Saturday, May 28, 2011

தென் இந்தியாவின் அவமானம் கருணாநிதி காங்கிரஸ் பத்தரிக்கை கடும் தாக்கு

தென் இந்தியாவின் அவமானம் கருணாநிதி காங்கிரஸ் பத்தரிக்கை கடும் தாக்கு


திமுக பொதுக்குழுவைத் தொடர்ந்து நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் கருணாநிதி திமுகவை இழிவுபடுத்தும் பத்திரிகைகளை உடன்பிறப்புகள் படிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தினார்.

சட்டப்பேரவையில் நடைபெற்ற விவாதத்தின்போது காங்கிரஸ் கட்சி கொறடா பீட்டர் அல்போன்ஸ் கம்யூனிஸ்ட்டுகள் காங்கிரசுக்கும், திமுகவுக்கும் இடையில் சிண்டு முடிவதாக கூறினார்.

ஆனால் திமுகவை எந்த அளவுக்கு காங்கிரஸ் கட்சி இழிவாகக் கருதுகிறது என்பதற்கு கேரளத்திலிருந்து வெளிவரும் காங்கிரஸ் கட்சியின் அதிகார பூர்வ பத்திரிகையான “வீஷ்ணம்” ஏட்டில் வெளிவந்துள்ள இ.வி.ஸ்ரீதரன் எழுதிய கட்டுரை (ஜனவரி 17, 2011) சாட்சியமாக உள்ளது. அந்த கட்டுரையை அப்படியே பிரசுரிக்குமளவுக்கு தரமானதாக இல்லை. முதல்வரின் குடும்பத்தைப் பற்றி தனிப்பட்ட முறையில் கடுமையாக விமர்சிக் கப்பட்டுள்ளது. அந்த கட்டுரையின் ஒரு சில பகுதிகளை மட்டும் தமிழக வாசகர்கள் அறியத் தருகிறோம். இதுகுறித்து தமிழக காங்கிரசாரிடம் திமுகவினர் கேட்டு அறிவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

திமுகவின் உதயசூரியன் அஸ்தமிக்கிறது. திராவிட அரசியலை திமுக கை கழுவுகிறது. திமுக என்பது இன்று ஒரு குடும்பத்தின் தனிச் சொத்தாக மாறியுள்ளது. அதிகாரத்தின் மூலமாக ஊழல் என்பதுதான் கருணாநிதி குடும்பத்திலுள்ள அனைவரது லட்சியமாக உள்ளது. ஊழலில் ஆனந்தம் காணுகின்ற கருணாநிதி குடும்பத்தை அரசியலில் இருந்து துடைத்தெறிய தமிழக மக்கள் விரும் புகிறார்கள். ஆனால் இந்தக் குடும்பம் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசியும், முட்டாள் பெட்டியையும் (தொலைக்காட்சிப் பெட்டி) இல வசமாக வழங்கி, ஏழை மக்களை மயக்க நிலையில் வைத்திருக்கிறது. மயங்கிக் கிடக் கும் அந்த மக்களின் சுய உழைப்பைத்தான் கருணாநிதி குடும்பம் பல ஆண்டுகளாகக் கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறது. கலைஞர் கருணாநிதி, ஊழலை அரசியல் வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்றிய தலை வராவார்.

திராவிட அரசியல் என்ற பெயரில் ஊழ லை திராவிட மயமாக்கிய தலைவர் கருணா நிதி என்று ஒருமுறை ‘துக்ளக்’ தலையங்கத் தில் சோ இராமசாமி எழுதியிருந்தார். அதை யும் ஒரு நுணுக்கமாக எடுத்துக் கொண்டு ஊழலை வளர்த்தவர் கருணாநிதி. தற்போது அவர் ஊழலை தேசியமயமாக்கிக் கொண்டி ருக்கிறார்.

மு.க.முத்து, மு.க.அழகிரி, மு.க.ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் கருணாநிதியின் வாரிசு கள். எம்.ஜி.ஆர் கட்சி துவங்கிய ஆரம்ப காலத் தில் கருணாநிதி தனது மகன் மு.க.முத்துவை கதாநாயகனாக்கி திரைத்துறையில் இறக்கி விட்டார். ஐந்தாறு திரைப்படங்களில் கதாநாய கனாக நடித்த மு.க.முத்து திறமையின்மை யின் காரணமாக பின்வாங்க வேண்டிய நிலை வந்தது. மு.க.முத்து, திரைத்துறையில் பிரகா சிக்காமல் போனது கருணாநிதிக்கு பெரிய ஏமாற் றத்தைத் தந்தது. திரைப்படத் துறையில் இருந்து விலகி வந்த மு.க.முத்துவின் வாழ்க் கை மற்றொரு திரைப்படமாக மாறியது.

திமுகவை இன்று கருணாநிதி தனது மகன்கள் அழகிரிக்கும் ஸ்டாலினுக்கும் பங்கு வைத்துக் கொடுத்திருக்கிறார். மதுரையை தலைமையிடமாகக் கொண்டு தென் தமிழ கத்தை அழகிரிக்கும், சென்னையைத் தலை மையிடமாகக் கொண்டு மீதித் தமிழகத்தை ஸ்டாலினுக்கும் வழங்கியிருக்கிறார். முது மைக் காலத்தில் தமிழகத்தின் பாகப் பிரி வினையை இவ்வாறாக எழுதாமல் எழுதி வைப்பதைக் கண்டு ராஜ ராஜ சோழன்கூட சிரிக்காமல் இருக்க மாட்டார். மருமகன் முர சொலிமாறனை தில்லிக்கு அனுப்பியதுபோல் அழகிரியையும் கருணாநிதி தில்லிக்கு அனுப்பி வைத்தார். மத்திய அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்ட அழகிரி திமுகவிற்கு மட்டுமல்லாமல் தென்னிந்தியாவிற்கே அவ மானமாக மாறினார். ஆங்கிலமும் இந்தியும் தெரியாததனால் தமிழ்நாட்டில் இருந்து சென்ற இந்த மத்திய அமைச்சருக்கு எழுந்து நிற்கக்கூட முடியவில்லை. தனது மகனை முன்னிறுத்தித்தான் கலைஞர் கருணாநிதி திராவிடர்களின் மொழிக் கொள்கையைத் தீர்மானிக்க வேண்டும். “இந்தி ஒழிக” என்ற போராட்டத்திற்கு தலைமை தாங்கிய கருணா நிதியின் மகன் அழகிரி, இந்தி மொழிக்கு முன் னால் கேபினட் பதவியைத் தலையில் சுமந்து கொண்டு வேர்த்து விறுவிறுத்து நிற்கிறார்.

அழகிரி இந்திய நாடாளுமன்றத்திற்குப் பயந்தார். எதற்காக அழகிரியை கருணாநிதி நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைத்தார், அழகிரி எதற்காக அங்கு போனார், எதற்காக கேபினட் அமைச்சர் பதவியைப் பெற்றார் என்று இந்திய மக்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா? உண்மையில் நிகழ்ந்தது என்னவென்றால், கருணாநிதி தனது மகனை இந்திய நாடாளுமன்றத்தில் பலி கடாவாக்கி னார். தமிழக மக்கள் கேட்பது போலவே இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையும், ஜனநாயகத்தையும் முன்னிறுத்தி இந்திய மக்களும் கருணாநிதியிடம் பல்வேறு கேள்வி களைக் கேட்கிறார்கள். இந்தக் கேள்விகளுக் கெல்லாம் கருணாநிதியால் பதில் சொல்ல முடியாது. கருணாநிதியும், அவரது பிள்ளை களும், உறவினர்களும் அவர்களுக்கு வேண் டியவர்களும் செய்கின்ற ஊழல் மற்றும் அதி காரத் துஷ்பிரயோகத்திற்கு முன்னால் இந்திய அரசியலமைப்புச் சட்டமும், கோட்பாடுகளும் தலையில் துண்டைப் போட்டு நிற்கின்றன. சுருக்கமாகக் சொன்னால் இந்திய அரசியல மைப்புச் சட்டமும், கோட்பாடுகளும், ஜனநாய கமும் தலையில் துண்டைப் போடக்கூடிய நிலையை கருணாநிதி ஏற்படுத்திவிட்டார். இந்திய அரசியல் கட்சிகளும், அதன் தலை வர்களும் இந்தக் கொள்ளையை எந்தவித உணர்ச்சியுமின்றிப் பார்த்துக் கொண்டிருக் கிறார்கள்.

பிள்ளைகளையும், மருமகன்களையும் குடியமர்த்துவது என்ற கருணாநிதியின் அரசியல் அதன் உள்ளேயே கலகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. திமுகவில் கலகம் என்று பத்திரிகைகள் தலைப்புச் செய்தி வெளியிடுவதன் அர்த்தம் கருணாநிதி குடும் பத்தில் கலகம் என்பதாகும். மத்திய கேபினட் அமைச்சர் அழகிரி அப்பதவியைத் துறந்து விட்டு தமிழகத்திற்கு வந்து முதலமைச்சராக விரும்புகிறார். மற்றொரு மகன் ஸ்டாலின் வெகு காலத்திற்கு முன்பாகவே முதலமைச் சர் என்ற பதவியைத் தனது தலையில் சுமக் கத் துவங்கிவிட்டார். மகள் கனிமொழிக்கு கட்சியின் தலைமைப் பீடத்தில் அமர வேண் டும் என்ற மோகம். ஸ்பெக்ட்ரம் ஊழலில் மத்திய அமைச்சர் பதவி பறிபோன ஆ.ராசா வை கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாள ராகத் தொடரச் செய்ய வேண்டும் என கனி மொழி விரும்புகிறார். ஊழல்காரரான ராசாவை கட்சியிலிருந்து நீக்குங்கள் என்று அழகிரி கருணாநிதிக்கு வேண்டுகோள் விடுக்கிறார். தயாளு அம்மாளும், ராஜாத்தியும் ஊழலின் கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டிருக் கிறார்கள். மருமகன் முரசொலிமாறனின் மகன்கள் இந்த பந்தய ஓட்டத்தில் தோற்க விரும்பாமல் கோடம்பாக்கத்தின் திரைத் துறையைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளப் பார்க்கிறார்கள். மலை யாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் பல்வேறு தொலைக்காட்சி சேனல்களும், பல்வேறு பத்திரிகைகளும், திரைப்படத் துறையுமாக இந்தக் குடும்பம் தென்னிந்தியாவிலேயே மிகப் பெரிய அரசியல் குடும்பமாக மாறியிருக்கிறது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...