ஸ்பெக்ட்ரம் ஊழலில் திமுகவின் கனிமொழிக்கு பங்கு இருக்கிறது என்பது உலகறிந்த செய்தி. ஊரறிந்த செய்தி. ராசாவும், கனிமொழியும் டெல்லி அரசியலில் சேர்ந்து பங்கெடுத்த செய்திகளும், கலைஞரின் பின்னாலேயே இருந்த ராசா பற்றிய செய்திகளையும் நாமெல்லாம் படித்திருக்கிறோம். இந்த ஊழலில் யாரும் எவரும் தம்மை ஒன்றும் செய்ய முடியாது என்று ராசா கருதுவதற்கு ஒன்றே ஒன்று தான் காரணம். அது இந்தியாவையே ஆளும் சில கார்ப்பொரேட் நிறுவனங்களையும் ஊழலில் பங்குதாரராக சேர்த்துக் கொண்டது தான். இந்த நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுக்க “இந்திய அதிகார வர்க்கத்தாலோ, சட்டங்களாலோ” முடியவே முடியாது. இதைக் காரணமாக வைத்துத் தான் ராசா உலகமெகா ஊழலில் ஈடுபட்டார். ராசாவிற்கு திமுகத் தலைமையும் ஆதரவளித்து வந்தது. ஆனால் சில தன்னார்வர்களால், சுப்ரீம் கோர்ட் தலையிட்ட பிறகு ஊழல் வெளிச்சத்திற்கு வர, இந்தியாவின் ஆன்மா விழித்துக் கொண்டது. விதி தன் விளையாட்டினை உண்மையான இந்தியர்களால் ஆரம்பித்தது. ஆனாலும் விதியை சும்மா விடுவோமா என்று கங்கனம் கட்டிக் கொண்டிருக்கின்றனர் திமுகவினர்.
ஏற்கனவே ஒரு பதிவில் திமுகவினர் ‘தில்லாலங்கடிக்கு’ எதிராய் யோசிக்கும் ஒருவர் பூலோகத்தில் இன்னும் பிறக்கவே இல்லை என்று எழுதி இருந்தோ. இதோ அதை மெய்ப்பிக்கும் சாட்சியாய், சிபிஐ சிறப்புக் கோர்ட்டில் ஒருவர் வழக்கொன்றினை தாக்கல் செய்திருக்கிறார். அதில் ராஜ்ய சபா எம்பியைக் கைது செய்தால் மக்கள் பிரதி நிதிச் சட்டப்படி தவறு என்றும், அவ்வாறு கைது செய்தால் மக்களுக்கு தொண்டு செய்ய முடியாது என்றும் சொல்லி இருக்கிறார். இது எப்படி இருக்கு என்று பாருங்கள். செய்தி ஆதாரம் : டைம்ஸ் ஆஃப் இந்தியா.
2G trial: DMK man moves court against Kani arrest
With DMK MP Kanimozhis bail plea to be decided a day after the results of Tamil Nadu assembly election,voter M Purushothaman from Chennai moved the court of special CBI judge O P Saini submitting if an elected representative (RS MP Kanimozhi) is arrested,it would affect the rights of the citizens to participate in the affairs of their constituency.
He said an MP was the collective voice of the voters and the court should consider whether the right of a voter held to be a fundamental by the SC would be affected if the elected representative was detain.
He also sought the court to consider certain questions of law including who will represent the constituency if a sitting MP is arrested.TNN
ஊழல் செய்தால் கைது செய்யக்கூடாதாம். அப்படிச் செய்தால் அது மக்களை பிரதி நிதிப்படுத்தும் சட்டப்படி தவறாம். ஹிந்தி தெரியவில்லை என்றால் கைது செய்யப்பட வேண்டியதில்லை, வயதானால் கைது செய்யப்பட வேண்டியதில்லை, பணக்காரன் என்றால் கைது தேவையில்லை, ராஜ்ய சபா எம்பி என்றால் கைது செய்யப்படக் கூடாது என்றெல்லாம் இந்திய சட்டத்துறை நடந்து கொள்ளுமானால், ஏற்படக்கூடிய பின் விளைவுகள் எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்.
திமுகவினர் ‘தில்லாலங்கடி’க்கு இது ஒரு உதாரணம். இன்னும் எத்தனை வழக்குகளை போட்டு, ஸ்பெக்ட்ரத்தை மூட முயற்சி செய்வர் என்பதைப் பொறுத்திருந்து பாருங்கள்.
ராசா ஊழல் செய்திருக்கிறார் என்கிறார் ராம் ஜெத்மலானி. ஆனால் கனிமொழி ஊழல் செய்யவில்லை என்கிறார் மெத்தப் படித்தவர். இந்தியச் சட்டங்கள் மீதான கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் பொய்த்துப் போகாமல் இருக்க சுப்ரீம் கோர்ட் “உலக மகா ஊழல் மன்னன் ராசா, கார்ப்பொரேட் கம்பெனிகள், அரசியல்வாதிகளை” தண்டிக்க வேண்டும்.
ஊழல்வாதிகளுக்கு துணை போவோர் அனைவரும் “ தெய்வத்தால் நிச்சயம் தண்டிக்கப்படுவர்”. ஏனென்றால் “ சிவன் சொத்துக் குல நாசம்”.
No comments:
Post a Comment