Sunday, November 13, 2022

பெண் குழந்தைகளை வளர்த்துவது எப்படி?

 பெண்குழந்தைகள் என இல்லை, பெண்களுடன் வேலை செய்வது தான் பெஸ்ட். கமிட்டி, குழு என வந்தால் அவர்களை மாதிரி கோ-ஆபரேடிவாக, டெடிகேசனுடன் வேலை செய்பவர்களை காண்பது அரிது. ஆண்கள் இருக்கும் குழுக்களில் வெட்டு,குத்துகள் கூடுதல், பாலிடிக்ஸ் தூக்கலாக இருக்கும்.

அதனால் ஒப்பீட்டளவில் ஆண்குழந்தைகளை வளர்ப்பதை விட பெண்குழந்தைகளை வளர்ப்பது எளிது என்பது ஆண்குழந்தை இல்லாத என் அனுபவம் 🙂 அந்த அளவுக்கு ஆண்கள் அடங்காபிடாரிகள்.
ஆண்களுக்கு சிறுவயது முதல் "நீ சாதிக்க பிறந்தவன், பெரிய தொழில் சாம்ராஜ்யங்களை நிறுவப்பிறந்தவன், மாபெரும் சாதனைகளை செய்யபிறந்தவன்" என சொல்லி சொல்லி வளர்க்கவேண்டும். இதில் பொய் எதுவுமில்லை...நம் எல்லாராலும் இம்மாதிரி சாதனைகளை செய்யமுடியும்தானே? ஹீரோக்களும், கனவுகளும் இல்லாத ஆண்மகன் தட்டுகெட்டு போகும் வாய்ப்பு கூடுதல். பெண்களுக்கு இம்மாதிரி சிக்கல் இல்லை. ஆண்களுக்கு ஒரு துருவநட்சத்திரம் அவசியம். பெற்றோராக அதை கொடுக்கவில்லை எனில் அவன் விஜய், ரஜினி என தனக்கு ஒரு துருவநட்சத்திரத்தை தேர்ந்தெடுத்து கொள்கிறான்.
பெண்குழந்தைகளுக்கு வாழ்வின் குறிக்கோள் என்ன என நாம் சொல்லவேண்டியது கிடையாது. அவர்களை நல்ல சூழ்நிலையில் பாசமாக வளர்த்து, ஸ்டெம் எனப்படும் அறிவியல்/கணித/மருத்துவதுறையில் படித்து பட்டம் பெறவேண்டும் என சொல்லி அதற்கேற்ர சூழலை உருவாக்கினால் அவர்கள் செய்வார்கள்.
முக்கியமாக பெண்குழந்தைகள்டன் தந்தை தினம் ஒரு மனிநேரமாவது செலவு செய்யவேண்டும். அவர்களுக்கு நல்லபோதனை புகட்டவேண்டும், நீதிகதைகள் சொல்லவெண்டும் என கூட அவசியம் இல்லை...அவர்கள் தன் தாயும், தந்தையும் எப்படி வாழ்கிறார்கள் என்பதை பார்த்தே அவற்றை கற்றுக்கொள்வார்கள். பெண்குழந்தை முன் தாயை பாசமாக நடத்தும் தந்தையை பார்த்து தனக்கு எப்படிப்பட்ட கணவன் அமையவேண்டும் என முடிவெடுப்பார்கள். தாயை அவமரியாதையாக நடத்தும் தந்தையை வெறுப்பார்கள்.
அவர்களுடன் உட்கார்ந்து படிப்பு சொல்லிகொடுப்பது, பார்க்குக்கு கூட்டிபோவது, டென்னிஸ் ஆடுவது என எதாவது ஒரு பொழுதுபோக்கை தினம் செய்யவும். அதைக்கூட எட்டாவது வகுப்பு வரை தான் செய்யமுடியும். அதன்பின் பரிட்சை, படிப்பு என அவர்கள் வாழ்வு மாறிவிடும்.
உடல்பயிர்சி, தற்காப்புகலை மிக முக்கியம். பாதுகபபுக்கு இல்லையெனினும் வலுவான எலும்புகளும், முதுகெலுப்பும் அமைவது பிள்ளைபிறப்பு, பெண்கலுக்கு கூடுதலாக வரும் ஒஸ்டிரியோபொசிஸ் ஆகியவற்றில் இருந்து அவர்களை காக்கும்.
பெண்கள் பளுதூக்கினால் அர்னால்டு மாதிரி தசை வந்துவிடும் என கலங்கவேன்டாம்..அப்படி வர ஸ்டிராய்டு எடுக்கவேண்டும் 🙂 அர்னால்டு ஆவது அத்தனை எளிதும் அல்ல 🙂
இளவயதில் வீட்டை வீட்டு ஓடுவது, இளவயதில் கர்ப்பம் ஆவது, இதையெல்லாம் செய்யும் பெண்கள் யார் என பார்த்தால் தந்தை சரியில்லாத பெண்களாக தான் இருப்பார்கள். தந்தை கொடுமைக்காரனாக ஆகையில் அவர்கள் அந்த அன்பை வெளியிடங்களில் தேடிச்செல்கிரார்கள். பெண்குழந்தைகளுக்கு தாய்மட்டுமே போதும் என நினைப்பது மிக, மிக தவறானது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...