Thursday, May 26, 2011

அஞ்சா நெஞ்சனிடமிருந்து மதுரை மீட்கப்படுமா?

மதுரையில் மாநாடு நடத்த அதிமுக பெரும் போராட்டங்களை நடத்தியது. எங்கு திரும்பினாலும் அழகிரி மா நாடு நடத்த விடாமல் தடுத்தார் என்றுச் செய்திகள் வெளியாகின. இருப்பினும் மதுரையில் மாபெரும் மாநாட்டினை நடத்திக் காட்டினார் அம்மா. மா நாட்டின் போது, அதிமுக ஆட்சிக்கு வந்தால் “ அடுத்த அரை மணி நேரத்தில் அழகிரியிடமிருந்து மதுரை மீட்கப்படும்” என்று அறிவித்திருந்தார். 15ம் தேதி ஆட்சிப் பொறுப்பேற்க இருக்கும் அம்மா, மதுரையில் லட்சக்கணக்கான தொண்டர்களிடம் உறுதி கொடுத்ததை நிறைவேற்றுவாரா?
அது மட்டுமா, அஞ்சா நெஞ்சன் அழ்கிரி “ அதிமுக என்ற கட்சியே இருக்காது” என்று சூளுரைத்தார். இதையெல்லாம் “அம்மாவின்” கவனத்திற்கு சம்பந்தப்பட்டவர்கள் கொண்டு செல்வார்களா?
வடிவேலு இனி வெடி வேலுவாக மாறுவாரா? போயஸ் தோட்டத்திற்கு அடிமை ஆவாரா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். நாவே கூசும் அளவிற்கு விஜயகாந்தைப் பேசிய வடிவேலுவிற்கு ஒரு மேட்டரை இவ்விடத்தில் தெரிவிக்க வேண்டியது கட்டாயம். தமிழக சட்டசபையில் எதிர்கட்சி அந்தஸ்து பெற இருப்பது “தேமுதிக”. திமுகவிற்கு அந்த அருகதை கூட கிடைக்காது போல தெரிகிறது மிஸ்டர் வடிவேலு.
அதிமுகவிலிருந்து திமுகவிற்கு தாவியவர்களின் கதி என்னவாகப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். அம்மா என்ன செய்யப்போகிறார்?
டிவிப்பொட்டி வழங்கிய வகையில் பெரிய கமிஷன் கைமாறியதாக பேசிக் கொள்கிறார்கள். டிவிப் பொட்டி வழக்கு வருமா? தொடர்ந்து கைது வருமா? போகப் போகத் தெரியும்.
விஜயகாந்த் தன் பேட்டியில் கேபிள் டிவி அரசுடமையாக்கப்பட்டால், முதலில் மகிழ்வது நான் என்று தேர்தல் வெற்றிக்குப் பிறகு சொல்லி இருக்கிறார். சுமங்கலி கேபிள், மற்றும் ராயல் கேபிள்கள் அரசுடமையாக்கப்படுமா? என்பதையும் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
எப்போதும் திமுகவினர் ஆட்சியை விட்டுச் செல்லும் போது, ஏகப்பட்ட லொல்லுகளை அரங்கேற்றி வைத்துச் செல்வார்கள் என்றுச் சொல்லுகிறார்கள். கஜானாவை கோபாலபுரத்திற்கு கொண்டு சென்று விட்டார்களா இல்லையா என்பதை இனி அம்மாதான் சொல்ல வேண்டும்.
இனி என்ன நடக்கப்போகிறது? பொறுத்திருந்து பார்ப்போம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...