Tuesday, May 31, 2011

பணக்கார பரத்தைகளும், சாராய வியாபாரிகளும் சமூகத்தில் பெறும் மரியாதை ………

கீழே சில படங்கள்  -
அவை  எடுக்கப்பட்டது -
ஐபிஎல் கிரிக்கெட் பந்தயத்தின்போது !
அவற்றில் முக்கிய இடம் பெற்றிருப்பவர்கள் -
இந்தி நடிகை -  தீபிகா படுகோனே
“தொழில்” அதிபர் -  விஜய் மல்லையா
மற்றும்  அவர்  மகன் !

- தலைப்பிற்கு வருவோம்.
ஒரு பக்கம்  -
1)  இரவு நேரங்களில் -  சாலை  ஓரங்களில்,
பஸ்  நிலையங்களில்,  ரெயில் நிலையங்களில் -
மலிவான  லாட்ஜுகளில்,
அரை இருட்டான  இடங்களில்
தலையில் வாசனைப் பூவுடன்,
அரைகுறையாக பவுடர் பூசிய முகத்துடன்
வயிற்றுப் பிழைப்பிற்காக
உடலை விற்கும்  வேறு வழியற்ற /
வக்கற்ற பெண்கள் ….

2)  ஊருக்கு ஒதுக்குப்புறமான இடங்களில்,
கிராமங்களுக்கு வெளியே – புதர் வெளிகளில்
பூச்சி பொட்டுகளுக்கு இடையில், வியர்க்க
விருவிருக்க  பயந்து பயந்து  சாராயம்   விற்கும்
கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் / விற்பவர்கள் -

இவர்கள்  சந்திக்கும் இன்னல்கள் எத்தனை எத்தனை?
இடைத்தரகர்களுக்கு  காசு,
பிடிக்கும் போலீஸ்காரர்களுக்கு  மாமூல்,
காரியம் ஆவதற்காக
பலர் இவர்களை நாடினாலும்,  
காரியம் முடிந்த பிறகு பார்க்கும் பார்வை  -   
சமுதாயத்தில் இவர்கள்
பெறும்  இடம்  …….அந்தஸ்து ..

இன்னொரு பக்கம் -
1) முதலில்  கூறிய  பெண்  செய்த அதே செயலை -
ஆளை மயக்கும் அலங்காரங்களுடன்,
சொக்க வைக்கும் வாசனை பூச்சுகள் துணையுடன்
பசையுள்ள  வாலிபர்களாகத் தேடி அலைந்து,
பசை போல் ஒட்டிக்கொள்ளும்  அணங்குகளும்-

ஆயிரக்கணக்கானோர்  கூடியுள்ள  ஒரு
விளையாட்டு நிகழ்ச்சியில்,
பல கோடி மக்கள் தொலைக்காட்சியில்
நேரடியாகப்  பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்  என்று
தெரிந்தும் கோடீஸ்வர தந்தையின் குலக்கொழுந்து
என்கிற  ஒரே காரணத்திற்காக ( அவனும்
அவனது அப்பனும் எவ்வளவு அசிங்கமாக  
இருந்தாலும் கூட ) வலிய  இணைந்து கட்டிப்பிடித்து
உதடுகள் இணைய  – பலர் பார்க்க -
முத்தம் கொடுக்கும்  பணக்கார  பரத்தைகளும் -

2) இரண்டாவதாக கூறிய -
அதே  சாராயம் காய்ச்சும் தொழிலை -
அரசியல்வாதிகளுக்கு லஞ்சமும்,  
அரசுக்கு  பணமும்  கொடுத்து
லைசென்ஸ்  என்று ஒன்றை  வாங்கி -
லட்சக்கணக்கில் பேரல் பேரல்களாக தொழில் முறையில்
உற்பத்தி  செய்து விற்கும்  சாராயத் தொழிற்சாலைகளின்
உரிமையாளர்களான  “தொழில் அதிபர்” களும் -

ஆக – இரண்டு  பகுதிகளிலும் கூறப்பட்டுள்ள  நபர்கள்
செய்வது  ஒரே தொழிலைத் தான்.
ஆனால் சமுதாயத்தில் அவர்கள்  பெறும்
செல்வாக்கு,  பணம்,  அந்தஸ்து ?
எவ்வளவு பெரிய வேறுபாடு ?

வயிற்றுப் பிழைப்பிற்காக, வேறு வழி தெரியாமல்
இந்த இழி தொழிலை செய்யும் -
முதல் பகுதியில்
கூறப்பட்டிருக்கும்  பெண்ணோ, வியாபாரியோ   -
நம் சமுதாயத்தால் எவ்வளவு கேவலமாக
நினைக்கப்படுகிறார்கள்; நடத்தப்படுகிறார்கள் ?

அதே தொழிலை  பகட்டாகவும்,
வெளிப்படையாகவும்
செய்யும் இரண்டாவது பகுதியில் கூறப்பட்டிருக்கும் -
நபர்கள்  சமுதாயத்தில் பெறும் செல்வாக்கு,
பணம், அந்தஸ்து என்னென்ன ?

பணத்திற்காக  ஆறு மாதங்களுக்கு  ஒரு பணக்காரனை மாற்றிக்கொண்டே இருக்கும் அந்த
பணக்கார பரத்தைக்கு பெயர் -
புகழ்பெற்ற மாடல்,
திரை வானில் ஜொலிக்கும் நட்சத்திரம் -
அழகு தாரகை !

அந்த சாராய வியாபாரிக்கு பெயர் -
“தொழில் அதிபர்”.
வயது  அறுபதைத் தொட்டாலும்,
காதில் வளையத்தோடும், குறுந்தாடியோடும்
மைனராகத் திரிபவர்  ஒரு பாராளுமன்ற உறுப்பினர் வேறு.
அவர் பாக்கெட்டில் பல எம் எல்  ஏக்கள்,  எம் பி  க்கள் !
(35  எம்  எல்  ஏ க்கள்   ஓட்டு போட்டு அவரை ஒரு
ராஜ்ய சபா  சுயேச்சை  உறுப்பினராக
தேந்தெடுத்திருக்கிறார்கள் ! )

சாராயத்தில்  விளைந்த பணத்தில்,
எம்.பி. பதவி, அரசாங்கத்தில் செல்வாக்கு,
விமான கம்பெனி, தொழிலதிபர் பட்டம்.
பற்றாக்குறைக்கு -
கடைசியாக ஐபிஎல்  சூதாட்டம் வேறு !

மனசாட்சி  சுடுகிறது -
யார்  காரணம்  இந்த இழி  நிலைக்கு ?
சற்றும் தகுதி அற்றவர்களுக்கு எப்படி
இத்தனை  பணம், பதவி, புகழ், செல்வாக்கு ?
நம் சமூகம்  ஏன்  போலிகளைத் தாங்குகிறது -
கொண்டாடுகிறது ?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...