ஒரு குடும்பம் என்றால் அதில் நிம்மதியும், மகிழ்ச்சியும் ஆரோக்கியமும் நிறைந்து இருக்க வேண்டும். இது நமக்கு நிறைவாக இருந்தாலே பொருளை சம்பாதித்து கொள்ளலாம். வீட்டில் நிம்மதி இல்லாமலும் உடல் ஆரோக்கியம் இல்லாமல் இருந்தாலும் எப்படி உங்களால் சம்பாதிக்க முடியும். இந்த மகிழ்ச்சியும் நிம்மதியும் ஒரு வீட்டில் நிரந்தரமாக இருக்க வேண்டும் என்றால் இந்த ஒரு சின்ன விஷயத்தை நீங்கள் செய்து வந்தாலே போதும். அது என்னவென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். வீட்டில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்றால் முதலில் கணவன் மனைவிக்குள் நல்ல அன்னோன்யம் இருக்க வேண்டும். அது மட்டும் இன்றி விட்டு குடுத்து வாழ வேண்டும் இது தான் ஒரு நல்ல இல்லறத்திற்கு அழகு. இந்த ஒன்று இருந்தால் மட்டுமே எந்த சூழ்நிலையிலும் அந்த குடும்பம் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும், நிம்மதியாகவும் நகரும். இது சீர் குலைந்து விட்டால் மிக மிக கடினம் தான். ஒரு சில குடும்பங்களில் ஒருவர் மீது ஒருவர் நல்ல அன்பாகவும், புரிதலோடும் தான் இருப்பார்கள். ஆனாலும் இருவருக்கும் ஏதாவது ஒரு வாக்குவாதம் சண்டை வந்து கொண்டே இருக்கும். எதனால் வருகிறது என்று அவர்களுக்கே கூட தெரியாது. இது சில நேரங்களில் வீட்டின் அதிர்வலைகள் சரியாக இல்லாமல் இருந்தாலும் வரும், நம் கிரக நிலைகள் சரியில்லாத நேரத்திலும் இது போல பிரச்சனைகள் நம் குடும்பத்தில் ஏற்படும். காரணம் எதுவாக இருந்தாலும் இதை சரி செய்ய ஒரு எளிய வழிமுறை தான் பச்சரிசி வெல்லம் பரிகாரம். இந்த பச்சரிசியை பாதியாக உடைத்து அதாவது ரவை போல் சின்ன சின்னதாக உடைத்து அதனுடன் வெல்லம் கலந்து வைத்துக் கொள்ளுங்கள். இதை உங்கள் வீட்டில் அருகில் ஏதாவது மரம் இருந்தால், அந்த மரத்தை சுற்றி இந்த வெல்லம் பச்சரிசி தூவி விட்டு விடுங்கள். அப்படி உங்கள் வீட்டின் அருகில் மரம் இல்லை என்றால் உங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் கோவிலின் சுற்றுச்சுவரின் ஓரம் அல்லது கோவில் உள்ளே கூட ஏதாவது ஒரு ஓரமாக இந்த அரிசி வெல்லத்தை தூவி விட்டு வந்து விடுங்கள். உங்கள் வீட்டிற்குள்ளேயும், வீட்டில் உள்ளே இருக்கும் மரத்திலும் வைக்க வேண்டாம். இந்த அதிர்வலைகளும், நேரமும் நீங்கள் இருக்கும் இடத்தில் இருக்கும் அந்த இடத்தில் இதை செய்யும் போது உங்களுக்கு பலன் இருக்காது.இதை தினமும் தொடர்ந்து செய்ய முடியவில்லை என்றாலும், வாரம் ஒரு நாள் கட்டாயமாக செய்து விடுங்கள். இதை பரிகாரத்தை செய்ய நேரம், நாள் எதையும் பார்க்க வேண்டாம். ஆனால் இதை செய்யும் போது கணவன் மனைவி யாராக இருந்தாலும் எங்கள் பிரச்சினைகள் தீர வேண்டும் என்று மனதார நினைக்க வேண்டும். எப்படி நினைத்து செய்ய செய்ய உங்களுடைய சிந்தனைகள், எண்ணங்கள் மாறி குடும்ப ஒற்றுமை ஏற்பட்டு நல்ல மகிழ்ச்சியான வாழ்வை வாழலாம்.
I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Subscribe to:
Post Comments (Atom)
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
இளநீரில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் வாதம் சம்பந்தமான நோய்களுக்கும் நல்ல மருந்தாக அமைகிறது. பொட்டாசியம் ம...
-
தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள்தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள் இதுவரை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ...
-
பர்சனாலிட்டி (ஆளுமை)யை வளர்த்துக் கொள்வது எப்படி? – பயனுள்ள குறிப்புக்கள் மனிதர்களின் தனித்தன்மையைப் புரிந்துகொண்டால் அவர்களைச் சமாளி...
No comments:
Post a Comment