழக்கம் செல்வ வளம் அதிகரிக்கும். வறுமை என்பது இருக்காது. பீஜ மந்திரத்தில் இருக்கும் ஸ்ரீம், கிளீம், ஹ்ரீம், ஹீம், என்ற வார்த்தைகளுக்கு எல்லாம் அர்த்தம் தேடி கண்டுபிடிக்க முடியாது. இந்த வார்த்தைகள் எல்லாம் பிரபஞ்சத்தோடு தொடர்பு இருக்கக்கூடிய வார்த்தைகள் என்று நமக்கு சொல்லப்பட்டுள்ளது. இதனால் தான் மந்திரங்களோடு சேர்ந்து இந்த வார்த்தைகளை உச்சரிக்கும் போது அந்த மந்திரத்திற்கான பலன் இரட்டிப்பாக கிடைக்கும் என்பதும் நம்பிக்கை. வெள்ளை பேப்பரில் சிவப்பு பேனாவைக் கொண்டு இந்த வார்த்தையை எழுதுவதால் நமக்கு நஷ்டமாக போவது எதுவுமே கிடையாது. ஆனால் இந்த தாந்திரீக பரிகாரம் உங்களுக்கு ஒர்க் அவுட் ஆச்சுன்னா நிறைய லாபம் பெறலாம். வாழ்வில் சந்தோஷமாக சில நல்ல விஷயங்களை அனுபவிக்கலாம். வறுமையை விரட்டி அடிக்கலாம். உங்களுக்கு பிடிச்சிருந்தா இந்த பரிகாரத்தை முயற்சி செய்து பாருங்கள். நல்லதே நடக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.
I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Subscribe to:
Post Comments (Atom)
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
இளநீரில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் வாதம் சம்பந்தமான நோய்களுக்கும் நல்ல மருந்தாக அமைகிறது. பொட்டாசியம் ம...
-
தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள்தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள் இதுவரை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ...
-
பர்சனாலிட்டி (ஆளுமை)யை வளர்த்துக் கொள்வது எப்படி? – பயனுள்ள குறிப்புக்கள் மனிதர்களின் தனித்தன்மையைப் புரிந்துகொண்டால் அவர்களைச் சமாளி...
No comments:
Post a Comment