Thursday, May 26, 2011

கலைஞர் கருணாநிதி செய்த கடைசி தவறு !

கலைஞர் கருணாநிதி செய்த கடைசி தவறு !

 
தி.மு .க. வளர்வதற்கு பெரும் பங்கு வைத்த ஐந்து தி.மு.க.தலைவர்களில் கலைஞர் கருணாநிதியும் ஒருவர்.
இந்த தேர்தலில் தி.மு .க 119 இடங்களில் மட்டும் போட்டியிட வைத்தது கலைஞர் கருணாநிதி செய்த மிகப் பெரிய தவறு.
தனி பெரும்பான்மைக்கு தேவையான இடங்களில் கூட போட்டி போடாத நிலையில் தனது கட்சியின் வலிமையினை தானே மதிக்காமல் போனது,
கடந்த கால ஆட்சியில் இனாம் கொடுத்த பழக்கம் தொகுதி பங்கீட்டிலும் தொடர கட்சிக்காக உழைத்த தொண்டர்கள் மத்தியில் வெறுப்பினை உண்டாகியது .அதனால் தி.மு .க தொகுதி கிடைக்காதவர்கள் தி.மு .க கூட்டு கட்சிக்கு வோட்டு போடவில்லை.
தமிழ்நாடு காங்கிரஸ்  தலைவர்களின் ஒற்றுமை அனவருக்கும் தெரியும். தலைமை வழிதான் தொண்டர்களின் வழி . ஒருவழியாக தானும் தோற்று தி.மு .க.வையும் தோல்வியடைய வழி செய்து விட்டனர் . 
ஜாதி அமைப்பு கூடாது என்று முற்போக்கு கொள்கை பேசும் கொள்கைக்கு குழி தோண்டி ஜாதி கட்சிகளுக்கு தொகுதி கொடுத்து தானே குழி தோண்டி தி.மு .க. வை புதைக்க வழி செய்து விட்டார்.
தி.மு .க. அரசு செய்த பல நல்திட்டங்கள் மக்கள் மத்தியில் எடுபடாமல் போனதிற்கு முக்கிய காரணம் தேர்தல் நேரத்தில் மின்சார பற்றாக் குறையும், குடும்ப வாரிசுகளுக்கு அனைவருக்கும் முக்கிய பதவி கொடுத்து  மற்றவருக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்ற எண்ணம் உண்டாகும்படி செய்த நிலை.
தமக்கு வயதாகிவிட்டது என்ற காரணத்தால் அனைவரையும் அரவணைத்து செல்ல நாட்டம் கொண்டு தவறு செய்பவர்களை கண்டு கொள்ளாமல் போனது.  இனாம் கொடுத்தால் வாக்குச் சீட்டு  வந்து விழும் என்ற தவறான கொள்கைக்கு அடிமையானது.
சிறப்பாக கொள்கை பேசுபவர்களை தவிர்த்து காமடியர்களை தனிப்பட்ட விரோதத்தினை பேச இடம் கொடுத்தது தி.மு .க. வின் கொள்கைக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருந்தது .
மற்றவர்களை பிளவு படுத்த எண்ணி தாங்களே பிளவு ஏற்பட வழி வகுத்தது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...