Thursday, May 19, 2011

ஆட்சி மாற்றம் - புத்துயிர் பெறுமா தமிழ்‌த் திரையுலகம்?

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. அரசியல்வாதி என்பதைவிட சினிமாக்காரன் என்று சொல்லிக் கொள்வதையே விரும்புகிறேன் என்று அறிவித்த கலைத்தாகம் கொண்ட கருணாநிதி பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்டிருக்கிறார். நியாயமாக கருணாநிதியின் பின்னடைவு திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியிருக்க வேண்டும். மாறாக 90 சதவீத திரையுலகினர் இதனை பெரும் உவகையுடன் கொண்டாடி வருகின்றனர். கருணாநிதியின் கலைத்தாகம் அவரது குடும்பத்துக்கு - குறிப்பாக பேரன்களின் சுயநல அறுவடைக்கே பெரும்பாலும் பயன்பட்டது.

பேரன்களை பற்றிய பேச்சு வரும் போதெல்லாம் கருணாநிதி உதாரணங்கள் காட்டினார். மெய்யப்ப செட்டிய
ா‌ரின் பிள்ளைகள் சினிமா தயா‌ரிக்கவில்லையா? சிவகுமா‌ரின் பிள்ளைகள் நடிக்கவில்லையா? ர‌ஜினியின் மகள் தயா‌ரிப்பாளராகவில்லையா... ? என் பேரன்கள் சினிமாவுக்கு வந்தால் மட்டும் சிலருக்கு ஏன் இந்த நெஞ்செ‌ரிச்சல்?

எத
ி‌ரியை புன்னகையுடன் எதிர்கொள்வதாக தம்பட்டம் அடித்தவரால் இந்த வாரிசு பிரச்சனையில் புன்னகைக்க முடியவில்லை. மனக்கசப்பும், வெறுப்புணர்வும் அவரது பதில்களில் வழிந்தோடியது. அவருக்கே தெ‌ரியும், நாம் சொல்லும் உதாரணங்கள் எத்தனை அபத்தமானவை என்று. அதுதான் இந்த கோபம், நெஞ்செ‌ரிச்சல்.

ா‌ரிசுகள் சினிமாவுக்கு வருவது தவறல்ல. அது தடுக்கக் கூடியதும் அல்ல. கருணாநிதியின் பேரன்கள் சினிமாத்துறைக்கு வந்ததல்ல பிரச்சனை. அதிகார பின்புலத்தில் தங்களைத் தவிர வேறு யாரும் தொழில் செய்ய முடியாதபடி அவர்கள் திரைத்துறையை முடக்கினார்கள். கருணாநிதி குறிப்பிடும் வேறு எந்த வா‌ரிசுகளும் இந்த சர்வாதிகார பாதையில் சஞ்ச‌ரித்ததில்லை. ஆட்சி அதிகாரம் என்ற பிரம்பு கருணாநிதியின் பேரன்களுக்கு மட்டுமே வாய்த்திருந்தது.

கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் ஏறக்குறைய 240 திரையரங்குகளை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் கைவசம் ஏறக்குறைய 170 திரையரங்குகள். தயாநிதி அழக
ி‌ரியின் கிளவுட் நைன் கைவசம் சுமார் 140 திரையரங்குகள். இந்த மூன்று நிதிகளில் ஏதேனும் ஒருவ‌ரின் ஆசி இன்றி ஒருவர் படத்தை தமிழ்நாட்டில் வெளியிட முடியாது. மீறி வெளியிட்டவர்களுக்கு எல்லாவகையிலும் நெருக்கடிகள் கொடுக்கப்பட்டன.

கருணாநிதியின் பேரன்கள் ஒரு படத்தை விரும்பினால் அவர்கள் விரும்பும் விலைக்கு அந்தப் படம் அவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டும். மீறி திரையரங்குகளில் நேரடியாக திரையிட்ட போதெல்லாம் திரையரங்கு உரிமையாளர்கள் மிரட்டப்பட்டார்கள். லாபம் ஈட்ட முடியும் என்று நம்பக்கூடிய படங்கள் அனைத்தும் நிதிகளால் வாங்கப்படும் சூழலில் திரையரங்கு
உ‌ரிமையாளர்கள் இந்த மிரட்டலுக்கு அடிபணிவதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை.

தங்களுக்கு உடன்படாதவர்களை மிரட்டுதல், அவர்களின் படங்களை இருட்டடிப்பு செய்தல், நடிகர்களுக்கு கால்ஷீட் நெருக்கடியை உருவாக்குதல், சங்கத்தின் விதிகளை தேவைக்கேற்ப வளைத்தல் என்று முன்னாள் முதல்வ‌ரின் பேரன்கள் நடத்திய சர்வாதிகார சூதாட்டம், ஆட்சி மாற்றத்தால் காலாவதியாகியிருக்கிறது. நிதிகளின் ஆதிக்கம் தமிழ்‌த் திரைத்துறையில் முழுமையாக ஒழிக்கப்படும் என்பதில் ஐயமில்லை.
சினிமாவுக்கு சவாலாக இருக்கும் திருட்டு டிவிடி பிரச்சனையும் கட்டுக்குள் வரும் என்பது பல‌ரின் நம்பிக்கை. பேரன்களின் படங்களின் டிவிடிகள் மட்டும் விற்கக்கூடாது, மற்றவற்றுக்கு தடையில்லை என்பதான ஆபாச உடன்படிக்கைக்கு இனி வழியிருக்காது. இப்படி சொல்வதன் பொருள் புதிய ஆட்சியில் திரைத்துறையில் சர்வாதிகாரமோ, சுயநலச் சுரண்டல்களோ இருக்காது என்பதல்ல. ஆட்சி மாற்றத்தின் மூலம் அதிகாரமும், ஆட்களும் மாறியிருக்கிறார்கள் அவ்வளவே.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...