Sunday, May 22, 2011

ஒரு கைதியின் டைரி - கனிமொழி

அப்பா...போயிட்டு வர்றேன்...அண்ணன்களிடம் சொல்லுங்க... மறக்காம தயாளு அம்மாகிட்டேயும் சொல்லிடுங்க...

பெயர்: ஸ்பெக்ட்ரம் கனி

பழைய பெயர்: கவிஞர் கனிமொழி

பழையமுகவரி:

c/o ராசாத்தி

சிஐடி காலனி

சென்னை

 புதிய முகவரி:

c/o அறை எண் 6, திகார் ஜெயில்

டெல்லி

தொழில்:டிவி தொடங்குவதற்காக கைமாத்தாக பணம் வாங்குவது

பிடித்த வசனம்:

1.ராசாத்திக்கு கனிமொழி மகள்;கனிமொழிக்கு நான் அப்பா - கருணாநிதி

2.கருணாநிதி பராசக்தி வசனம்

போகிறேன்...எதற்காக போகிறேன்? ஏன் கம்பி எண்ண போகிறேன்?

டிவிக்கு பணம் வாங்கியதை,வாங்கவில்லை தமாஷுக்குக் கூறினேன். லஞ்சம் வாங்காமல் இருப்பது காட்டுமிராண்டித்தனம் என்று காட்டமாகக் கூறினேன்.

குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.இப்படியெல்லாம் நீங்கள் எதிர்பார்ப்பீர்கள் நான் இதையெல்லாம் மறுக்கப்போகிறேன் என்று இல்லை.

நிச்சயமாக இல்லை.ஊழல் செய்யதததை குறும்பாகக் குத்தி காட்டினேன்.

ஊழல் கூடாது என்பதற்காக அல்ல.ஊழல் செய்கிற குடும்பத்திற்கு பங்கம் வந்து விடக்கூடாது என்பதற்காக.

ஸ்பெக்டரம் விற்றலை ஆதரித்தேன்.அது தீங்கு தரும் என்பதால் அல்ல.அது நல்லவர்களின்  தீர்த்த யாத்திரை தலமாக மாறி விடக்கூடாது எனபதற்காக.

விபரங்களை கேலி செய்தேன்.விபரங்கள் எனக்கு விரோதம் என்பதாலா? அல்ல! விபரங்கள்,சி.பி.ஐ நடத்தும் விசாரணையில் வினையாகி விடக்கூடாதே என்பதற்காக.

பிடித்த தோழர்: ராசா

பிடித்த ஆசை: திகார் ஜெயிலில் கவிதை எழுத வேண்டும்

எதிரி:அம்மாவின் பாசம்;நிரா நிராடியாவின் வேசம்

ரசித்தது: ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிபிஐ சீக்கி அடிப்பது

சமீபத்திய சாதனை: (கனி) மொழி போராட்டத்தில் கைது

பிடித்த பாடல்: அண்ணன்  என்னடா...தம்பி என்னடா...அவசரமான உலகத்திலே

மிகவும் பிடித்தது : அண்ணமார் கதைகள்

சமீபத்திய எரிச்சல்: தயாளு அம்மாள் தப்பியது

சமீபத்திய ஆச்சரியம் :தலைவர் இன்னும் என்னை நம்புவது

கேட்க விரும்பு  கேள்வி:   இனியாவது திகார் ஜெயிலுக்கு  வருவீங்களா ,அப்பா?


'டீ' குடிக்க போறோம்ன்னு சொன்னதை, தப்பா புரிச்சுடாங்க...

          நெற்றிக்கண் தனது விளம்பரத்திற்காக இப்படியொரு தலைப்பை தந்திருந்தால்,இந்த அறிவிப்பும், விளமபரத்திற்காக மட்டுமே.


          இவர்கள் இருவரும் யாருக்காக தீக்குளிக்க போகிறார்கள்.ஈழத் தமிழர்கள் இனப்படுகொலையை கண்டித்து கருணாநிதி மத்திய அரசுலிருந்து விலக வேண்டுமென்றா?  இல்லை! இல்லை!! கனிமொழி பெயர்  குற்றப் பத்திரிக்கை யில் வந்த பின்னும் மத்திய அரசுக்கு எந்த நிர்பந்தத்தையும் தராது இருக்கும் கருணாநிதியை கண்டித்து குடும்பத்தில் எழுந்த சின்ன குழப்பம் அவ்வளவு தான்.



             இது குறித்து கேட்டால்,வீட்டுக்கு வீடு சின்னவீடு,உனக்கென்னையா? என்பார்கள்.நமக்கு எதுக்கு ஊர் வம்பு? வீட்டுக்கு வீடு வாசப்படி?  ஒரு குடுமப்த்தில் அப்பாவுககும் மகளுக்குமான பாசப்போராட்டம் அவ்வளவுதான்.


             இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ரயில் தண்டவாளத்தில் தலைவைத்தும், தீக்குளித்தும் உயிர் விடப்போவதாக மிரட்டிய தலைவனுக்கு மடியில் தலைவைத்துறங்கிய மகள் தீக்குளிக்கப் போவதாக மிரட்டியதை பணப்போராட்டம் என்பதா? இல்லை, மனப்போராட்டம் என்பதா?


           குடும்ப அரசியல் என்பது அதிகாரத்திற்கு அழைத்து செல்லும் குதிரை வண்டியா? அல்லது ஜெயிலுக்கு ஏற்றி செல்லும் கழுதையா? தீர்மானிக்கப்பட வேண்டிய கருணாநிதி என்ற அனுபவசாலியிடமிருந்த கயிற்றினை சோனியா பிடித்துக்கொண்டு   கருணாநிதியின் கழுத்தை இறுக்கிறார்.கல்மாடிக்கு கல்தா கொடுத்து காங்கிரஸ் ஊழலுக்கு எதிரானது என காட்டி,ஸ்பெக்ட்ரத்தின் மூலம் அதை உறுதி செய்ய சோனியா முயற்சிக்கிறார்.வேலியில் போகும் ஓணானைப் பிடித்திருந்தால் பரவாயில்லை...முதலையை அல்லவா? பிடித்து உள்ளுக்குள்ளே விட்டு இருக்கிறார்கள்.


                 இதே பிரச்சனையில், எனக்கு தயாளும், கனிமொழியும் ஒன்றுதான் என நிருபிக்க கருணாநிதி பாடாதபாடு படுகிறார்.தயாளு அம்மாளை சாட்சி என்ற வகையில்  கொண்டுவர பட்ட கஷ்டம் அதை முன்னின்று அரங்கேற்றிய டி.ஆர். பாலுக்குத்தானே தெரியும்.


                 இதை தமிழக மக்கள் கண்டுகொள்ள மாட்டார்கள். ஆனால், சாய்பாபா பக்தர்கள் இதை கௌரவ பிரச்சனையாக எடுத்துக்கொள்வார்கள். உலகமே! சாய்பாபா இறந்த சோகத்தில் மூழ்கி இருக்கும் போது, நேரம் காலம் தெரியாமல், உலகமே சிரிக்கும் வண்ணம் 'தீக்குளிக்கப்போகிறோம்'  என தமாஷ் செய்வதா?

எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது...

முதல் வரி ஸ்பெக்ட்ரம் ஊழல் - நன்றாகவே நடந்தது
இரண்டாவது வரி - சிபிஐ விசாரணை

பகவான் கிருஷணர் சொன்னது இதற்காகவோ!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...