Wednesday, May 4, 2011

ஜெயலலிதா ஜாதகம் என்ன சொல்கிறது..?

ஜெயலலிதா ஜாதகப்படி அவர் எதிர்காலம் எப்படி இருக்கும்..?அவர் ராசி நிலை எப்படி..?என்பது பற்றி அறிய விரும்பினேன்...ஒரு நண்பர் மூலமாக அவரது ஜாதக குறிப்பு கிடைத்தது.
 

ஜெயலலிதா பிறந்ததேதி;24.2.1948
பிறந்த நேரம்;1.30 மாலை.
இவரது நட்சத்திரம் ;மகம்
ராசி;சிம்மம்
 
மகத்தில் பிறந்தவர் ஜகத்தை ஆளுவார் என்ற ஜோதிட பழமொழி..இது யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ இவருக்கு நன்றாகவே
பொருந்துகிறது....இரண்டு முறை தமிழக முதல்வராக இருந்தவர் அல்லவா..?

மகம் நட்சத்திரம் சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு குடும்ப வாழ்க்கை சிறப்பில்லை.
ஆனால் பொது வாழ்வு,மக்கள் தொண்டு மிக சிறப்பாக அமைந்துவிடுகிறது.
 
இவர்களது பலவீனம்;முன்கோபம்,பிடிவாதம்.
 
அறிவாற்றலை பொறுத்தவறை நிறைய உலக ஞானம் உண்டு.
 
மகம் கேதுவின் நட்சத்திரம் என்பதால் வாழ்வில் போராட்டம் நிகழ்த்தி,கசப்பானஅனுபவங்களை தந்து,வாழ்க்கை பற்றிய புரிதல்களை தரும் கிரகம் கேது.
 
சிம்மம் ராசி அதிபதி சூரியன்..நெருப்பு போல சுட்டெரிக்கும் கோபத்துக்கு இவரே காரணம்.
 
சிம்மம் என்றால் சிங்கம்..அதனால் யாரும் இவர்களை நெருங்க முடியாது..துணிச்சலும்,தன்னம்பிக்கையும் மிக அதிகம்...
சிறை சென்றாலும்,முகத்தில் ஒரு கம்பீரம் இருக்கும்..’’அய்யோ’’ என அலற மாட்டார்கள்.

மகம் நட்சத்திரம்,சிம்மம் ராசிக்கும் இதுவரை ஏழரை சனி நடந்து வந்தது..சாதராண மனிதர்கள் சிம்ம ராசியாக இருந்தால்,கடந்த 5 ஆண்டுகளில் பட்ட துன்பத்திற்கு மரணமே தேவலாம் என்ற நிலைக்கு வந்திருப்பார்கள்.அந்தளவு துன்பத்தை சிம்ம ராசிக்கு ஏழரை சனி கொடுத்து இருக்கிறார்.
 
என் வாடிக்கையாளர்கள் சிம்ம ராசிக்காரர்கள் ,இந்த காலகட்டத்தில்,பலர் தொழில் இழந்து,வருமானம் இழந்து,குடும்பத்தில் நிம்மதி இழந்து தவித்து,கண்ணீர் விட்டதை நான் கடந்த காலங்களில் பார்த்திருக்கிறேன்..அந்த வகையில் ஜெயலலிதா ஆட்சியை இழந்து,தன் சொந்த கட்சிக்காரர்கள் அணி மாறுவதை கண்டு,உடல் நலம் ஆரோக்கியம் குன்றியும்,செல்வாக்கு குறைந்தும் துன்பப்பட்டதை ..பார்த்தோம்,கேள்விப்பட்டோம்.

ஆனால் இந்த நிலை,வரும் மே8 ஆம் தேதியுடன் மாறுகிறது..ஆம் குருப்பெயர்ச்சி சிறப்புடன் இவர் ராசிக்கு சாதகமாக உள்ளது...சிம்ம ராசிக்கு பாக்கியஸ்தானத்தில் மாறும் குரு,சகல பாக்கியங்களையும் அள்ளித்தருவார் என்பதில் சந்தேகமில்லை.

பாக்கியஸ்தானம் என்றாலே அது தெய்வஸ்தானம் மற்றும் பித்ருக்களின் ஆசி என்றுதான் பொருள்...தன் முயற்சிக்கு தெய்வம்,முன்னோர்கள்
துணை நிற்பார்கள்..இதனால் வெற்றி இவர்களுக்கு சுலபம்.

இதுவரை எண்ணி வந்த காரியங்கள் இவருக்கு கைகூடும் நாள் நெருங்கி விட்டது.

இதுவரை துன்பப்படுத்திய ஏழரை சனியும் வரும் ஐப்பசி மாதத்துடன் முடிகிறது..சனிபகவான் செல்லும்போது ஏதாவது நன்மையை செய்வார் என்ற முறையில்,

பெரிய அளவில் இவருக்கு நன்மைகள் கிடைக்கும்.

இதுவரை இவரை சூழ்ந்த எதிரிகளின் சூழ்ச்சி வலையில்,அவர்களே மாட்டிக்கொள்வார்கள்.
 
இழந்த செல்வாக்கு ,புகழ் மென்மேலும் வளரும்.
 
இவரது ஜாதகத்தில் குருச்சந்திர யோகம் உண்டு..குரு ஒன்பதாம் பார்வையாக சந்திரனைபார்வையிடுகிறார்..தற்சமயம் சந்திர புக்தி நடக்கிறது..அரசியல் கிரகம் செவ்வாயுடன் இணைந்திருக்கும்,
சந்திரனை குரு பார்க்கிறார்..குரு,சந்திரன்,செவ்வாய்..மூன்று தெய்வீக கிரகங்களும் இணையும் ஸ்தானத்தில் ,அக்கிரகங்களில் ஒன்றின் திசா புக்தியில் மாபெரும் வெற்றி கிடைக்கும் என்பது விதி.

ராகுதிசை நடக்கிறது.ராகுவைப்போல கொடுப்பார் இல்லை என்பார்கள்.அதன் அடிப்படையிலும்,ராகுவையும் குரு பார்க்கிறார்
என்ற அடிப்படையிலும் இவர் நீண்ட நாள் கனவு நிறைவேறும் காலகட்டம் இது.


ஜாதகத்தில் ஏழாம் பாவகத்தில் குரு தனித்து நின்றதாலும் ராசிக்கு ஏழாம் வீடு சனி வீடு என்பதாலும் குடும்பம் இவருக்கு அமையவில்லை..இவரே தோழியராக சசிகலாவை,தன்னுடன் தங்க வைத்து அவர் குடும்பத்துக்கு ஆதரவு அளித்தாலும் அவர்கள் மூலம் இவருக்கு பிரச்சனை வரும் என்பதும் இவர் ஜாதகம் சொல்கிறது...இவருக்கு சுக்கிரன் உச்சம் என்பதால்தான் சினிமாத்துறையில் புகழ் பெற்று இருந்தார்..முக ராசியால் மக்களை கவர்ந்தார்...ஆடம்பரமாக வாழ்கிறார்...ஹெலிகாப்டரில் பறந்து வந்து ஓட்டு கேட்கிறார் என்றால் உச்சம் பெற்ற சுக்கிரனே காரணம் ஆகும்...

வாக்கு ஸ்தானத்தில் சனி இருப்பதால் உறுதியான பேச்சு..எதிரிகளை துவம்சம் செய்யக்கூடிய ,நடுங்க செய்யும் குரல்,இரண்டில் உள்ள சனி தருகிறது..ஆனால் அதுவே இவரது பலவீனத்துக்கும் காரணமாகிறது...சனி சந்திரன் வீட்டில் இருப்பதால் அலட்சியம் மிக அதிகம்..மனக்குழப்பத்தால் முக்கிய நேரங்களில் பெரிய வாய்ப்புகளை இழந்து விடும் ஆபத்தும் உண்டு.


சூரியன்,புதன் இணைந்து நின்று...நிபுணத்துவ யோகம் தருகிறார்கள்..எதிலும் ஆய்வு செய்தே இறங்குவார்....இவர் என்ன செய்யப்போகிறாரோ என எதிரிகளை தினசரி தூங்க விடாமல் அச்சம் கொள்ள செய்வார்.


பத்தில் சுக்கிரன்..இவரது லக்கினத்துக்கு யோகாதிபதி சுக்கிரன் பத்தில் நின்றதால் உச்சம் பெற்றதால் ,இவர் ஆட்சி புரியும் காலம் மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள்..கலைத்துறைக்கு முன்னேற்றம்,வசதி வாய்ப்புகள் உண்டாகும்.


எட்டு,ஒன்பதாம் அதிபதி சனி இரண்டில் நின்று..இரண்டுக்கு உடையவன் மூன்றில் நிற்பதால் தான் கோடிக்கணக்கான தன் கட்சித்தொண்டர்களை தைரியமுடன்,உற்சாகத்துடன் வைத்திருக்க முடிகிறது...மக்கள் இவர் குரல் கேட்டதும் புத்துணர்ச்சி அடைகின்றனர்...ஹெலிகாப்டரில் வந்து இறங்கினாலும்,தலைக்கனம் பிடித்தவர் என்றேண்ணி இருப்பவர்களும் ஓடி வந்து இவர் பேச்சை கேட்கின்றனர்.இதற்கு சனி புதன் சாரம் பெற்றதும் ஒரு காரணம்.


ராகு திசை முடிந்து குரு திசை வரும் காலம்...இவர் இன்னும் பக்குவப்படுவார்.....






ஜெயலலிதா ஜாதகப்படி குரு ராசிக்கு ஒன்பதாம் இடத்தை அடையும் நாள்;மே-8

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...