பிரதமர் மோடியின் இன்றைய செயல் ஒட்டுமொத்த தமிழக பாஜகவினரையும் குதூகலப்படுத்தி உள்ளது.
காரின் பக்கவாட்டு பகுதியில் நின்றபடி கிட்டத்தட்ட பதினைந்து நிமிடங்கள் தன்னை வரவேற்க வந்த தொண்டர்களை நோக்கி கையசைத்தபடி, தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
தன்னை சந்தித்த அனைவருக்கும் தன் மரியாதையை தெரிவித்துக்கொண்டார்.
காந்தி கிராம பல்கலை கழக முதல்வர் அண்ணாமலை அருமையான விரிவான விழா ஏற்பாடுகளை செய்திருந்தார், அவருடைய உரைகள் சுருக்கமாக நிறைவாக இருந்தது. பிரதமர் மோடிக்கு கல்லூரியின் சார்பில் பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்றது சிறப்பு.
கவுரவ டாக்டர் பட்டம் பெற வந்த இசைஞானி இளையராஜா மற்றும் மிருதங்க வித்துவான் உமையாள்புரம் சிவராமன் இருவரிடமும் அன்யோன்யம் காண்பித்தார். மாணவர்களுக்கு தனது அன்பினை காட்ட மறக்கவில்லை.
தேசிய கீதம், தமிழ்தாய் வாழ்த்து, காந்தியின் கீர்த்தனைகளில் ஒன்று என பாடப்பட்டு விழா தொடங்கியது.
அதேபோல் பிரதமர் மோடியின் உரை முற்றிலும் ஆங்கிலத்தில் அனைவருக்கும் புரியும் விதமாகவும், இடையிடையே தமிழ் வார்த்தைகளையும் சேர்த்து அருமையாக, சுருக்கமாக இருந்தது.
தனது பேச்சில் காந்தியின் கனவுகள், காதியின் வளர்ச்சி, காந்தியின் லட்சியமாக கிராமங்களை நோக்கி செல்லும் மத்திய அரசின் திட்டங்கள், நகரங்களுக்கு இணையாக கிராமங்களுக்கு வழங்கப்படும் தொழில்நுட்ப வசதிகள், வேலுநாச்சியார், விவேகானந்தர் சிறப்புகள், மாணவர்களுக்கு அறிவுரை மற்றும் நம்பிக்கை என பலப்பல விஷயங்களை தெளிவாக பேசினார்.
இன்றைய நிகழ்ச்சியை காணும் போதே மனதில் இனம்புரியாத மகிழ்ச்சி.
அண்ணாமலை தொண்டர்கள் உடன் தொண்டராக
ஆளநர் அதே கம்பீரமாக
மத்திய இணை அமைச்சர் முருகன் அதிர்ஷ்டக்காரராக
தமிழக முதல்வர் ஸ்டாலின் சம்பிரதாய நெறிகளுக்காக கலந்து கொண்டனர்.
அருமையான எளிமையான மறக்க முடியாத விழா நிகழ்ச்சி.
தென்மாவட்ட பாஜக தொண்டர்கள் நிச்சயமாக மகிழ்ச்சி அடைந்திருப்பார்கள் என்றே நம்புகிறேன்.
No comments:
Post a Comment