Tuesday, May 31, 2011

2ஜி ஊழல்: ம.பு.க. பார்வையில் தயாநிதி, சன் டிவி, மாக்சிஸ்

மத்திய தொலைத் தொடர்பு அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தபோது ஏர்செல் நிறுவனத்திற்கு முறைகேடாக 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறதா என்பதை மத்திய புலனாய்வுக் கழகம் ஆராய்ந்து வருகிறது.

இந்த புலனாய்வின் அடிப்படையில் வரும் ஜூலை மாதத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து தனது விசாரணையை ம.பு.க. தொடங்கும் என்று கூறப்படுகிறது.


டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய புலனாய்வுக் கழகத்தின் (சிபிஐ) பேச்சாளர் தாரிணி மிஸ்ரா, “2001 முதல் 2007ஆம் ஆண்டு வரை 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டது தொடர்பான விவரங்களை ம.பு.க. தீவிரமாக ஆராய்ந்து வருகிறது” என்று கூறியுள்ளார்.

எனவே, அப்போது தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்த தயாநிதி மாறனிடமும் விசாரணை நடத்தப்படும் என்பதை ம.பு.க. மறுக்கவில்லை. இதற்குக் காரணம், தயாநிதி மாறன் தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்தபோது ஏர்செல் நிறுவனத்திற்கு 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி, ஏர்செல் நிறுவனத்தை பின்னாளில் வாங்கிய மலேசியாவின் மாக்சிஸ் நிறுவனத்திற்கும், சன் தொலைக்காட்சிக்கும் இடையே நடந்த பணப் பரிமாற்றங்களை ம.பு.க. பரிசீலித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு தொடர்பாக 10 தொலைத் தொடர்பு நிறுவனங்களின் முதன்மை செயல் அலுவலர்கள் உட்பட 63 பேர் தங்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய புலனாய்வுக் கழகம் தெரிவித்துள்ளது.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக புலனாய்வு செய்துவரும் தங்கள் அமைப்பு, இதுவரை மேற்கொண்டுள்ள விசாரணை தொடர்பான விவர அறிக்கையை இவ்வழக்கை விசாரித்துவரும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, ஏ.கே.கங்கூலி ஆகியோர் கொண்ட அமர்விடம் மத்திய புலனாய்வுக் கழகத்தின் வழக்குரைஞர் இன்று தாக்கல் செய்தார்.

2
ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு குறித்து விசாரிக்க தனி நீதிமன்றத்தை அமைக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளதாகக் கூறிய மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞர் இந்திரா ஜெய்சிங், அது தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும், அதனை அவர் பரிசீலித்து வருவதாகவும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...