Wednesday, May 25, 2011

விக்கிலீக்ஸ்:கருணாநிதி உண்ணாவிரதம் மின்வெட்டை திசை திருப்பவே!’தயாநிதி மாறன்


விக்கிலீக்ஸ்:கருணாநிதி உண்ணாவிரதம் மின்வெட்டை திசை திருப்பவே!’தயாநிதி மாறன்




இலங்கைத் தமிழர் பிரச்சனைக்காக கருணாநிதி உண்ணாவிரதம் மேற்கொண்டது காங்கிரசை ‘பிளாக்மெயில்’ செய்வதற்கான முயற்சியே என்றும், இதற்கு காங்கிரஸ் தக்க தருணத்தில் பதிலடி தரும் என்றும் திமுவைச் சேர்ந்த மத்திய ஜவுளித்துறை அமைச் சரான தயாநிதி மாறன் அமெரிக்கத் தூதரக கன்சுலேட் ஜெனரலிடம் தெரிவித்துள்ளார்.

2008இல் திமுக-வுடன் மீண்டும் சேர்வதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு, திமுக நாடாளுமன்ற உறுப்பினரான தயாநிதி மாறன் அமெரிக்கத் தூதரக கன்சுலேட் ஜெனரலிடம் இவ்வாறு கூறியிருக்கிறார். இலங்கைத் தமிழர் பிரச்சனை தொடர்பாக முன்னாள் முதல் வர் கருணாநிதியின் ராஜி னாமா அச்சுறுத்தல் ஒரு ‘நாட கம்’ என்றும், தமிழ்நாட்டில் மின்சார நெருக்கடி காரணமாக மக்கள் மத்தியில் நிலவும் கோபத்தைத் திசை திருப்ப வேண்டும் என்பதற்காக இவ் வாறு மேற்கொள்ளப்பட்டதாக வும், அவரது ‘பிளாக்மெயில்’ முயற்சியானது காங்கிரஸ் தலை வர் சோனியா காந்தியிடமி ருந்து திமுகவைத் தனிமைப் பட வைத்திருக்கிறது என்றும் தயாநிதி மாறன் கன்சுலேட் ஜெனரலிடம் மேலும் குறிப் பிட்டிருக்கிறார்.

2008 நவம்பர் 3 அன்று சென்னை, அமெரிக்கத் தூதர கத்தில் உள்ள கன்சுலேட் ஜென ரல் ஆண்ட்ரு டி.சிம்கின் என் பவர் மூலம் அமெரிக்க அரசாங் கத்திற்கு ஒரு கேபிள் அனுப் பப்பட்டிருக்கிறது. அதில் அன் றைக்கிருந்த நிச்சயமற்ற நிலைமையில் திமுக என்ன செய்யும் என்பது குறித்து தயா நிதி மாறன், காங்கிரஸ் தலை வர் பீட்டர் அல்போன்ஸூடன் தன் கருத்துக்களை மனந் திறந்து வெளிப்படுத்தி இருக்கிறார்.

கேபிளில் அனுப்பப்பட்டுள்ள செய்திகளின்படி, ‘‘2007 இல் தன்னுடைய தாத்தா கரு ணாநிதியால் மத்திய டெலிகாம் அமைச்சர் பொறுப்பிலிருந்து கழட்டிவிடப்பட்ட தயாநிதி மாறன், முதலமைச்சரின் ராஜினாமா அச்சுறுத்தல் வீணான ஒன்று என்று ஒப்புக்கொண்டி ருக்கிறார். மேலும் அது கருணாநிதியால் அரங்கேற்றப் பட்ட ஒரு ‘நாடகம்’ என்றும், முதல் வரிடம் தான் கருத்து வேறு பாடு கொண்டிருந்த போதும், தானும் கூட ராஜினாமா கடிதம் தந்ததாகவும் தயாநிதிமாறன் குறிப்பிட்டிருக்கிறார். தற்சம யம் மாநிலத்தில் உள்ள மின்சார நெருக்கடி காரணமாக மக்கள் மத்தியில் முன்னெப் போதும் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ள கோபத்திலிருந்து, அவர்களைத் திசை திருப்ப வேண்டும் என்பதே கருணாநிதியின் பிரதான குறிக்கோள் என்று மாறன் கூறினார்.

கன்சுலேட் கேபிள் குறிப்பிட்டுள்ளபடி ‘‘கருணாநிதியின் இத்தகைய ‘பிளாக் மெயில்’ முயற்சியானது, காங்கிரஸ் உயர்மட்டத் தலைவர்களி டம் குறிப்பாக சோனியா காந்தியிடம் கசப்புணர்வை ஏற்படுத்தி இருக்கிறது,’’ என்று மாறன் தெரிவித்திருக்கிறார். முதல்வர் கருணாநிதியுடன் வெளியில் விசுவாசமாக இருப்பதுபோல் பாவலா செய்தாலும், உள்ளுக்குள் தன்னல நோக்கம் கொண்டிருந்த மாறன், ‘காங்கிரஸ் தன்னுடைய காழ்ப் புணர்ச்சியை மனதில் வைத்திருந்து, தக்க சமயத்தில் பதிலடி கொடுக்கும்’ என்றும், ‘புண்பட்ட மனதின் காரண மாகத்தான் சோனியா காந்தி சமீபத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினரான கருணாநிதியின் மகள் கனிமொழியைச் சந்திக்க மறுத்துவிட்டார்,’’ என்றும் கூறியுள்ளார்.

காங்கிரஸ் உறுப்பினரான பீட்டர் அல்போன்ஸ், சென்னை கன்சுலேட் கேபிளில் உள்ள கூற்றின்படி, ‘‘கருணாநிதி எந்தக் காலத்திலும் ஐ.மு.கூட்டணியிலிருந்து தன் நாடாளுமன்ற உறுப்பினர்களை இழுத்துக் கொள்ள விரும்பவில்லை’’ என்று கூறியிருக்கிறார்.

காங்கிரஸ் தலைவர்களின் கருத்தும் ‘‘திமுக, ஐ.மு.கூட்டணியுடனும், காங்கிரசுடனும் ஒட்டிக் கொண்டிருப்பதைத் தவிர வேறு வழியில்லை’’ என்பதாகவே இருந்தன.

இத்தகைய அரசியல் மதிப்பீடுகளின் உதவியுடன் சென்னை கன்சுலேட் அமெரிக்க அரசாங் கத்திற்கு ஒட்டுமொத்தமாக அனுப்பியுள்ள கேபிளில் விமர்சனங்களை அனுப்பி யிருக்கிறது. அதாவது, ‘‘கருணாநிதியினுடைய திமுக மற்றும் காங்கிரஸ் பரஸ்பரம் சுய நலத்திற்காக ஒத்துப்போக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டி ருக்கிறது. கருணாநிதிக்கு தான் தமிழ்நாட்டு முதல்வராக நீடித் திட காங்கிரசின் தயவு தேவைப் படுகிறது. அதேபோன்று புது தில்லியில் ஐ.மு.கூட்டணி ஆட்சியில் நீடிக்க காங்கிரஸ் கட்சியானது திமுக-வைச் சார்ந்திருக்க வேண்டியிருக்கிறது. இதன் விளைவாக, கருணாநிதியால் தயாரித்து அரங்கேற்றப்பட்ட அரசியல் நாடகம், மத்திய அரசாங்கமானது அவரை காப்பாற்றிக் கொள்ளக்கூடிய வகையில் நடவடிக்கைகளை எடுத்ததற்குப் பின்னால், ராஜினாமாக்கள் தேவையில்லை என்பதுடன் அமைதியாக முடிவுக்கு வந்தது. ...’’

இவ்வாறு ‘தி இந்து’ நாளிதழ் கூறியுள்ளது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...