Sunday, November 13, 2022

"கோல்டன் கிரவுன்"

 இந்த நபர் தன் மேதா விலாசத்தை அடிக்கடி தன் அறிக்கைகள் மூலம் வெளிப்படுத்தி அதன் மூலம் பல்பு வாங்குவது நமக்கு புதிதல்ல.

சமீபத்தில் சென்னை வந்த அமீத்ஷா மருத்துவக் கல்வி தமிழ்நாட்டில் தமிழ் வழியில் இருக்கவேண்டும் என்று தெரிவித்த கருத்துக்கு பதிலடி கொடுப்பதாக எண்ணி ஒரு முத்து உதிர்த்திருக்கிறார்.
அதாவது மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் முதலில் தமிழை கட்டாயமாக்க வேண்டுமாம்!
கேவி பள்ளி பற்றிய அடிப்படைப் புரிதல் கொஞ்சம்கூட இருப்பதாக தெரியவில்லை.
அது அடிக்கடி மாற்றலாகக் கூடிய ராணுவம் போன்ற மத்திய அரசு பணியாளர்கள் குழந்தைகளின் வசதிக்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு CBSE அரசு பள்ளி. நாடெங்குமுள்ள இந்தப் பள்ளிகளில் ஒரே பாடத்திட்டம் இருந்தால்தான் மாற்றலான பெற்றோர்கள் உடன் செல்லும் பிள்ளைகள் அந்த புதிய பள்ளியில் சிரமம் இன்றி கல்வியைத் தொடர முடியும்.
தமிழ் நாட்டில் உள்ள கேவி பள்ளி மாணவன் இங்கு கட்டாயத் தமிழ் படித்து நாளை காஷ்மீர் பள்ளியில் சேர்ந்தால் அங்கு அவனுக்குத் தமிழ் பயிற்றுவிப்பது யார்? மீண்டும் அடுத்த ஆண்டு அவன் தந்தை ஒரிசாவிற்கு மாற்றலானால் அவன் அங்கு எந்த மொழி படிப்பான்?
குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டுபவர்களுக்கு இதெல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
( ஒரு முன்னாள் கேவி பள்ளி முதல்வரின் ஆதங்கம் இது.)

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...