கமல ஹாசன் பகுத்தறிவாதியாகவும் நாத்தியவாதியாகவும் அடையாளம் காண விளைவதில் ஆர்வமானவர். ஆனால் இவர் தன் படங்களில் மதத்தை மட்டும் இழிவுபடுத்தும் முதல் வகையைச் சேர்ந்தவர்.
இவரது கதையில் உருவான “அன்பே சிவம்” என்ற படத்தில் கதை முழுக்க “தென்னாடுடைய சிவனே போற்றி” என்று சொல்பவரை மிகக் கெட்டவராகக் காண்பித்திருப்பார். நாசர் அந்த பாத்திரத்தில் நடித்திருப்பார். கொடூரம் என்றால் அத்தனைக் கொடூரம். கமலஹாஷன் ஒரு காட்சியில் படுத்தப் படுக்கையாய் இருப்பார். அவரைப் பார்த்து சிவ பக்தரான நாசர், அந்நிலையிலும் “செத்துப் போ ” என்று சொல்லுமளவுக்கு கொடூரமாக காட்சி அமைந்துள்ளது.
கெட்டவராக் காண்பிக்க ஒரு சிவன் அடியார் என்ற வேடத்தை அடையாளப் படுத்தும் போது, அனைவருக்கும் அடிபட்ட போது உதவி செய்ய ஏன் இன்னொரு இந்து மத குருவையோ, அடியாரையோ காண்பிக்கவில்லை. அது ஏன் என்பதே நமது கேள்வி. உதவி செய்ய இன்னொரு மதமும், கொடூரமாகக் காண்பிக்க இந்து மதமும் உபயோகிக்கிற தைரியம்தான் கமல ஹாசனின் பகுத்தறிவுத் தனமும், நாத்திகவாதிக்கான அடையாளமும்.
ஏனெனில் இந்து மதம்தான் சகிப்புத்தன்மை என்ற அடிப்படையில் எதையும் எதிர்ப்பதில்லையே. அதைத்தான் இவர் போன்ற நாத்திகவாதிகள் உபயோகப்படுத்திக் கொள்கிறார்கள்.
உங்கள் எதிர்ப்பு எங்கள் வியாபாரத்தைப் பாதிக்கும் என்றால், எங்களின் பகுத்தறிவுக் கொள்கையை மூட்டைக் கட்டி வைத்து விடுவோம் என்பதே இவர்களின் கொள்கை .
அவர்களைப் பொறுத்தவரையில், "வியாபாரத்திற்குப் பிறகுதான் எல்லாமும்".......
....... அதில் சகல கலா வல்லவனும் விதிவிலக்கல்ல.#KamalHaasan

No comments:
Post a Comment