Wednesday, November 9, 2022

நல்ல செயல்.

 நமது குணங்களில் தலையாய குணம் மற்றவர்களின் நல்ல செயல்களை இதய சுத்தியுடன் பாராட்டுவது.. மாலைக்கும், மரியாதைக்கும் மயங்குபவர்கள் பலர். இன்னும் சிலரோ எத்தனையோ சாதனைகள் அல்லது நல்ல செயல்கள் செய்து இருந்ததாலும் பாராட்டைப் பெற தவிர்த்து விடுவார்கள்.. மற்றும் வெறும் புகழ்ச்சிக்கு மயங்க மாட்டார்கள்..

ஆனால் மனித வாழ்வில் பாராட்டு, எதிர்பார்ப்புடன் இருப்பது சர்வ சாதாரணம். மனித மனம் பாராட்டுகளைத் தொடர்ந்துப் பெற நினைக்கும். இந்த நினைப்பால் அவர்களது சாதனைகள் ஒரு தொடர்கதையாகவே இருக்கும். எனவே பாராட்டுப் பெற வேண்டியவர்களை நாம் பாராட்டத் தவறினால், நல்லது செய்வதற்கான மனம் படைத்தவர்களே சற்று ஒதுங்கி,நல்லது செய்வதை நிறுத்தி விடுவார்கள். சிலர் உரிய பாராட்டுக் கிடைக்காத போது எவ்வளவு நல்லது செய்தும் இவர்கள் ஒருவர் கூட நன்றி கூடத் தெரிவிக்கவில்லையே என மனம் வருந்துபவர்களும் உண்டு. நாம் தான் அப்படிப்பட்டவர்களைத் தேடிக் கண்டு பிடித்து பாராட்டு செல்ல வேண்டும்..
மற்றவர்களின் நல்ல பண்புகளை, செயல்களை, குணங்களை மனம் திறந்துப் பாராட்டுங்கள். உங்கள் பாராட்டின் மூலமாக ஒருவருக்கு அங்கீகாரம் கிடைக்கின்ற போது அவர் உங்களை மேலும் பன்மடங்கு விரும்புவதோடு உங்கள் மீது மிகுந்த நல்மதிப்பைக்கொண்டு இருப்பார்..

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...