Tuesday, May 31, 2011

சனியன் கருநாய் ஒழிந்தது



தி.மு.கவின் வரலாற்றில் ஏன் தமிழக வரலாற்றில் என்றுமில்லாத படுதோல்வியை தமிழகத்தின் ஆளும் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் சந்தித்துள்ளது. தமிழக ஊடகங்கள் மற்றும் அமைப்புக்களின் கருத்துக் கணிப்புக்களை எல்லாம் பொய்யாக்கிபடுதோல்வியை கருணாநிதி சந்தித்துள்ளார். கனிமொழி ஊழல் கைது, ஈழத் தமிழர் படுகொலை தொடர்பான ஐ.நா நிபுணர் குழு அறிக்கை, கிருட்ணமூரத்தியின் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான தீக்குளிப்பு போன்றன தேர்தலுக்கு முன்பே நடந்திருந்தால் தி.மு.க இன்னும் பல ஆசனங்களை இழந்திருக்கும்.

ஈழத் தமிழர் படுகொலை தொடர்பான ஐ.நா அறிக்கை தேர்தலுக்கு பின் வெளியிடுவதற்கு விஜய் நம்பியார் ஊடாக முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு அதில்வெற்றியடைந்திருந்தபோதும் தி.மு.கவும் அதன் கூட்டணியான கொங்கிரசும் படுதோல்வியையே சந்தித்துள்ளன. இதேவேளை, தி.மு.கவோ, அ.தி.மு.கவோ ஆட்சியிழக்கும் எல்லா தடவைகளிலுமே எதிர்க்கட்சியாக உருவெடுத்து இருந்திருக்கிறது. கடைசியாக நடந்த 2006 சட்டசபைத் தேர்தலில் முதல்வர் ஜெயலலிதாவின் அ.தி.மு.க ஆட்சியிழந்தாலும் 61 தொகுதிகளை வென்று பலமான எதிர்க்கட்சியாகத் திகழ்ந்தது. ஆனால், இந்தத் தடவை தோற்று ஆட்சியிழந்த தி.மு.க 25ற்கும் குறைவான இடங்களைப் பெற்று எதிர்க்கட்சி என்ற நிலையையும் இழந்துவிட்டது.

தமிழக ஊடகங்கள் பலதினதும் கணிப்பு இம்முறை அ.தி.மு.கவின் கைதான் ஓங்கும் என்று அடித்துக்கூறியிருந்தன. அத்தோடு, கருணாநிதியின் குடும்ப ஆட்சி அகற்றப்படவேண்டும் என்று பல ஊடகங்களும் இம்முறை வெளிப்படையாகவே கருத்துக்களை எழுதிவந்ததை அவதானிக்க முடிந்தது.

ஈழத் தமிழர்கள் மீது ஒரு பாரிய இனப்படுகொலையை சிறீலங்கா புரிந்துகொண்
டிருந்தபோது அதற்கு துணைநின்ற இந்தியாவின் கொங்கிரஸ் கட்சியுடன் இணைந்திருந்த தி.மு.க, இறுதி அழிவு நிகழும் இறுதிக் கணம்வரைக்கும் அதனைத் தடுத்து நிறுத்த முயலவில்லை என்பது மட்டுமல்ல, தமிழகத்தில் பொங்கியெழுந்த மக்களின் எழுச்சியையும் தனது சாணக்கியத் தனத்தால் கருணாநிதி தடுத்து நிறுத்தினார். ஈழத் தமிழ் மக்களுக்கு செய்த இந்த கொடுமைக்கு, தற்போது வரலாற்றில் என்றும் சந்திக்காத அவமானத்தோடு கொங்கிரசும், தி.மு.கவும் எதிர்க்கட்சி என்ற நிலையைக்கூடப் பெறமுடியதவாறு தமிழக மக்களால் தூக்கியெறியப்பட்டுள்ளனர்.

தமிழகத்தின் ஆட்சி என்பது ஒவ்வொரு தேர்தலிலும் மாறிக்கொண்டே இருக்கும் ஒன்று. கடந்த 30 வருடங்களாக அங்கு ஆட்சி என்பது மாறி மாறியே ஏற்பட்டு வருகின்றது. ஐந்து வருடங்கள் ஆட்சி செய்து முடித்திருக்கும்போது மக்களுக்கு அந்த ஆட்சிமீது அகோர வெறுப்பு ஏற்படும் வகையில் ஆளும் கட்சியின் அட்டகாசங்கள் அமைந்திருக்கும். இதனால், ஆளும் கட்சியைத் தோற்கடிக்க வென்றே பிரதான எதிர்க்கட்சிக்கு மக்கள் வாக்களிப்பர். அதே பாணியில் இம்முறை தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகளும் அமைந்துள்ளன. ஒருதடவைதி.மு.கவென்றால் அடுத்த தடவை அ.தி.மு.க தான் என்பது நியதி. இப்போது ஜெயலலிதா மூன்றாவது தடவையாக முதல்வராகியுள்ளார். கூட்டணியாகப் போட்டியிட்டாலும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பது குறிப்பிடத்தக்கது.

கருணாநிதியின் படுதோல்விக்கு காரணம்ஈழத் தமிழ் மக்களின் படுகொலைக்கு துணை நின்றது முக்கிய காரணமாக கூறப்படுகின்ற போதிலும் ஸ்பெக்ட்ரம் ஊழல் தி.மு.கவை மோசமாகத் தாக்கியுள்ளது. அத்துடன் கருணாநிதியின் முழுமையான குடும்ப ஆதிக்கமும் தி.மு.கவின் மக்கள் விரோதப் போக்கும் அந்தக் கட்சியை படுகுழியில் தள்ளியுள்ளது.

இதனால் மலைகள் என்று சொல்லப்பட்ட தி.மு.கவின் பிரமுகர்களில்
விரல் விட்டு எண்ணக்கூடியவர்களே வென்றுள்ளனர்.

தேர்தலுக்கு முன்பாக, குறிப்பாக ஆனந்தவிகடன் ‘மறக்க முடியுமா?’ என்ற தலையங்கத்தில் கருணாநிதியின் ஊழல்களையும், கொங்கிரசுடன் கூட்டுச் சேர்ந்து ஈழத்தமிழ் மக்களின் அழிவிற்கான காரணங்களையும் தொடர்ச்சியாக எழுதி தனது எதிர்ப்பை வெளியிட்டுவந்தது. இதேவேளை, தினமணி கலைஞரின் சொத்து விபரங்களை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், கடந்த மாதம் நடந்த தமிழக தேர்தலில் வரலாற்றல் என்றும் இல்
லாத அளவுக்கு மிகப் பெரிய அளவில் வாக்குப் பதிவாகியுள்ளது. சுமார் 78 வீத
மான மக்கள் தமிழகத்தில் வாக்களித்தனர். மிக அதிகளவான வாக்குப் பதிவு என்பது ஆட்சிமாற்றத்தையே குறிப்பதாக அவதானிகள் குறிப்பிட்டும் இருந்தனர். இதேவேளை, கருணாநிதியுடன் கூட்டுச் சேர்ந்து போட்டியிட்ட கொங்கிரஸ் படுதோல்வியைசந்தித்துள்ளது. 63 இடங்களை கருணாநிதியிடம் இருந்து பறித்துப்பிடுங்கிப்போட்டியிட்ட கொங்கிரஸ் 5 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது.

அதிலும் கொங்கிரஸ் கட்சியின் தலைவர் தங்கபாலுவே தனது மைலாப்பூர் தொகுதியில் தோற்றுப்போயுள்ளார். மே 17 இயக்கத்தினர், சீமானின் தீவிர பிரச்சாரம் என்பன கொங்கிரசின் கனவுக் கோட்டையை அதாவது தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்ற சிந்தனையை தவிடுபோடியாக்கியுள்ளது. அத்துடன், விடுதலைச் சிறுத்தைகளினால் ஒரு இடத்தைக்கூடப் பிடிக்கமுடியவில்லை.

பா.ம.க 30 இடங்களில் போட்டியிட்டு மூன்று இடங்களை மட்டும் பிடித்துள்ளது. இதேவேளை, இந்தத் தேர்தல் தோல்வி தி.மு.க, கொங்கிரஸ், விடுதலைச்சிறுத்தைகள் என தி.மு.க அணிக் கட்சிகளுக்கு பேரதிர்ச்சயைக் கொடுத்துள்ளன. மக்கள் ஓய்வைக் கொடுத்துள்ளார்கள் என்று கருணாநிதி புலம்பினாலும், பா.ம.கவின் நிலை மற்றைய எல்லாக் கட்சிகளின் நிலையை விடவும் பரிதாபகரமாகியுள்ளதாக கருதப்படுகின்றது.

ஏற்கனவே பா.ம.க தொண்டர்கள் தே.தி.மு.கவில் ஐக்கியமாகிவந்த நிலையில் தே.தி.மு.க பாரிய சக்தியாக உருவெடுத்திருப்பது பா.ம.கவை கூண்டோடு காலியாக்கிவிடவும்கூடும் என்று அஞ்சப்படகின்றது.

ஜெயலலிதா ஆட்சிஇதேவேளை 147 ஆசனங்களுடன் தமிழக முதலமைச்சராக 3வது முறையாக பதவியேற்றுக் கொண்டார் ஜெயலலிதா. ஜெயலலிதாவுக்கு ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு உறுதிமொழியை தமிழில் எடுத்துக் கொண்டார் ஜெயலலிதா. அவருடன் 33 அமைச்சர்களும் பொறுப்பேற்றனர். அதில் 24 பேர் புதுமுகங்கள். சென்ற இரு தடவைகள் ஆட்சியில் அமர்ந்தபோது கூட்டணியின் ஆதரவு (கொங்கிரஸ்) ஜெயலலிதாவிற்கு தேவைப்பட்டது. ஆனால் இம்முறை கொங்கிரஸ் உதவியின்றி முதல்வராகியுள்ளார். ஆனால், தே.தி.மு.க உதவியின்றி அவரால்வெல்லமுடியாது போயிருக்கும். கொம்யூனிஸ்ட்களும் முழு ஒத்தாசை வழங்கினர் என்பதும் கவனிக்கத்தக்கது. அ.தி.மு.க அணி வென்றாலும், அ.தி.மு.க தனித்து வென்று விடக்கூடாது எனக் கருதிய நடுநிலைவாதிகளும் விஜயகாந்த், கொம்யூனிஸ்ட் உள்ளிட்ட ஜெயலலிதாவின் நேசக்கட்சிகளும்கூட மனமுடைந்துவிட்டன. தனித்து பெரும்பான்மை கிடைத்தால் ஜெ என்ன ஆட்டம் போடுவார் என்பது சகலருக்கும் தெரிந்ததே.

கடிவாளம் விஜயகாந்த் கையிலோ, கொம்யூனிஸ்ட் கையிலோ இருந்தால் ஜெயலலிதாவை கட்டுப்பாட்டில் வைத்து தமிழகம் நல்லாட்சிபெற வழி பிறந்திருக்கும். கலைஞர்போய்‘ஜெ`வந்தது இருமலை விட்டு தும்மலைப் பிடித்த கதைதான் என்று சினக்கத் தொடங்கியுள்ளனர். அத்துடன், கலைஞர் குடும்பத்தை ஒழிப்பதற்காக ஜெயலலிதா கொங்கிரசுடன் கூட்டுச்சேர்ந்துவிடுவாரோ என்றும் அஞ்சுகின்றனர்.


விஜயகாந்தின் பாய்ச்சல்!

விஜயகாந்தைப் பொறுத்தவரை அவர் புதிய வரலாற்றை எழுதியுள்ளார் என்பது உண்மைதான். கட்சியை உருவாக்கி போட்டியிட்ட இரண்டாவது தடவையுடன் அவர் எதிர்க்கட்சியின் தலைவராகியுள்ளார். கடந்த தடவை தனி ஒருவராக சட்ட சபைக்குள் நுழைந்தவர், இம்முறை 29 பேருடன் எதிர்க்கட்சியின் தலைவராக நுழைந்துள்ளார். தமிழக அரசியலில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்குப் பின் முத்திரை பதித்த முதல் நடிகர் அரசியல்வாதி இவர் என்று புகழாரம் சூட்டப்படுகின்றது. விஜயகாந்த் கட்சியானது பா.ம.க, கொங்கிரஸ் என இரு கட்சிகளின் இடத்தை ஒருங்கே கைப்பற்றிக் கொண்டுவிட்டது எனலாம். கடந்த தேர்தலில் ஒரு இடத்தில் மட்டுமே வென்றது தேமுதிக. இந்த முறையும் அது தனித்துப் போட்டியிடிருந்தால் அதிமுக வாக்குகளைப் பிரித்திருக்கும். வழக்கம் போல விஜயகாந்த் மட்டுமே வென்றிருப்பார், இதனால் திமுக மீண்டும் ஆட்சியைப் பிடித்திருக்கும் அல்லது எதிர்க்கட்சியாகக்கூட வந்திருக்கும். இதைத் தடுத்து நிறுத்தியதே ஜெயலலிதாவின் புத்திசாலித்தனம் என்கின்றனர் ஆய்வாளர்கள். 41 தொகுதிகளில் போட்டியிட்ட தேமுதிக 29 தொகுதிகளில் வென்றிருப்பது அக்கட்சிக்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது. தொடர்ந்து தனித்துப் போட்டியிட்டு வந்திருந்தால் கட்சி ஒரு கட்டத்தில் காணாமல் போயிருக்கும். ஆனால் அதிமுகவுடன் சேர்ந்ததால் பெரும் அங்கீகாரம் கிடைத்திருப்பதாக தேமுதிகவினர் கருதுகிறார்கள்.

கீரியும் பாம்புமாக இருந்த தி.மு.க, அ.தி.மு.க ஆட்சி போய் இப்போது ஒரே கூட்டணியில் போட்டியிட்ட அ.தி.மு.க - தே.மு.தி.மு.க ஆளும்கட்சியும் எதிர்க்கட்சியுமாகியுள்ளன. இவர்கள் நல்லதொரு ஆட்சியை தமிழகத்திற்கு வழங்கி, ஈழத்த தமிழர்களின் விடுதலைக்காகவும் ஒன்று சேர்ந்துகுரல் கொடுப்பார்களா என்பதை பெர்றுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...