Monday, May 2, 2011

பாகிஸ்தானின் சின்னத்தனம்

பாகிஸ்தானின் சின்னத்தனம்

’ஒசாமா பின் லாடனா? யாரது, தாடி வெச்சிகிட்டு, தலைப்பாகையோட ஒல்லியா இருப்பாரே அவரா? அவருக்கு இங்க என்னங்க வேலை?’ என்று கேட்டுக் கொண்டிருந்த பாகிஸ்தான் இப்போது,
“அதெப்புடி எங்களைக் கேக்காம உள்ள வரலாம்?” என்று அமெரிக்காவைப் பார்த்து ஒப்பாரி வைக்கிறது. பாகிஸ்தானின் சாவெரைனிட்டி போய்விட்டதாம். இந்த முத்தை உதிர்த்திருப்பவர் முஷாரஃப்.
என்ன சாவரைனிட்டி? கொலைகாரர்களின் சரணாலயத்தில் எங்கிருந்து வந்தது அதெல்லாம்?
நம்ம ஊரில் குண்டு வைத்தவர்கள் அங்கே போய் ஒளிந்து கொண்டால், ஃபோன் பண்ணி
“ஏம்ப்பா தாவுத் இப்ரஹிம் அங்க வந்தானா?” என்று கேட்பார்கள், ஏதோ பால்காரன் வந்தாச்சா என்கிற மாதிரி.
“இல்லீங்களே” என்று பாகிஸ்தான் பதில் சொன்னதும்
“சீச்சீ.. அங்க இல்லையாம், அவங்களே சொல்லிட்டாங்க” என்று திருப்தியடைந்து வேறே இடத்தில் தேட ஆரம்பித்து விடுவார்கள்.
அமெரிக்காவும் அதே மாதிரி வாயில் வடை வைத்திருக்கிறது என்று நினைத்தார்கள் போலிருக்கிறது. நாற்பது நிமிஷங்களில், சம்பந்தப்படாத யாருக்கும் பாதிப்பு இன்றி, தாங்களும் பாதிக்கப்படாமல் நூதனமாகச் செய்திருக்கிறார்கள் சி.ஐ.ஏ ஆசாமிகள்.
பாகிஸ்தானை பயங்கரவாத நாடாக அறிவித்து ஐ.நா. விலிருந்து கழுத்தைப் பிடித்துத் தள்ள வேண்டும். அவர்களுக்குச் செய்யும் ஏற்றுமதிகளையும், பொருளாதார உதவிகளையும் எல்லா நாடுகளும் உடனே நிறுத்த வேண்டும்.
இல்லையென்றால் உலகப்படத்தில் அவர்கள் இருக்கும் வரை திருந்தப் போவதில்லை.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...