Tuesday, May 31, 2011

பணக்கார பரத்தைகளும், சாராய வியாபாரிகளும் சமூகத்தில் பெறும் மரியாதை ………

கீழே சில படங்கள்  -
அவை  எடுக்கப்பட்டது -
ஐபிஎல் கிரிக்கெட் பந்தயத்தின்போது !
அவற்றில் முக்கிய இடம் பெற்றிருப்பவர்கள் -
இந்தி நடிகை -  தீபிகா படுகோனே
“தொழில்” அதிபர் -  விஜய் மல்லையா
மற்றும்  அவர்  மகன் !

- தலைப்பிற்கு வருவோம்.
ஒரு பக்கம்  -
1)  இரவு நேரங்களில் -  சாலை  ஓரங்களில்,
பஸ்  நிலையங்களில்,  ரெயில் நிலையங்களில் -
மலிவான  லாட்ஜுகளில்,
அரை இருட்டான  இடங்களில்
தலையில் வாசனைப் பூவுடன்,
அரைகுறையாக பவுடர் பூசிய முகத்துடன்
வயிற்றுப் பிழைப்பிற்காக
உடலை விற்கும்  வேறு வழியற்ற /
வக்கற்ற பெண்கள் ….

2)  ஊருக்கு ஒதுக்குப்புறமான இடங்களில்,
கிராமங்களுக்கு வெளியே – புதர் வெளிகளில்
பூச்சி பொட்டுகளுக்கு இடையில், வியர்க்க
விருவிருக்க  பயந்து பயந்து  சாராயம்   விற்கும்
கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் / விற்பவர்கள் -

இவர்கள்  சந்திக்கும் இன்னல்கள் எத்தனை எத்தனை?
இடைத்தரகர்களுக்கு  காசு,
பிடிக்கும் போலீஸ்காரர்களுக்கு  மாமூல்,
காரியம் ஆவதற்காக
பலர் இவர்களை நாடினாலும்,  
காரியம் முடிந்த பிறகு பார்க்கும் பார்வை  -   
சமுதாயத்தில் இவர்கள்
பெறும்  இடம்  …….அந்தஸ்து ..

இன்னொரு பக்கம் -
1) முதலில்  கூறிய  பெண்  செய்த அதே செயலை -
ஆளை மயக்கும் அலங்காரங்களுடன்,
சொக்க வைக்கும் வாசனை பூச்சுகள் துணையுடன்
பசையுள்ள  வாலிபர்களாகத் தேடி அலைந்து,
பசை போல் ஒட்டிக்கொள்ளும்  அணங்குகளும்-

ஆயிரக்கணக்கானோர்  கூடியுள்ள  ஒரு
விளையாட்டு நிகழ்ச்சியில்,
பல கோடி மக்கள் தொலைக்காட்சியில்
நேரடியாகப்  பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்  என்று
தெரிந்தும் கோடீஸ்வர தந்தையின் குலக்கொழுந்து
என்கிற  ஒரே காரணத்திற்காக ( அவனும்
அவனது அப்பனும் எவ்வளவு அசிங்கமாக  
இருந்தாலும் கூட ) வலிய  இணைந்து கட்டிப்பிடித்து
உதடுகள் இணைய  – பலர் பார்க்க -
முத்தம் கொடுக்கும்  பணக்கார  பரத்தைகளும் -

2) இரண்டாவதாக கூறிய -
அதே  சாராயம் காய்ச்சும் தொழிலை -
அரசியல்வாதிகளுக்கு லஞ்சமும்,  
அரசுக்கு  பணமும்  கொடுத்து
லைசென்ஸ்  என்று ஒன்றை  வாங்கி -
லட்சக்கணக்கில் பேரல் பேரல்களாக தொழில் முறையில்
உற்பத்தி  செய்து விற்கும்  சாராயத் தொழிற்சாலைகளின்
உரிமையாளர்களான  “தொழில் அதிபர்” களும் -

ஆக – இரண்டு  பகுதிகளிலும் கூறப்பட்டுள்ள  நபர்கள்
செய்வது  ஒரே தொழிலைத் தான்.
ஆனால் சமுதாயத்தில் அவர்கள்  பெறும்
செல்வாக்கு,  பணம்,  அந்தஸ்து ?
எவ்வளவு பெரிய வேறுபாடு ?

வயிற்றுப் பிழைப்பிற்காக, வேறு வழி தெரியாமல்
இந்த இழி தொழிலை செய்யும் -
முதல் பகுதியில்
கூறப்பட்டிருக்கும்  பெண்ணோ, வியாபாரியோ   -
நம் சமுதாயத்தால் எவ்வளவு கேவலமாக
நினைக்கப்படுகிறார்கள்; நடத்தப்படுகிறார்கள் ?

அதே தொழிலை  பகட்டாகவும்,
வெளிப்படையாகவும்
செய்யும் இரண்டாவது பகுதியில் கூறப்பட்டிருக்கும் -
நபர்கள்  சமுதாயத்தில் பெறும் செல்வாக்கு,
பணம், அந்தஸ்து என்னென்ன ?

பணத்திற்காக  ஆறு மாதங்களுக்கு  ஒரு பணக்காரனை மாற்றிக்கொண்டே இருக்கும் அந்த
பணக்கார பரத்தைக்கு பெயர் -
புகழ்பெற்ற மாடல்,
திரை வானில் ஜொலிக்கும் நட்சத்திரம் -
அழகு தாரகை !

அந்த சாராய வியாபாரிக்கு பெயர் -
“தொழில் அதிபர்”.
வயது  அறுபதைத் தொட்டாலும்,
காதில் வளையத்தோடும், குறுந்தாடியோடும்
மைனராகத் திரிபவர்  ஒரு பாராளுமன்ற உறுப்பினர் வேறு.
அவர் பாக்கெட்டில் பல எம் எல்  ஏக்கள்,  எம் பி  க்கள் !
(35  எம்  எல்  ஏ க்கள்   ஓட்டு போட்டு அவரை ஒரு
ராஜ்ய சபா  சுயேச்சை  உறுப்பினராக
தேந்தெடுத்திருக்கிறார்கள் ! )

சாராயத்தில்  விளைந்த பணத்தில்,
எம்.பி. பதவி, அரசாங்கத்தில் செல்வாக்கு,
விமான கம்பெனி, தொழிலதிபர் பட்டம்.
பற்றாக்குறைக்கு -
கடைசியாக ஐபிஎல்  சூதாட்டம் வேறு !

மனசாட்சி  சுடுகிறது -
யார்  காரணம்  இந்த இழி  நிலைக்கு ?
சற்றும் தகுதி அற்றவர்களுக்கு எப்படி
இத்தனை  பணம், பதவி, புகழ், செல்வாக்கு ?
நம் சமூகம்  ஏன்  போலிகளைத் தாங்குகிறது -
கொண்டாடுகிறது ?

புயலைக்கிளப்பிய தயாநிதி மாறன் மீதான டெஹெல்கா குற்றச்சாட்டு ஆவணங்கள் !

புயலைக்கிளப்பிய  தயாநிதி மாறன் மீதான
டெஹெல்கா குற்றச்சாட்டு ஆவணங்கள் !

கெட்டிக்காரன் புளுகு எட்டு  நாளைக்கு – என்று
கிராமப்புறங்களில் சொல்வார்கள்.

சிலரை பல நாள் ஏமாற்றலாம் -
பலரை  சில நாள் ஏமாற்றலாம் -
எல்லாரையும் எப்போதுமே ஏமாற்றிக்கொண்டே
இருக்க முடியாது  – என்று ஆப்ரகாம் லிங்கன்
யாரை நினைத்து சொன்னாரோ -
நம்ம ஊர்  ஆசாமிகளுக்கு அப்படியே பொருந்துகிறது!

2 ஜி விவகாரத்தில் இரண்டு பேர் (உள்ளே) போய்
விட்டார்கள்.  மூன்றாவது ஆசாமி எப்போது போவார் -

“Hello? Who will bell this cat”
என்ற கேள்வியுடன்  – நேற்று வெளியான
இந்த வார டெஹெல்கா ஆங்கில இதழ்  
வெளியிட்டுள்ள  ஆவணங்கள்  டெல்லியில்
புயலைக் கிளப்பி உள்ளன.

2004 முதல்  2006  வரை இரண்டு ஆண்டு
காலத்திற்கு – தனக்கு மசியாத  டிஷ்னெட்/
ஏர்செல்  நிறுவனத்திற்கு 2ஜி லைசென்ஸ்
கொடுக்காமல்  இழுத்தடித்தது –  

அந்த நிறுவனத்தில், தனக்கு இணக்கமான
தலைமை ஏற்பட்டு,  சன் டிடிஎச் நிறுவனத்திற்கு
சுமார் 700  கோடி அளவிற்கு  தான் சொல்லும்
விதத்தில் கொடுக்க அவர்கள் ஒப்புக்
கொண்டவுடன்  14 தொலை தொடர்பு
மாவட்டங்களுக்கு  உடனடியாக
லைசென்ஸ்  கொடுத்தது.

(கிட்டத்தட்ட நமக்கு அறிமுகமான  
அதே பார்முலா தான் -
வருடத்திற்கு 64 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கிய
சன் dth  நிறுவனத்தின் 20 % பங்குகளை  வாங்க
700 கோடி ரூபாய்  கொடுக்க ஒப்புக்கொண்டார்களாம்  !)

அமைச்சர்கள்  குழுவின் பரிசீலனைக்கு
(க்ரூப்  ஆப் மினிஸ்டர்ஸ் ) இது போகாமல்
பிரதமரிடம்  (நம்ம பிரதமர்  தானே ! )
பேசி ஏற்பாடு செய்து கொண்டது.

சன் dth    நிறுவனத்திற்கு வெளிநாட்டு
முதலீடு ( FDI )  வருகின்ற  விதத்தில்,   அதிகபட்ச
வெளிநாட்டு முதலீடு  அளவை   74 %  அளவிற்கு
உயர்த்திட  சட்டவிதிகளைத் தளர்த்தியது !

- இப்படி இன்னும்  சில விஷயங்களை
பல ஆவணங்களின் துணையுடன்  வெளியிட்டுள்ளது டெஹெல்கா.

சிபி ஐ  யின்  கவனத்திற்கு  இவை  ஏற்கெனவே
எடுத்துச்செல்லப்பட்டு விட்டாலும் -  சிபி ஐ எத்தகைய
நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பது மர்மமாகவே
இருக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளது டெஹல்கா.
காங்கிரசின் செல்லப்பிள்ளை என்பதாலும்,
“அன்னை”க்கு மிகவும் வேண்டப்பட்டவர் என்பதாலும்
இந்த உணர்வு !

ஆனால்  இப்போது டெஹெல்கா பரபரப்பாக
ஆவணங்களை வெளியிட்டுள்ளது – இந்த விஷயத்தில்
ஒருவித நெருக்கடியை உண்டுபண்ணி இருக்கிறது.
நேற்றிரவு,  தயாநிதி   பிரதமரை  தனியே
சந்தித்து  நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தாராம் !

துணைக்கு  இவர்  வந்தால் “உள்ளே”
இருப்பவர்களுக்கு  மகிழ்ச்சியாகத்தான்  இருக்கும் அல்லவா ?

2ஜி ஊழல்: ம.பு.க. பார்வையில் தயாநிதி, சன் டிவி, மாக்சிஸ்

மத்திய தொலைத் தொடர்பு அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தபோது ஏர்செல் நிறுவனத்திற்கு முறைகேடாக 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறதா என்பதை மத்திய புலனாய்வுக் கழகம் ஆராய்ந்து வருகிறது.

இந்த புலனாய்வின் அடிப்படையில் வரும் ஜூலை மாதத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து தனது விசாரணையை ம.பு.க. தொடங்கும் என்று கூறப்படுகிறது.


டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய புலனாய்வுக் கழகத்தின் (சிபிஐ) பேச்சாளர் தாரிணி மிஸ்ரா, “2001 முதல் 2007ஆம் ஆண்டு வரை 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டது தொடர்பான விவரங்களை ம.பு.க. தீவிரமாக ஆராய்ந்து வருகிறது” என்று கூறியுள்ளார்.

எனவே, அப்போது தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்த தயாநிதி மாறனிடமும் விசாரணை நடத்தப்படும் என்பதை ம.பு.க. மறுக்கவில்லை. இதற்குக் காரணம், தயாநிதி மாறன் தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்தபோது ஏர்செல் நிறுவனத்திற்கு 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி, ஏர்செல் நிறுவனத்தை பின்னாளில் வாங்கிய மலேசியாவின் மாக்சிஸ் நிறுவனத்திற்கும், சன் தொலைக்காட்சிக்கும் இடையே நடந்த பணப் பரிமாற்றங்களை ம.பு.க. பரிசீலித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு தொடர்பாக 10 தொலைத் தொடர்பு நிறுவனங்களின் முதன்மை செயல் அலுவலர்கள் உட்பட 63 பேர் தங்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய புலனாய்வுக் கழகம் தெரிவித்துள்ளது.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக புலனாய்வு செய்துவரும் தங்கள் அமைப்பு, இதுவரை மேற்கொண்டுள்ள விசாரணை தொடர்பான விவர அறிக்கையை இவ்வழக்கை விசாரித்துவரும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, ஏ.கே.கங்கூலி ஆகியோர் கொண்ட அமர்விடம் மத்திய புலனாய்வுக் கழகத்தின் வழக்குரைஞர் இன்று தாக்கல் செய்தார்.

2
ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு குறித்து விசாரிக்க தனி நீதிமன்றத்தை அமைக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளதாகக் கூறிய மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞர் இந்திரா ஜெய்சிங், அது தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும், அதனை அவர் பரிசீலித்து வருவதாகவும் கூறியுள்ளார்.

சனியன் கருநாய் ஒழிந்தது



தி.மு.கவின் வரலாற்றில் ஏன் தமிழக வரலாற்றில் என்றுமில்லாத படுதோல்வியை தமிழகத்தின் ஆளும் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் சந்தித்துள்ளது. தமிழக ஊடகங்கள் மற்றும் அமைப்புக்களின் கருத்துக் கணிப்புக்களை எல்லாம் பொய்யாக்கிபடுதோல்வியை கருணாநிதி சந்தித்துள்ளார். கனிமொழி ஊழல் கைது, ஈழத் தமிழர் படுகொலை தொடர்பான ஐ.நா நிபுணர் குழு அறிக்கை, கிருட்ணமூரத்தியின் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான தீக்குளிப்பு போன்றன தேர்தலுக்கு முன்பே நடந்திருந்தால் தி.மு.க இன்னும் பல ஆசனங்களை இழந்திருக்கும்.

ஈழத் தமிழர் படுகொலை தொடர்பான ஐ.நா அறிக்கை தேர்தலுக்கு பின் வெளியிடுவதற்கு விஜய் நம்பியார் ஊடாக முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு அதில்வெற்றியடைந்திருந்தபோதும் தி.மு.கவும் அதன் கூட்டணியான கொங்கிரசும் படுதோல்வியையே சந்தித்துள்ளன. இதேவேளை, தி.மு.கவோ, அ.தி.மு.கவோ ஆட்சியிழக்கும் எல்லா தடவைகளிலுமே எதிர்க்கட்சியாக உருவெடுத்து இருந்திருக்கிறது. கடைசியாக நடந்த 2006 சட்டசபைத் தேர்தலில் முதல்வர் ஜெயலலிதாவின் அ.தி.மு.க ஆட்சியிழந்தாலும் 61 தொகுதிகளை வென்று பலமான எதிர்க்கட்சியாகத் திகழ்ந்தது. ஆனால், இந்தத் தடவை தோற்று ஆட்சியிழந்த தி.மு.க 25ற்கும் குறைவான இடங்களைப் பெற்று எதிர்க்கட்சி என்ற நிலையையும் இழந்துவிட்டது.

தமிழக ஊடகங்கள் பலதினதும் கணிப்பு இம்முறை அ.தி.மு.கவின் கைதான் ஓங்கும் என்று அடித்துக்கூறியிருந்தன. அத்தோடு, கருணாநிதியின் குடும்ப ஆட்சி அகற்றப்படவேண்டும் என்று பல ஊடகங்களும் இம்முறை வெளிப்படையாகவே கருத்துக்களை எழுதிவந்ததை அவதானிக்க முடிந்தது.

ஈழத் தமிழர்கள் மீது ஒரு பாரிய இனப்படுகொலையை சிறீலங்கா புரிந்துகொண்
டிருந்தபோது அதற்கு துணைநின்ற இந்தியாவின் கொங்கிரஸ் கட்சியுடன் இணைந்திருந்த தி.மு.க, இறுதி அழிவு நிகழும் இறுதிக் கணம்வரைக்கும் அதனைத் தடுத்து நிறுத்த முயலவில்லை என்பது மட்டுமல்ல, தமிழகத்தில் பொங்கியெழுந்த மக்களின் எழுச்சியையும் தனது சாணக்கியத் தனத்தால் கருணாநிதி தடுத்து நிறுத்தினார். ஈழத் தமிழ் மக்களுக்கு செய்த இந்த கொடுமைக்கு, தற்போது வரலாற்றில் என்றும் சந்திக்காத அவமானத்தோடு கொங்கிரசும், தி.மு.கவும் எதிர்க்கட்சி என்ற நிலையைக்கூடப் பெறமுடியதவாறு தமிழக மக்களால் தூக்கியெறியப்பட்டுள்ளனர்.

தமிழகத்தின் ஆட்சி என்பது ஒவ்வொரு தேர்தலிலும் மாறிக்கொண்டே இருக்கும் ஒன்று. கடந்த 30 வருடங்களாக அங்கு ஆட்சி என்பது மாறி மாறியே ஏற்பட்டு வருகின்றது. ஐந்து வருடங்கள் ஆட்சி செய்து முடித்திருக்கும்போது மக்களுக்கு அந்த ஆட்சிமீது அகோர வெறுப்பு ஏற்படும் வகையில் ஆளும் கட்சியின் அட்டகாசங்கள் அமைந்திருக்கும். இதனால், ஆளும் கட்சியைத் தோற்கடிக்க வென்றே பிரதான எதிர்க்கட்சிக்கு மக்கள் வாக்களிப்பர். அதே பாணியில் இம்முறை தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகளும் அமைந்துள்ளன. ஒருதடவைதி.மு.கவென்றால் அடுத்த தடவை அ.தி.மு.க தான் என்பது நியதி. இப்போது ஜெயலலிதா மூன்றாவது தடவையாக முதல்வராகியுள்ளார். கூட்டணியாகப் போட்டியிட்டாலும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பது குறிப்பிடத்தக்கது.

கருணாநிதியின் படுதோல்விக்கு காரணம்ஈழத் தமிழ் மக்களின் படுகொலைக்கு துணை நின்றது முக்கிய காரணமாக கூறப்படுகின்ற போதிலும் ஸ்பெக்ட்ரம் ஊழல் தி.மு.கவை மோசமாகத் தாக்கியுள்ளது. அத்துடன் கருணாநிதியின் முழுமையான குடும்ப ஆதிக்கமும் தி.மு.கவின் மக்கள் விரோதப் போக்கும் அந்தக் கட்சியை படுகுழியில் தள்ளியுள்ளது.

இதனால் மலைகள் என்று சொல்லப்பட்ட தி.மு.கவின் பிரமுகர்களில்
விரல் விட்டு எண்ணக்கூடியவர்களே வென்றுள்ளனர்.

தேர்தலுக்கு முன்பாக, குறிப்பாக ஆனந்தவிகடன் ‘மறக்க முடியுமா?’ என்ற தலையங்கத்தில் கருணாநிதியின் ஊழல்களையும், கொங்கிரசுடன் கூட்டுச் சேர்ந்து ஈழத்தமிழ் மக்களின் அழிவிற்கான காரணங்களையும் தொடர்ச்சியாக எழுதி தனது எதிர்ப்பை வெளியிட்டுவந்தது. இதேவேளை, தினமணி கலைஞரின் சொத்து விபரங்களை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், கடந்த மாதம் நடந்த தமிழக தேர்தலில் வரலாற்றல் என்றும் இல்
லாத அளவுக்கு மிகப் பெரிய அளவில் வாக்குப் பதிவாகியுள்ளது. சுமார் 78 வீத
மான மக்கள் தமிழகத்தில் வாக்களித்தனர். மிக அதிகளவான வாக்குப் பதிவு என்பது ஆட்சிமாற்றத்தையே குறிப்பதாக அவதானிகள் குறிப்பிட்டும் இருந்தனர். இதேவேளை, கருணாநிதியுடன் கூட்டுச் சேர்ந்து போட்டியிட்ட கொங்கிரஸ் படுதோல்வியைசந்தித்துள்ளது. 63 இடங்களை கருணாநிதியிடம் இருந்து பறித்துப்பிடுங்கிப்போட்டியிட்ட கொங்கிரஸ் 5 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது.

அதிலும் கொங்கிரஸ் கட்சியின் தலைவர் தங்கபாலுவே தனது மைலாப்பூர் தொகுதியில் தோற்றுப்போயுள்ளார். மே 17 இயக்கத்தினர், சீமானின் தீவிர பிரச்சாரம் என்பன கொங்கிரசின் கனவுக் கோட்டையை அதாவது தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்ற சிந்தனையை தவிடுபோடியாக்கியுள்ளது. அத்துடன், விடுதலைச் சிறுத்தைகளினால் ஒரு இடத்தைக்கூடப் பிடிக்கமுடியவில்லை.

பா.ம.க 30 இடங்களில் போட்டியிட்டு மூன்று இடங்களை மட்டும் பிடித்துள்ளது. இதேவேளை, இந்தத் தேர்தல் தோல்வி தி.மு.க, கொங்கிரஸ், விடுதலைச்சிறுத்தைகள் என தி.மு.க அணிக் கட்சிகளுக்கு பேரதிர்ச்சயைக் கொடுத்துள்ளன. மக்கள் ஓய்வைக் கொடுத்துள்ளார்கள் என்று கருணாநிதி புலம்பினாலும், பா.ம.கவின் நிலை மற்றைய எல்லாக் கட்சிகளின் நிலையை விடவும் பரிதாபகரமாகியுள்ளதாக கருதப்படுகின்றது.

ஏற்கனவே பா.ம.க தொண்டர்கள் தே.தி.மு.கவில் ஐக்கியமாகிவந்த நிலையில் தே.தி.மு.க பாரிய சக்தியாக உருவெடுத்திருப்பது பா.ம.கவை கூண்டோடு காலியாக்கிவிடவும்கூடும் என்று அஞ்சப்படகின்றது.

ஜெயலலிதா ஆட்சிஇதேவேளை 147 ஆசனங்களுடன் தமிழக முதலமைச்சராக 3வது முறையாக பதவியேற்றுக் கொண்டார் ஜெயலலிதா. ஜெயலலிதாவுக்கு ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு உறுதிமொழியை தமிழில் எடுத்துக் கொண்டார் ஜெயலலிதா. அவருடன் 33 அமைச்சர்களும் பொறுப்பேற்றனர். அதில் 24 பேர் புதுமுகங்கள். சென்ற இரு தடவைகள் ஆட்சியில் அமர்ந்தபோது கூட்டணியின் ஆதரவு (கொங்கிரஸ்) ஜெயலலிதாவிற்கு தேவைப்பட்டது. ஆனால் இம்முறை கொங்கிரஸ் உதவியின்றி முதல்வராகியுள்ளார். ஆனால், தே.தி.மு.க உதவியின்றி அவரால்வெல்லமுடியாது போயிருக்கும். கொம்யூனிஸ்ட்களும் முழு ஒத்தாசை வழங்கினர் என்பதும் கவனிக்கத்தக்கது. அ.தி.மு.க அணி வென்றாலும், அ.தி.மு.க தனித்து வென்று விடக்கூடாது எனக் கருதிய நடுநிலைவாதிகளும் விஜயகாந்த், கொம்யூனிஸ்ட் உள்ளிட்ட ஜெயலலிதாவின் நேசக்கட்சிகளும்கூட மனமுடைந்துவிட்டன. தனித்து பெரும்பான்மை கிடைத்தால் ஜெ என்ன ஆட்டம் போடுவார் என்பது சகலருக்கும் தெரிந்ததே.

கடிவாளம் விஜயகாந்த் கையிலோ, கொம்யூனிஸ்ட் கையிலோ இருந்தால் ஜெயலலிதாவை கட்டுப்பாட்டில் வைத்து தமிழகம் நல்லாட்சிபெற வழி பிறந்திருக்கும். கலைஞர்போய்‘ஜெ`வந்தது இருமலை விட்டு தும்மலைப் பிடித்த கதைதான் என்று சினக்கத் தொடங்கியுள்ளனர். அத்துடன், கலைஞர் குடும்பத்தை ஒழிப்பதற்காக ஜெயலலிதா கொங்கிரசுடன் கூட்டுச்சேர்ந்துவிடுவாரோ என்றும் அஞ்சுகின்றனர்.


விஜயகாந்தின் பாய்ச்சல்!

விஜயகாந்தைப் பொறுத்தவரை அவர் புதிய வரலாற்றை எழுதியுள்ளார் என்பது உண்மைதான். கட்சியை உருவாக்கி போட்டியிட்ட இரண்டாவது தடவையுடன் அவர் எதிர்க்கட்சியின் தலைவராகியுள்ளார். கடந்த தடவை தனி ஒருவராக சட்ட சபைக்குள் நுழைந்தவர், இம்முறை 29 பேருடன் எதிர்க்கட்சியின் தலைவராக நுழைந்துள்ளார். தமிழக அரசியலில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்குப் பின் முத்திரை பதித்த முதல் நடிகர் அரசியல்வாதி இவர் என்று புகழாரம் சூட்டப்படுகின்றது. விஜயகாந்த் கட்சியானது பா.ம.க, கொங்கிரஸ் என இரு கட்சிகளின் இடத்தை ஒருங்கே கைப்பற்றிக் கொண்டுவிட்டது எனலாம். கடந்த தேர்தலில் ஒரு இடத்தில் மட்டுமே வென்றது தேமுதிக. இந்த முறையும் அது தனித்துப் போட்டியிடிருந்தால் அதிமுக வாக்குகளைப் பிரித்திருக்கும். வழக்கம் போல விஜயகாந்த் மட்டுமே வென்றிருப்பார், இதனால் திமுக மீண்டும் ஆட்சியைப் பிடித்திருக்கும் அல்லது எதிர்க்கட்சியாகக்கூட வந்திருக்கும். இதைத் தடுத்து நிறுத்தியதே ஜெயலலிதாவின் புத்திசாலித்தனம் என்கின்றனர் ஆய்வாளர்கள். 41 தொகுதிகளில் போட்டியிட்ட தேமுதிக 29 தொகுதிகளில் வென்றிருப்பது அக்கட்சிக்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது. தொடர்ந்து தனித்துப் போட்டியிட்டு வந்திருந்தால் கட்சி ஒரு கட்டத்தில் காணாமல் போயிருக்கும். ஆனால் அதிமுகவுடன் சேர்ந்ததால் பெரும் அங்கீகாரம் கிடைத்திருப்பதாக தேமுதிகவினர் கருதுகிறார்கள்.

கீரியும் பாம்புமாக இருந்த தி.மு.க, அ.தி.மு.க ஆட்சி போய் இப்போது ஒரே கூட்டணியில் போட்டியிட்ட அ.தி.மு.க - தே.மு.தி.மு.க ஆளும்கட்சியும் எதிர்க்கட்சியுமாகியுள்ளன. இவர்கள் நல்லதொரு ஆட்சியை தமிழகத்திற்கு வழங்கி, ஈழத்த தமிழர்களின் விடுதலைக்காகவும் ஒன்று சேர்ந்துகுரல் கொடுப்பார்களா என்பதை பெர்றுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Monday, May 30, 2011

தி.மு.க., தோற்றது யாரால்...

நடந்து முடிந்த தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க., அலை வீச வில்லை.

தி.மு.க., வின் அதிருப்தியாளர்கள் அ.தி.மு.க., விற்கு வாக்களித்துள்ளனர்.

புள்ளிவிவரங்கள் படி அ.தி.மு.க.,கூட்டணி இத்தேர்தலில் பெற்ற வாக்குகள் 1,90,84,139

தி.மு.க., கூட்டணி பெற்ற வாக்குகள் 1,45,29,501 வாக்குகள்.

வாக்கு வித்தியாசம் சுமார் 45,00,000.

இந்த வித்தியாசமே அ.தி.மு/.க., கூட்டணி 203 தொகுதிகளில் வெற்றியும்..தி.மு.க., கூட்டணிக்கு 172 தொகுதிகளில் தோல்வியையும் தந்துள்ளது.

இந்த 45,00,000 வாக்காளர்கள் யார்...

எந்த ஒரு கட்சியையும் சேராத பொதுவானவர்கள்..ஐந்தாண்டுகள் ஆட்சியை மனதில் கொண்டு, பொறுமையுடன் இருந்து..தேர்தலில் மாற்றத்தைக் கொண்டு வருபவர்கள்.

இம்முறை..ஊழல்,குடும்ப ஆட்சியைத் தவிர்த்து..

பலருக்கு காங்கிரஸ் கட்சியின் மீது கோபம் இருந்தது..இலங்கை தமிழர்கள் பிரச்னையில்...அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டதைக் கண்டு வாளாயிருந்த கட்சியின் மீது கோபம்.

தமிழக மீனவர்கள் கொல்லப்பட்ட போது..வாளாயிருந்த கட்சியின் மீது கோபம்..

அதனால் தான் 63 தொகுதியில் போட்டியிட்ட காங்கிரசால் 34லட்சத்திற்கு சற்று அதிகமான வாக்குகளே பெற முடிந்தது.

இந்நிலையில்..ஆட்சி மாற்றத்தைத் தீர்மானித்தவர்கள்...எக்கட்சியும் சாரா பொதுமக்கள்..

இவர்கள்தான் ஒவ்வொருமுறையும் மாற்றத்தைக் கொண்டு வருபவர்கள்.

இங்கு வேறு ஒன்றையும் குறிப்பிட விரும்புகிறேன்..

தி.மு.க., போட்டியிட்ட தொகுதிகளில் சராசரியாக 42 விழுக்காடு வாக்குகள் வாங்கியுள்ளது.

ஆனால்..தி.மு.க., கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் 35.6 விழுக்காடே வாக்குகள் வாங்கியுள்ளது.

ஏன் அப்படி?

தி.மு.க., வைக் கூட மன்னிக்கத் தயாராய் இருந்த மக்கள்..காங்கிரசை மன்னிக்க விரும்பவில்லை.தண்டிக்கவே விரும்பியுள்ளனர்.


மூக்கறுபட்ட காங்கிரஸ்...

தமிழ்நாட்டில்...நாங்கள் எந்த திராவிடக்கட்சியுடன் கூட்டணி வைக்கிறோமோ அவர்களே ஆட்சியைப் பிடிப்பார்கள் என்று..தனிப்பட்டமுறையில் தன்னால் ஏதும் முடியாவிடினும் , இப்படிச் சொல்வதில் மட்டும்..அனைத்து தமிழக கோஷ்டி காங்கிரஸ்காரர்களிடமும் ஒற்றுமை இருந்தது..

பலவேளைகளில் அது உண்மையோ..என சில அரசியல் தலைவர்களும் எண்ணியதுண்டு..

ஆனால்..இந்த முறை..

அந்த காங்கிரஸுடன் கூட்டணி வைத்ததாலேயே தி.மு.க., மாபெரும் தோல்வியைச் சந்தித்தது.

தி.மு.க., குடும்பக் கட்சியாகிவிட்டதும்..இலவசமாக அனைவருக்கும் டீ.வி.கொடுத்து..பாமரனும் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலை அறியவைத்ததும்...தி.மு.க., வின் ஹிமாலயத் தோல்விக்குக் காரணமாகிவிட்டன.

இப்போதும்..தில்லித் தலைவர்கள்..தோல்விக்கு ஊழல் மட்டுமே காரணமல்ல என்கின்றனர்..

எது எப்படியோ...தமிழகத்தில்..தி.முக., அ.தி.முக., என இரு கட்சிகளைவிட்டால் மாற்று இல்லை.

அதன்படி அ.தி.மு.க., ஆட்சியைப் பிடித்துள்ளது.

முந்தைய ஆட்சிக் காலத்தில் தான் செய்த தவறுகளை உணர்ந்து...

தி.மு.க., விடம் மக்கள் என்ன குறையை உணர்ந்தார்கள் என அறிந்து..

தவிர்க்க வேண்டியவற்றைத் தவிர்த்து..

தங்களைத் தேர்ந்தெடுத்த மக்களை ஏமாற்றாது..நல்லாட்சியை அ.தி.மு.க., இம்முறையேனும் தரும் என நம்புவோம்.

நம்பிக்கைதானே வாழ்க்கை.

ரூ.200 கோடி 2ஜி லஞ்சப் பணமே: ம.பு.க.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டை முறைகேடாகப் பெற்ற ஸ்வான் டெலகாம் நிறுவனத்தின் உரிமையாளர் டி.பி.ரியால்டியிடமிருந்து கலைஞர் தொலைக்காட்சியின் கணக்கில் சேர்க்கப்பட்ட ரூ.200 கோடி லஞ்சப் பணமே என்று ம.பு.க. வழக்குரைஞர் வாதிட்டார்.


2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழலில் கூட்டுச் சதியாளராக குற்றம் சாற்றப்பட்டுள்ள தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழிக்கு பிணைய விடுதலை அளிப்பதை எதிர்த்து மத்திய புலனாய்வுக் கழக வழக்குரைஞர் யு.யு.லலித் இவ்வாறு கூறியுள்ளார்.

கனிமொழிக்கும், கலைஞர் தொலைக்காட்சியின் மேலான் இயக்குநர் சரத் குமார் ஆகியோர் தங்களுக்கு ம.பு.க. சிறப்பு நீதிமன்றம் பிணைய விடுதலை மறுத்துவிட்டதை எதிர்த்து செய்த மேல் முறையீட்டு மனு மீது டெல்லி உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடந்தது.

உயர் நீதிமன்ற நீதிபதி அஜித் பாரியோக் முன்னிலையில் நடைபெற்ற விசாரணையில் கனிமொழியின் சார்பாக வாதிட்ட மூத்த வழக்குரைஞர் அல்டாஃப் அகமது, டி.பி.ரியால்டி நிறுவனத்திடமிருந்து கலைஞர் தொலைக்காட்சிக்கு வந்த ரூ.200 கோடி பணம் கடன்தானே தவிர, அதில் ஐயத்திற்கு இடமேதுமில்லை என்று கூறினார்.

“இவ்வழக்குத் தொடர்பான எல்லா ஆவணங்களும் ம.பு.க.விடம் உள்ள நிலையில், எதற்காக எங்களை சிறைபடுத்தி வைக்க வேண்டும்” என்று அல்டாஃப் அகமது வினவினார்.

இதனை எதிர்த்து வாதிட்ட அரசு சிறப்பு பொது வழக்குரைஞர் யு.யு.லலித், லஞ்சமாகப் பெற்ற ரூ.200 கோடியை கடனாகப் பெற்றதாக ஒரு புகைத் திரையை உருவாக்குகின்றனர் என்று கூறினார்.

“இந்த ரூ.200 கோடி பணப் பரிவர்த்தனையில் இரு நிறுவனங்களும் எந்த ஒரு பத்திரத்தையும் உருவாக்கிக்கொள்ளவில்லை. எனவே இது ஊழல் பண பரிவர்த்தனேயே” என்று லலித் கூறினார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அஜித் பாரியோக், தீர்ப்பை தள்ளிவைப்பதாக அறிவித்தார்.


கனிமொழி, சரத் குமார் பிணைய விடுதலை: தீர்ப்பு தள்ளிவைப்பு 

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் வழக்கில் குற்றம் சாற்றப்பட்டு சிறைப்படுத்தப்பட்டுள்ள தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, கலைஞர் தொலைக்காட்சி மேலாண் இயக்குனர் சரத் குமார் ஆகியோரின் பிணைய விடுதலை மனு மீதான தீர்ப்பை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டத்தில் நடந்த முறைகேட்டில் கூட்டுச் சதியாளராக மத்திய புலனாய்வுக் கழகத்தால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையில் சேர்க்கப்பட்டுள்ள கனிமொழிக்கும், சரத் குமாருக்கும் டெல்லி ம.பு.க. சிறப்பு நீதிமன்றம் பிணைய விடுதலை மறுத்துவிட்டதையடுத்து, டெல்லி உயர் நீதிமன்றத்தில் இவர்கள் இருவர் சார்பிலும் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த மேல் முறையீட்டிற்கு ம.பு.க. சார்பில் இன்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கு விசாரணையில் இதுவரை எந்த அளவிற்கு புலனாய்வு செய்யப்பட்டுள்ளது என்பதையும் விளக்கும் அறிக்கையை ம.பு.க. தாக்கல் செய்தது.

இதனை ஆராய்ந்த நீதிபதி பாரியோக், பிணைய விடுதலை மனு மீதான தீர்ப்பை தள்ளி வைப்பதாக அறிவித்துள்ளார்.

தி.மு.க.,வுக்கு மாற்றாக ஏற்பாடுகள்: எதற்கும் எப்போதும் காங்., தயாராகிறது

தன்னை கைவிட்டு விட்ட கோபத்திலும், ஆற்றாமையிலும் தி.மு.க., இருக்கும் சூழ்நிலையில், அந்த கட்சியை சமாதானப்படுத்தும் பணியை ஓரளவுக்கு மேல் தொடர காங்கிரஸ் விரும்பவில்லை. காரணம், எந்த சூழ்நிலையிலும் தி.மு.க., தங்களை விட்டுப் போய் விடாது என, தீவிரமாக நம்பிக் கொண்டிருந்தாலும் கூட, ஒருவேளை உறவை முறித்து கொண்டால், அதை எப்படி சமாளிப்பது என்பதற்கான நடவடிக்கைகளில் காங்கிரஸ் தீவிரமாக உள்ளது. ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில், தாங்கள் முற்றிலும் வஞ்சிக்கப்பட்டதாக தி.மு.க., கருதுகிறது.

 

குறிப்பாக தன் குடும்பத்தினரையாவது காப்பாற்றுவர் என பெரிதும் எதிர்பார்த்திருந்த கருணாநிதி, தன் மகள் கனிமொழி கைது செய்யப்பட்டவுடன், காங்கிரஸ் மீது பெரிதும் நம்பிக்கை இழந்து விட்டார். இந்த ஊழல் விவகாரத்தில், ஏதாவது ஒருவிதத்தில், மறைமுக உதவிகளையாவது, ஆட்சி பொறுப்பில் இருக்கும் காங்கிரஸ் செய்து, தங்களுக்கு நேரும் பாதிப்பின் அளவையாவது குறைக்கும் என, கடைசி வரை தி.மு.க., நம்பிக் கொண்டிருந்தது. சுப்ரீம் கோர்ட்டை காரணம் காட்டி, கடைசியில் தங்களை கைவிட்டுவிட்டதால், காங்கிரஸ் மீது தி.மு.க., கடும் கோபத்தில் உள்ளது. இந்த கோபத்தை வெளிப்படையாக காட்ட முடியாத சூழ்நிலையும் தி.மு.க.,வுக்கு உள்ளது. சட்டசபை தேர்தலில் எதிர்பாராத அளவுக்கு தோல்வியடைந்ததை இன்னமும் ஜீரணிக்க முடியாத நிலையில், அந்த கட்சி உள்ளது.

அதேசமயம் தி.மு.க., தோற்க போகிறது என பலவாறு உளவுத் தகவல்கள் வந்து கொண்டே இருந்தாலும் கூட, தோற்கும் குதிரை மீதே பணம் கட்டலாம் என்ற அளவுக்கு காங்கிரஸ் முனைந்ததற்கும் காரணங்கள் இருந்தன.தி.மு.க., தோற்றால் முன்பை விட தீவிரமாக தங்களுக்கு கட்டுப்பட்டு நடக்கும் என காங்கிரஸ் நம்பியது. அதேபோல எவ்வளவு இடர்பாடுகள் இருந்தாலுமே கூட, நம்பிக்கையான கூட்டணி கட்சியாக திகழ்கிறோம் என மக்கள் மத்தியிலும், தி.மு.க.,வினர் மத்தியிலும் ஒரு கருத்தை ஏற்படுத்தலாம் என்றும் காங்கிரஸ் நம்பியது. அந்த நம்பிக்கைகள் எதுவுமே வீண் போகவில்லை. தேர்தல் தோல்விக்கு பிறகு தி.மு.க.,வின் நிலைமை படுதிண்டாட்டமாக உள்ளது. காங்கிரசின் தயவின்றி அணுவளவும் அசைய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதை, காங்கிரஸ் உள்ளுக்குள் ரசிக்கவே செய்கிறது. இதைத்தான் எதிர்பார்த்தோம் என்ற ரீதியில் அந்த கட்சி உள்ளது. மிகவும் வருத்தமுடன் தன் மகளை பார்க்க வந்த கருணாநிதியை சந்தித்த குலாம்நபி ஆசாத் போன்றவர்கள், சோனியாவை சந்திக்க வாருங்கள் என்று கூட அழைத்து பார்த்ததாக கூறப்படுகிறது.

இருப்பினும் தி.மு.க.,வை ஒரு அளவுக்கு மேல் ஆட்டிப்படைக்க முடியாது என்ற நிலை வந்தால், அப்போது என்ன செய்வது என்ற கேள்விக்கு, பல வகைகளிலும் முன்னேற்பாடுகளை செய்திட காங்கிரஸ் தீவிரமாக முயன்று வருகிறது. மத்தியில் தி.மு.க.,வின் 18க்கு மாற்று என்ன என்பதில், காங்கிரஸ் மிகுந்த தெளிவாகவே இருக்க விரும்புகிறது. பார்லிமென்டின் மொத்தம் 545 இடங்களில், பெரும்பான்மைக்கு 273 இடங்கள் தேவை. காங்கிரசிடம் 208 தான் உள்ளது. மம்தா மட்டுமே இப்போது கூட்டணியில் பிரச்னை இல்லாதவராக உள்ளார். தி.மு.க.,வும், தேசியவாத காங்கிரசும் காங்கிரசுக்கு நம்பிக்கையற்ற தோழர்களாகவே ஆகிவிட்டனர்.

கனிமொழி கைதானது தி.மு.க.,வை கோபத்தில் உள்ளாக்கியது என்றால், மகாராஷ்டிராவில் சரத் பவாருடனும் சுமுகமான சூழல் காங்கிரசுக்கு இல்லை. சந்திரபாபு நாயுடுவும், சரத் பவாரும் சமீபத்தில் சந்தித்து பேசியதை, காங்கிரஸ் சாதாரணமாக எடுத்துக் கொள்ள தயார் இல்லை. இச்சூழ்நிலையில், சமாஜ்வாடி கட்சியின் 22 இடங்கள் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் 21 இடங்களை, காங்கிரஸ் எப்போதுமே ரிசர்வ் செய்து வைத்துள்ளது. இதை பயன்படுத்துவதா, வேண்டாமா என்ற குழப்பமும் காங்கிரசுக்கு உள்ளது. காரணம் உ.பி., மாநில அரசியல் தான் ராகுலின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் என அந்த கட்சி நம்புகிறது.

ராகுல் தலைமையேற்று நடத்திய பல தேர்தல்களும் தோல்வியில் முடிந்துவிட்டதையடுத்து, அவரது கடைசி நம்பிக்கை உ.பி., மட்டுமே. அங்கு அடுத்தாண்டு நடக்கும் சட்டசபைத் தேர்தல் ராகுலின் எதிர்காலத்தை நிர்ணயிக்க போகிறது. பிரதமர் பதவியில் இருந்து மன்மோகன் சிங்கை அகற்றிவிட்டு, ராகுலை அமர்த்த வேண்டுமென்று காங்கிரசுக்குள் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். ராகுலின் அரசியல் எதிர்காலத்தை பாழாக்கும் விதத்தில் அவசரப்பட்டு முலாயம், மாயாவதியின் ஆதரவை பெற அந்த கட்சி ஒரு தடவைக்கு பல தடவை யோசிக்கவே செய்யும். ஆனால், நிலைமைகளுக்கு ஏற்றவாறு இந்த ஆதரவை காங்கிரஸ் பயன்படுத்தும். இது தவிர ஜெயலலிதா முன்வந்து அளித்த ஆதரவு கணக்கான அ.தி.மு.க., தேவகவுடா, அஜித்சிங் கூட்டணி எம்.பி.,க்கள் 17 பேர் வரை உள்ளனர். அ.தி.மு.க.,வின் ஆதரவையும் தங்கள் பக்கம் திருப்புவதற்கு காங்கிரஸ் பல முன்முயற்சிகளையும் எடுத்து வருகிறது.

தேர்தல் முடிந்தவுடன் ஜெயலலிதா முதல்வராக பதவியேற்கும் விழா நடந்த போது, உண்மையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களையும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவே திட்டமிடப்பட்டிருந்தது. டில்லி மேலிடத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்த தகவல் எம்.எல்.ஏ.,க்களுக்கும் சென்றடைந்து விட்டது. ஆனால், நரேந்திர மோடி வருகிறார் என்ற தகவல் கிடைத்ததும் மேலிடம் தடுத்து விட்டது. காங்கிரஸ் தலைவர் சோனியாவே ஜெயலலிதாவை தொடர்பு கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எழுதப் படிக்கத் தெரியாததால் வெளிநாடுகளில் சிக்கிக் கொள்ளும் இந்திய தொழிலாளர்கள் !‏



வளைகுடா நாடுகளில் பணிபுரிந்து வரும் இந்திய தொழிலாளர்கள், தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருவது, பல்வேறு தரப்பினரிடையே அதிர்வலைகளை எழுப்பியுள்ளது.
கிராமப்புறங்களில் விவசாய தொழில் நசிந்து வருவதால், நகரங்களை நோக்கி மக்கள் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். வெளிநாட்டு வேலைக்குச் செல்வதற்கு, பெரும்பாலானோர் விரும்புகின்றனர். முறையான விதிமுறைகளை பின்பற்றி, சரியான நபரின் வழிகாட்டுதலில், வெளிநாட்டிற்குச் சென்று, குறிப்பிட்ட சில ஆண்டுகள் அங்கு பணிபுரிந்தால், தங்கள் ஊரில் சொந்த வீடு, பிள்ளைகளின் படிப்பு மற்றும் ஏதேனும் தொழில் செய்வதற்கான முதலீடு போன்றவற்றிற்குத் தேவையான பணத்தை சம்பாதித்துக் கொள்ள முடியும்.வளைகுடா நாடுகளில், கட்டட வேலை, வீட்டுவேலை உள்ளிட்டவற்றுக்கு தொழிலாளர்களாக செல்ல, ஆந்திராவில் கடும் போட்டி நிலவுகிறது. ஆந்திர மாநிலத்தில், கடந்தாண்டு, வெளிநாட்டில் கூலி வேலைக்குச் செல்வதற்காக பாஸ்போர்ட் கேட்டு வந்த விண்ணப்பங்களின் எண்ணிக்கை, 4 லட்சத்து 50 ஆயிரம். இந்திய வரலாற்றில், இது மிக அதிகபட்ச எண்ணிக்கையாக கூறப்படுகிறது. மேலும், இது இந்த ஆண்டில் 15 முதல் 20 சதவீதம் வரை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இந்தியாவில் இருந்து, வெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்பும் ஏஜன்டுகள், முறைப்படி பாஸ்போர்ட், விசா பெற்று, வேலைக்கான நியமன கடிதம் மற்றும் ஒப்பந்தக் கடிதம், வேலை விவரம், ஊதியம் உள்ளிட்ட விவரங்களை, கொடுத்து அனுப்ப வேண்டும்.

ஆனால், இந்த அனைத்து விதிமுறை மற்றும் நடைமுறைகளை, ஏஜன்டுகள் பின்பற்றுவதில்லை. விளைவாக, வெளிநாட்டு வேலைக்குச் செல்லும் இந்தியர்கள், தனிப்பட்ட பிரச்னைகள், வேலையிடத்தில் நெருக்கடி, நிதி, வேலைப்பளு, குடும்பச்சூழல் உள்ளிட்டவற்றின் காரணமாக, தற்கொலை செய்து கொள்ளும் நிலை ஏற்படுகிறது. ஜூலை 2008 முதல் நவம்பர் 2010 ஆண்டு வரையிலான கால கட்டத்தில், ஆந்திராவிலிருந்து வெளிநாட்டு வேலைக்குச் சென்ற தொழிலாளர்களில் 270 பேர், தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதற்கு, பெரும்பாலும் பணியிடங்களில் ஏற்படும் நெருக்கடிகளே காரணமாக அமைகிறது.

ஆந்திர மாநிலம், கரீம்நகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜமுனா என்பவரின் கணவர், 2007ம் ஆண்டு துபாய்க்கு கட்டட வேலைக்குச் சென்றார். இதற்காக, இவர் 2 லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கினார். தனது செலவுகள் போக, வீட்டிற்கு மாதம் 10 ஆயிரம் ரூபாய் வரை அனுப்பலாம் என, ஏஜன்டுகள் சொன்னதை நம்பிச் சென்றார். ஆனால், 18 மாதம் வரை அங்கு வேலை செய்த அவரால், வெறும் 30 ஆயிரம் மட்டுமே அனுப்பினார். ஊரில், அவர் வாங்கிய கடன் தொகைக்கு, வட்டி அதிகமாகிக் கொண்டே வந்தது. இதனால், ஏற்பட்ட மன உளைச்சலால், அவர் தற்கொலை செய்து கொண்டார்.இவரின் இறப்புக்காக, அந்த கட்டுமான நிறுவனம் இழப்பீடு என்று எதுவும் தரவில்லை. பிரச்னை இதோடு ஓயவில்லை. ஊரில் கடன்காரர்களின் தொல்லை ஒரு பக்கம், பிள்ளைகளை படிக்க வைக்க முடியாமல், மாற்று உடை, உணவுக்கும் வழியில்லாமல் ஜமுனா கண்ணீரும், கம்பலையுமாக நாட்களை நகர்த்திக்கொண்டிருக்கிறார். இது வெறும் ஒரு சோற்றுப் பதம். இதைவிட, அதிகமான சோகங்களை சுமந்து கொண்டு, அரசு உதவி ஏதாவது கிடைக்குமா என்று வளைகுடா நாடுகளில், தங்கள் கணவன்களை இழந்த மனைவிகள் நடையாய் நடந்துக்கொண்டிருக்கின்றனர். ஒவ்வொருவரின் பின்னணி கதைகளும், ரத்தக் கண்ணீரை வரவழைப்பவை.இது போன்று, தமிழகத்தைச் சேர்ந்த ஏராளமானோர்களும், தற்கொலை முடிவுக்குத் தள்ளப்படுகின்றனர் அல்லது கொலை செய்யப்படுகின்றனர். இவற்றை மீறி, தப்பித்தோம் பிழைத்தோம் என்று நாடு திரும்புபவர்கள் மிகவும் அரிதே.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: வாழ்க்கையை வளமாக அமைத்துக் கொள்ள வேண்டும் என்று இந்தியாவிலிருந்து, ஏராளமான இந்தியர்கள் வளைகுடா நாடுகளுக்குச் கட்டட தொழில், வீட்டுவேலை உள்ளிட்டவற்றுக்குச் செல்கின்றனர். ஆனால், தவறான ஏஜன்டுகளிடம் இவர்கள் சிக்கிக் கொள்வதால், அவர்களும், அவர்களின் குடும்பமும் சீரழிந்து விடுகிறது. இந்தியாவிலிருந்து வளைகுடா நாடுகளுக்குச் செல்ல, 65 ஆயிரம் ரூபாய் முதல் 1.6 லட்சம் வரை செலவாகிறது. இது தவிர, ஏஜன்ட் கமிஷன் தனி. வெளிநாட்டு வேலைக்குச் செல்வதற்காக, ஊரில் உள்ள நில புலன்களை விற்றும், லட்சக்கணக்கில் கடன் வாங்கியும், வெளிநாடு செல்லும் பெரும்பாலான தொழிலாளர்கள், தங்கள் வேலை செய்யும் நிறுவனம், சம்பளம் உள்ளிட்ட எதைப் பற்றியுமே தெரிந்து கொள்ளாமல் செல்கின்றனர். அங்கு போன பின்னரே, என்ன வேலை செய்யப் போகிறோம் என்றே பலருக்கு தெரியவருகிறது.

அங்கு போனதும், முதல்வேலையாக, அவர்களது பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும், சம்பந்தப்பட்ட நிறுவனத்தினர் பிடுங்கி வைத்துக் கொள்கின்றனர்.வேலை தொடர்பான ஒப்பந்தங்களும், ஆங்கிலம் அல்லது அரபு மொழிகளில் இருப்பதால், எழுதப் படிக்கத் தெரியாத தொழிலாளர்களுக்கு, அதில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்று தெரியாமல், கையெழுத்துப் போடுகின்றனர். ஏஜன்டுகள் இங்கு சொன்ன சம்பளத்தை விட, பலமடங்கு குறைவாகவே இருக்கிறது. தினசரி 12 மணி நேரம், வாரத்தில் ஆறு நாட்கள் வேலை செய்ய வேண்டும். விடுமுறை நாட்களில் கூட, "ஓவர் டைம்' என்ற பெயரில் வேலை செய்தாக வேண்டும். தங்குமிடம் மிக மோசமாக இருக்கும்.நான்கு பேர் தங்கக் கூடிய சிறிய அறையில் 10 க்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டிருப்பர். சரியான உணவு வழங்கப்படுவதில்லை. பெரும்பாலும், ரொட்டியும், தாலும் வழங்கப்படும். சில நேரங்களில் பிரட் தரப்படும். சைவ உணவு சாப்பிடுபவர்களைப் பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை. சரியான உணவு, ஓய்வு இல்லாததாலும், அதைவிட முக்கியமாக, தங்கள் எதிர்பார்த்து வந்ததைவிட, மிகவும் குறைவாக சம்பளம் தரப்படுவதாலும் தொழிலாளர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாவர். மேலும், சில இடங்களில், ஒப்பந்தக்காலம் முடிந்ததும் அவர்களை தங்களது நாட்டிற்குத் திரும்ப சில நிறுவனங்கள் அனுமதிப்பதில்லை. பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்கள் அவர்களிடம் இருப்பதால், அவர்களால் வெளியே எங்கும் செல்ல முடியாது. கொத்தடிமைகளைப் போல் நாட்களை நகர்த்தும் நிலைக்கு அவர்கள் தள்ளப்படுகிறார்கள்.

இதனால், விரக்தியின் உச்சத்திற்குச் சென்று தற்கொலை முடிவை எடுக்கின்றனர். இந்த பிரச்னை அவர்களோடு முடிவதில்லை. தற்கொலை செய்துக்கொண்ட நபரின் உடலை, இந்தியாவிற்கு கொண்டுவர அவர்களின் குடும்பத்தினர் பெரும் சிரமப்பட வேண்டும். பொருளாதார வசதிகள் தவிர, சட்ட உதவிகளும் தேவை. சிலர், வெளிநாடுகளில் இறந்த தங்களது உறவினரின் உடலை கொண்டுவர, பல மாதங்கள் வரை காத்திருக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.தங்கள் குடும்பத்தை வளமாக வாழ வைக்க வேண்டும் என்ற கனவோடு வெளிநாடு சென்று, அங்கு வேறு விதமான முடிவை தேடிக்கொண்ட நபரின் குடும்பம், மேலும் வறுமைக்குத் தள்ளப்படுகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...