Tuesday, November 15, 2022

நிரூபியுங்கள்.

 *தாயிடம் நிரூபியுங்கள்*

கடைசி வரை அன்பாக இருப்பேன் என்று.
*தந்தையிடம் நிரூபியுங்கள்*
கடைசி வரை உங்கள் பெயரை காப்பாற்றுவேன் என்று.
*மனைவியிடம் நிரூபியுங்கள்*
கடைசி வரை என் காதல் உனக்கானது மட்டும் என்று.
*சகோதரனிடம் நிரூபியுங்கள்*
கடைசி வரை உனக்கு உறுதுணையாய் இருப்பேன் என்று.
*சகோதரியிடம் நிரூபியுங்கள்*
கடைசி வரை உனக்கு செய்யும் அனைத்தும் ஒரு சுமையே இல்லை என்று
*மகனிடம் நிரூபியுங்கள்*
கடைசி வரை உலகமே எதிர்த்தாலும் நான் உன் பக்கம் என்று
*மகளிடம் நிரூபியுங்கள்*
கடைசி வரை உன் கண்ணில் நீர் வழிந்தால் என் கண்ணில் ரத்தம் வரும் என்று
வேறு எவருக்கு நீங்கள் எதை நிரூபித்தாலும் அது கடலில் கொட்டிய பெருங்காயமே..!
தோற்று போனால் வெற்றி கிடைக்குமா
*அம்மாவிடம் தோற்று போ*
அன்பு அதிகரிக்கும்..
*அப்பாவிடம் தோற்று போ*
அறிவு மேம்படும்..
*துணையிடம் தோற்று போ*
மகிழ்ச்சி இரட்டிப்பாகும்..
*பிள்ளையிடம் தோற்று போ*
பாசம் பன்மடங்காகும்..
*சொந்தங்களிடம் தோற்று போ*
உறவு பலப்படும்..
*நண்பனிடம் தோற்று போ*
நட்பு உறுதிப்படும்..
*ஆகவே தோற்று போ*
தோற்று போனால் வெற்றி கிடைக்கும்...
*அன்புடன் வாழுங்கள். மற்றவரை அன்புடன் வாழ வழி வகுப்போம்.*

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...