Tuesday, May 17, 2011

அ.தி.மு.க வெற்றி வரலாறு!

அ.தி.மு.க 146 எம்.எல்.ஏக்களுடன் கன ஜோராக சட்டமன்றம் செல்கிறது!அடுத்த ஐந்தாண்டுகளுக்கு அசைக்க முடியாத வெற்றி.மைனாரிட்டி அரசு என மூச்சுக்கு முன்னூறு தடவை தி.மு.க வை பழித்த ஜெ..வுக்கும் அந்நிலை வரவில்லை.முழு மெஜாரிட்டியுடன்,தான் சபதம் செய்தபடி கோட்டையில் கொடியேற்றி விட்டார்...



தனக்கு கல்யாணம் ஆகாததால் திருமண உதவி திட்டத்தை நிறுத்தினார் ஜெ..என இடித்துரைத்த ஸ்டாலினுக்கு பதிலடியாய் முதல் கையெழுத்தாக ஏழைப்பெண்களுக்கு திருமண உதவித்திட்டத்தில் ,50,000 மாக நிதியை உயர்த்தி,4 கிராம் தங்கமும் வழங்கப்படும் என்ற தனது வாக்குறுதியை செயல்படுத்தும் திட்டத்தில்தான் முதல் கையெழுத்தையே போட்டிருக்கிறார்..

அடுத்தது தன் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்ற தனி அமைச்சரையே நியமிக்க போவதாக சொல்லியிருக்கிறார்.வாரம் ஒருமுறை பத்திரிக்கையாளரை சந்திக்க போவதாகவும்,இனி தமிழ்கத்திற்கு விடுதலை...சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் நேற்று முதலே வரத்தொடங்கி விட்டது..தி.மு.க ஆட்சியில் சங்கிலி பறித்தவர்கள் எல்லோரும் ஆந்திராவுக்கு ஓடிவிட்டதாக கூறினார்.

முதல்வர் பதவியேற்பு நிகழ்ச்சியில் விஜயகாந்தும்,ஜெ..வும் கலகல்ப்பாக உரையாடியது சந்தோசம்..இந்த ஒற்றுமை கடைசி வரை தொடர்ந்தால் தமிழ்கத்திற்கு நல்லது!

வடிவேல் பிரச்சாரம் செய்ததும் அதை சன்டிவி திரும்ப திரும்ப காட்டியதும்..நடுநிலை வாக்காளர்களையும்,வழக்கமாகஓட்டு போடாமல் சுற்றுலாவுக்கு சென்று விடும் பணக்காரர்களையும் அதிகம் பயமுறுத்தி விட்டது..தி.மு.க மீண்டும் வந்துவிடுமோ என்ற் அச்சத்தில் அவர்கள் போட்ட ஓட்டுத்தான் இந்த வெற்றிக்கு காரணம் என நண்பர் ஒருவர் கூறினார்!

சென்ற முறை அ.தி.மு.க..நகைச்சுவை நடிகர் செந்திலை களம் இறக்கியது,ஒத்தைக்கு ஒத்தை வர்றியா என கலைஞரை பார்த்து முண்டாசு தட்டிய செந்திலை பார்த்து மிரண்டு தி.மு.க வுக்கு ஓட்டு போட்டவர்கள்தான் இன்று வடிவேலுவை கண்டு மிரண்டு அ.தி.மு.க வுக்கு ஓட்டு போட்டார்கள் என்கிறார் அவர்!

ஸ்டாலின் துணை முதல்வராக இருந்தவர் அவரை தோற்கடிப்பது அசிங்கம் என்பதால்,மேலிட உத்தரவுப்படி இரண்டு ஓட்டு மெசின்களை காலையிலேயே தனியாக எடுத்து வைத்து விட்டார்களாம்..சைதை துரை சாமி கண்கொத்தி பாம்பாக இரவு வரை அந்த பெட்டியை காவல் காத்தும் கடைசியில் டபாய்த்து விட்டார்கள்.அதற்கு முன்பு வரை 800 வாக்குகள் பின்தங்கியே இருந்தார் ஸ்டாலின்..விகடன் செய்தி இணையதளமும் ஸ்டாலின் தோற்று விட்டதாகவே செய்தி வெளியிட்டது!



வழக்கம்போல தி.மு.க ஆதரவு போலீஸார் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார்.சென்னை மாநகர காவல்துறை ஆணையராக எல்.கே.திரிபாதி நியமிக்கப்பட்டார்.


அ.தி.மு.க புதிய அமைச்சர்களை பாருங்கள்..பெரும்பாலும் தி.மு.க அமைச்சர்களை தோற்கடித்த வேட்பாளர்கள்தான்!எல்லோர் பெயரும் மங்களகரமான கடவுள் பெயர்கள்!

ஜெ.ராசி எண் 6..இப்போது 7 ஆக மாறியிருக்கிறது..நேற்று இரவு பவுர்ணமி தொடங்கும் நேரத்தில் மாலை 6.30 க்கு,7 கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளார். ஏழு அதிர்ஷ்ட எண்படி, 34 அமைச்சர்கள்.

 ஆன்மிகம், ஜோதிடம், எண் கணிதம் மீது முதல்வர் ஜெயலலிதா மிகுந்த நம்பிக்கை கொண்டவர். கடந்த 1991-96ம் ஆண்டு வரை முதல்வராக இருந்த போது, 9ம் எண் அவருக்கு ராசியான எண்ணாக இருந்தது. கடந்த 2001-06ம் ஆண்டு வரை முதல்வராக இருந்த போது, 6ம் எண் அவருக்கு ராசியான எண்ணாக இருந்து. தற்போது கேது திசையின் அடிப்படையில், 7ம் எண் அவருக்கு ராசியான எண்ணாகக் கருதப்படுகிறது. தேர்தலில் அ.தி.மு.க., வெளியிட்ட வேட்பாளர்கள் பட்டியலில், 160 பேர் இடம் பெற்றனர். அதன் கூட்டுத்தொகை 7. அதேபோல் முதல்வர் பதவியை ஏற்ற நேற்று 16ம் தேதி. அதன் கூட்டுத்தொகை 7. புதிய அமைச்சரவையில் இடம் பெற்றவர்கள் 34 பேர். அதன் கூட்டுத்தொகையும் 7. முதல்வராக பொறுப்பேற்ற பின் ஜெயலலிதா, நேற்று பழைய தலைமை செயலக அலுவலகத்திற்கு சென்று, 7 கோப்புகளில் கையெழுத்திட்டார். எந்த செயலிலும் தற்போது, 7ம் எண் முக்கியத்துவம் பெறுகிறது.


கேபிள் தொழிலை அரசுடமையாக்கும் திட்டத்தில் எப்போது கையெழுத்திடுவார் என ஆர்வமாக இருக்கிறேன்!

அமைச்சர்கள் பட்டியல்;




நிதித்துறை அமைச்சராக- ஓ.பன்னீர்செல்வம்,
 விவசாயத்துறை அமைச்சராக -செங்கோட்டையன்,

மின்துறை மற்றும் மதுவிலக்குத்துறை அமைச்சராக- நத்தம் விஸ்வநாதன்,

நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக -கே.பி.முனுசாமி,

தொழில்துறை அமைச்சராக- சி.சண்முகவேலு, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சராக -ஆர்.வைத்தியலிங்கம், 

உணவுத்துறை அமைச்சராக- அக்ரி கிருஷ்ணமூர்த்தி, கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சராக -சோ.கருப்பசாமி, உயர்கல்வித்துறை அமைச்சராக -பி.பழநியப்பன், 

பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக -சி.வி.சண்முகம், கூட்டுறவுத் துறை அமைச்சராக- செல்லூர் ராஜா,


 வனத்துறை அமைச்சராக பச்சமால், நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறிய துறைமுகங்கள் துறை அமைச்சராக எடப்பாடி கே. பழனிச்சாமி, 

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக எஸ்.பி.சண்முகநாதன்,

 பொதுப்பணித்துறை அமைச்சாராக கேவி. ராமலிங்கம், 
சிறப்பு திட்ட அமலாக்க அமைச்சராக வேலு, 


பிற்படுத்தப்படோர் நலத்துறை அமைச்சராக டி.கே.எம்.சின்னையா, 

ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக ‌எம்.சி.சம்பத், 

வருவாய்த்துறை அமைச்சராக பி.தங்கமணி, 

செய்தி மற்றும் விளம்பரத்துறை ஜி.செந்தமிழன், 
வணிகவரித்துறை அமைச்சராக எஸ்.கோகுல இந்திரா, 
சமூகநலத்துறை அமைச்சராக செல்வி ராமஜெயம், 
கைத்துறித்துறை அமைச்சராக பி.வி.ரமணா, 
தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக ஆர்.பி.உதயகுமார் 

ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக என்.சுப்ரமணியம், 
போக்குவரத்து துறை அமைச்சராக வி.செந்தில் பாலாஜி, 
சுற்றுச்சூழல் துறை அமைச்சராக என்.மரியம் பிச்சை, 
மீன்வளத்துறை அமைச்சராக கே.ஏ.ஜெயபால்,
 சட்டத்துறை அமைச்சராக இ.சுப்பையா, 
சுற்றுலாத்துறை அமைச்சராக புத்தி சந்திரன், தொழிலாளர் துறை அமைச்சராக எஸ்.டி.செல்லபாண்டியன், சுகாதாரத்துறை அமைச்சராக வி.எஸ்.விஜய், விளையாட்டுத்துறை அமைச்சராக என்.ஆர்.சிவபதி ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர்.


படை பரிவாரங்கள் ரெடி!

அடுத்து என்ன செய்யப்போகிறார்..ஜெ..?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...