Saturday, November 12, 2022

மனைவியுடன் தங்கியிருப்பேன்- வக்கீலிடம் முருகன் உருக்கம் .

 வேலூர் ஜெயிலில் உள்ள முருகன் மற்றும் சாந்தனை சத்துவாச்சாரியை சேர்ந்த வழக்கறிஞர் ராஜகுரு நேற்று மாலை சந்தித்து பேசினார். அப்போது விடுதலை குறித்த விவரத்தை அவர்களிடத்தில் அவர் தெரிவித்தார். இந்த சந்திப்பு குறித்து வக்கீல் ராஜகுரு கூறியதாவது:- விடுதலை குறித்து தகவல் அறிந்த இருவரும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். முதலில் சாந்தனை சந்தித்தேன். பின்னர் முருகனை சந்தித்தேன். அதைத்தொடர்ந்து இருவரிடமும் பேசினேன். விடுதலைக்காக நடவடிக்கை மேற்கொண்ட வக்கீல்கள், தமிழக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின், சுப்ரீம் கோர்ட்டுக்கு தங்களது நன்றியை தெரிவித்தனர். முருகன் வெளியே வந்த பின்னர் தனது மனைவியுடன் தங்கியிருக்க போவதாக உருக்கமாக தெரிவித்தார். மேலும் குடும்பத்தினருடன் ஆலோசனை செய்து தமிழகத்தில் தங்கியிருப்பதா? லண்டன் அல்லது செல்வது குறித்து முடிவெடுப்பேன் என முருகன் தெரிவித்தார். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...