Thursday, May 26, 2011

தரமாக இல்லாததால் சமச்சீர் கல்வி நிறுத்தம்: அரசின் முடிவுக்கு தனியார் கல்வி நிறுவனங்கள் ஆதரவு

தரமாக இல்லாததால் சமச்சீர் கல்வி திட்டத்தை நிறுத்தியுள்ள தமிழக அரசின் முடிவுக்கு தனியார் கல்வி நிறுவனங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. சமச்சீர் கல்வி நீக்கத்தை வரவேற்று முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் சங்கத் தலைவர் கே.ராஜன் ஒரு மனுவை அனுப்பி உள்ளார்.
 தரமாக இல்லாததால் சமச்சீர் கல்வி நிறுத்தம்: அரசின் முடிவுக்கு தனியார் கல்வி நிறுவனங்கள் ஆதரவு
 அதில் அவர் கூறி இருப்பதாவது:- கடந்த ஆட்சியில் எல்லா மாணவர்களுக்கும் சமமான கல்வி வழங்குவதாக கூறி சமச்சீர் கல்வி திட்டத்தை கொண்டுவந்தனர்.
 
ஏழைகளை பணக்காரர்கள் ஆக்குவதற்குப் பதில் பணக்காரர்களை ஏழைகள் ஆக்குவதை போல தரமான கல்வி போதித்துவந்த தனியார் பள்ளிகளை அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளின் தரத்திற்கு குறைப்பதுதான் சமச்சீர் கல்வி திட்டம். மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் எதிர்கால ஏக்கங்களுக்கு ஈடுகொடுக்க முடியாத சமச்சீர் கல்வி திட்டத்தை மாற்றி, மற்ற மாநிலங்களுக்கு இணையாக புதிய கல்வித்திட்டத்தை உருவாக்கி, கல்வித்துறையில் அனைவரும் ஏற்கும் வகையில் புரட்சி ஏற்படுத்துவீர்கள் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
 
 தரம் குறைந்த சமச்சீர் கல்வி திட்டத்தை நிறுத்தி, கல்வியின் தரத்தை உயர்த்த வல்லுனர் குழு அமைக்கப்படும் என்று அறிவித்த உங்களுக்கு நன்றி. இவ்வாறு அந்த மனுவில் கே.ராஜன் கூறி உள்ளார். அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் நிறுவன தலைவர் பி.டி.அரசகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
 
 கட்டாய தமிழ்வழிக்கல்வி பாடத்திட்டத்தில் தோற்றுப்போன தி.மு.க. அரசு, தனியார் பள்ளிகளை பழிவாங்கும் நோக்கில் அவசர அவசரமாக பல்வேறு குளறுபடிகளுடனும் பாடத்தொகுப்பில் பிழைகளுடனும் சமச்சீர்கல்வி என்ற பெயரில் புதிய பாடத்திட்ட முறையை யாரையும் கலந்து ஆலோசிக்காமல் குழந்தைகளிடம் திணிக்க முயன்றதை முதல்- அமைச்சர் ஜெயலலிதா தடுத்து நிறுத்தி லட்சக்கணக்கான மாணவ- மாணவிகளின் எதிர்காலத்தை இருளில் இருந்து மீட்டுள்ளார்.
 
அவசர அவசரமாக தயாரிக்கப்பட்டுள்ள சமச்சீர் கல்வி பாடத்திட்டம் கல்வி வல்லுனர்களைக் கொண்டு ஆய்வு செய்து மீண்டும் நடைமுறைப்படுத்த முயற்சி மேற்கொள்வதாகவும் அறிவித்து இருக்கிறார். ஆனால், அரசின் மீது குறைகூற வேண்டும் என்பதற்காக புத்தகங்கள் தயாரிக்கப்பட்ட செலவினங்கள் வீணாகின்றன என்று குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால், முதல்- அமைச்சர் ஜெயலலிதா லட்சக்கணக்கான மாணவர்களின் கல்வித்தரத்தையும் பெற்றோர்களின் மனக்கவலையையும் மனதில் கொண்டு உரிய தருணத்தில் சரியான முடிவினை கையாண்டுள்ளார்.
 
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...