யார் காலை யார் வாரினார்கள் ?
விவரம் சொல்லும் புள்ளி விவரங்கள் …
கூட்டணி கட்சிகள் செயல்பட்டது எப்படி -
யார் காலை யார் வாரினார்கள் -
எந்த அளவிற்கு கட்சிகள் கூட்டணிக்கு
விசுவாசமாக இருந்தன
என்கிற விவரங்கள் எல்லாம் -
தற்போது துல்லியமாக
கிடைக்கின்றன.
தேர்தலில் ஓட்டுக்கள் எந்த மாதிரியில் (pattern)
போடப்பட்டு இருக்கின்றன என்பதைப் பார்த்தால் -
கூட்டணிகள் எந்த அளவிற்கு பயன் அளித்திருக்கின்றன
என்பதும் புரிகிறது.
திமுக கூட்டணியில் முக்கிய அங்கம் வகித்தவை
காங்கிரஸ், பாமக, விடுதலைச்சிறுத்தைகள் ஆகியவை.
இதில் 124 இடங்களில் போட்டியிட்ட திமுக
இந்த 124 இடங்களிலும் பெற்ற மொத்த ஓட்டுக்களின்
சராசரி 42.11 %.
கூட்டணி 100 % ஒழுங்காக செயல்பட்டிருந்தால் கூட்டணி
கட்சிகள் அனைத்துமே கிட்டத்தட்ட இதே அளவு
சராசரி ஓட்டுக்கள் பெற்றிருக்க வேண்டும்.
ஆனால் 63 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ்
பெற்ற சராசரி ஓட்டுக்கள் - 35.64 % மட்டுமே.
30 இடங்களில் போட்டியிட்ட பாமக பெற்ற
சராசரி ஓட்டுக்கள் – காங்கிரசை விட அதிகம் -
அதாவது 39.60 %.
ஆனால் – 10 இடங்களில் போட்டியிட்ட
விடுதலைச்சிறுத்தைகள் பெற்ற சராசரி ஓட்டுக்கள் -
காங்கிரஸ், பாமக
இரண்டையும் விட குறைவு – அதாவது 34.01 % மட்டுமே.
(காங்கிரஸ் கட்சி குறைவாக வாங்கியதற்கு காரணம்
புரிகிறது. ஆனால் விசிக காங்கிரசை விட குறைவான
சதவீதம் ஓட்டு வாங்கி இருப்பதன் அர்த்தம் என்ன ?
திருமா யோசிக்க வேண்டும் !)
அதிமுக கூட்டணியிலும் வித்தியாசங்கள் இருக்கின்றன
என்றாலும் – அங்கே நிச்சயமாக இதை விட
தேவலை தான்.
அதிமுக கூட்டணியில் உள்ள முக்கிய கட்சிகளான -
அதிமுக 165 இடங்களில் (அதிமுக சின்னம்) போட்டியிட்டு
சராசரியாக 53.93 % ஓட்டுக்கள் பெற்றிருக்கிறது.
அடுத்தபடியாக தேமுதிக - 41 இடங்களில் போட்டியிட்டு
சராசரியாக 44.84 % ஓட்டுக்கள் பெற்றிருக்கிறது.
ஆனால் 12 இடங்களில் மட்டுமே போட்டியிட்ட சிபிஎம்
சராசரியாக 50.29 % ஓட்டுக்களைப் பெற்றிருக்கிறது.
சிபி ஐ 10 இடங்களில் போட்டியிட்டு
சராசரியாக 48.63 % ஓட்டுக்களைப் பெற்றிருக்கிறது.
2 இடங்களில் மட்டுமே போட்டியிட்ட சிறிய கட்சியான
புதிய தமிழகம் 54.30 % ஓட்டுக்களை (அதிமுகவை விட
அதிகம்) பெற்றிருக்கிறது.
திமுக கூட்டணியை விட அதிமுக கூட்டணியில் ஓரளவு
ஒத்துழைப்பு அதிகம் என்று தோன்றினாலும்,
தேமுதிக விஷயத்தில் மட்டும்
சற்று பாதிப்பு இருப்பதாகவே தெரிகிறது.
ஆனால் திமுக கூட்டணியில் வெளிப்படையாக
ஒற்றுமையாக இருப்பது போல் காட்டிக்கொண்டாலும் -
உள்ளுக்குள் எல்லா கட்சிகளுமே ஒன்றை ஒன்று
காலை வாரி விட்டிருப்பது நன்றாகவே தெரிகிறது !

No comments:
Post a Comment