Tuesday, November 15, 2022

திரு. S.V.ரெங்காராவ் அவர்கள்.

 திரையில் தாம் தோன்றும் காட்சியில் அவரை யாரும் கவனிக்கத் தவற இயலாதபடிக்கான உயரம், உடல் மொழி, வித்தியாசமான குரல், அசத்தலான முக பாவம், காத்திரமான நடிப்பு, நேர்த்தியாகப் பார்வையாளரது கவனத்தைத் தன்னை நோக்கிக் குவிய வைத்துவிடும்படியான இருப்பு, இத்தனையும் துருத்திக்கொண்டிராத தன்னியல்பான பங்களிப்பு... அதுதான் ரங்கா ராவ்.

திரையுலகின் கடோத்கஜனுக்கு அந்த வேடமே கிடைத்துவிட்டபின், வேறென்ன சொல்ல? ‘மாயா பஜார்’ படமே அவரது அராஜக அட்டகாசங்களால் சிறப்பாக இருக்கும். 'கல்யாண சமையல் சாதம்' என்று திருச்சி லோகநாதன் எடுத்துக் கலக்கும் அற்புத பாடலுக்கு அவரைக் காட்டிலும் வேறு யார் கடோத்கஜன் என்று நாம் கண்டிராத கதாபாத்திரம் ஒன்றை நடிப்பின் மூலம் நம்ப வைத்திருக்கமுடியும்! புராணக் கதாபாத்திரங்களுக்கு, தந்தை முத்திரை நடிப்புக்கு அவரே இணை!!!
நகைச்சுவை, பாசம், ஆத்திரம், முரட்டுக் கோபம், ஆதங்கப் பெருமூச்சு, பேரமைதி என எத்தனையோ உணர்ச்சிகளை வண்ணங்களாகக் குழைத்து அவர் திரையில் தீட்டிய சித்திரங்கள் வரும் தலைமுறைக்கு நடிப்புக்கலையின் பாடம். தாமே சிறந்த கதாசிரியராக, கவிஞராக, பன்முக ஆற்றல் நிரம்பியவராக, ஆனால் எளிய ஆளுமையாக வாழ்ந்த மாபெரும் கலைஞன்.✍🏼🌹
May be an image of 2 people and people standing

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...