Sunday, May 22, 2011

அழும் கனிமொழி! கலங்கும் கருணாநிதி !! கண்டுக்கொள்ளாத சோனியா




என்ன செய்வது? யாருக்கும் தெரியல்லையா?

 கலைஞரின் புதல்வியே! வருங்கால முதல்வியே! முத்தமிழை முத்தமிட்டவளே! நாளை உமக்கு விசாரணையாம்! நெஞ்சம் துடிக்கிறது!! தஞ்சம் கேட்டும் தடுக்க முடியாமல்   ராமரை வெறுத்த ' நா'  ராம் ஜெத்மலானியை நாடுகிறது. ஏனாம்?
விசாரணக்கு தானே! செல்கிறாய்? விசா எடுக்க இல்லை தானே!
அதற்கு வக்கீல்களின் விலாசம் எதற்கு? தவறு இருந்தால் தண்டனைக்க வேண்டும் என்ற வாதத்தை விவாதமாக்குவது ஏனோ!  நீ அறிந்த உண்மைகளை சொல் உனக்கு தெரியாத பல உண்மைகளை சிபி ஐ சொல்லட்டும். தீர்ப்பை நீதி மன்றம் சொல்லட்டும்..

திருமகளே! நீ  திருடி என்ற கறையை டெல்லி சென்றா, துடைக்க வேண்டும்? நீ துயில் கொண்ட சென்னையிலேயே, நிருபிக்கலாமே!! உம்மை  நம்பிய உம் மக்கள் இதை நம்பமாட்டார்களா?
மக்கள் துகில் உரித்த காட்சிகளை கூட கண்டு திகில் அடைந்ததில்லை!

அம்மணியே! அறிவாலய பெண்மணியே!!
உண்மை எது? பொய் எது? என்ற நிலை தெரியாமல் நீ ராஜா வோடு ராணி நடை நடந்தோயோ?
உன் நடத்தையில் எமக்கு எவ்வித சந்தேகமும் எழவில்லை, நீ உத்தமியே!! எனபது உலகமறிந்த விஷயம்.அதில் விஷம் எப்படி வந்தது?

நூறு கோடி மக்களுக்கு உன் நூறு கோடி பணம் மட்டுமே! பரபரப்பாகிறது.அதை நினைத்தாலே குரல் கரகரப்பாகிறது. திராவிட நாட்டில் உன் 'பெண்மைக்கு' தீங்கு மனத்தால் வந்திருந்திருந்தால் நாடே உமக்காக விட்டிருக்கும் கண்ணீரு... பணத்தால் வந்தமையால் விடமாட்டார் பன்னீரு கூட..

கொடநாடு ராணி சொத்தை விடவா...சுகம் கண்டாய்? என்ன கொடுமை... நீ குறுக்கு வழியில் பணத்தை பட்டுவாடா.. செய்திருந்தால் பட்டுபுடவையில் கவிபாடிய உம் புரட்சிக்கருத்துக்களை பத்திரிக்கை புழுக்கள் அரித்து போகவே செய்யும்.. ஒரு போக சாகுபடியில் நீ...சுகம் காண விழைந்திருப்பாய் திரு(........) மகளே!

உனக்காக கழகம் கலங்கி நிற்கிறது...கழகம் கழற்றிவிட்ட அழுக்கு ராசா சட்டை சிறை முள்ளில் சிக்கி முக்கி தவிக்கிறது. நீ... அந்த பரிசளித்த சட்டை! பரிதவித்து  உம்மையும் பாசத்தில் அழைக்கிறதோ!
நீங்க... அந்த ராசா இல்லையா? இந்த ராசா வா?- சாரி...

நீ தமிழ் சங்கமத்தை வெற்றிப்பெற செய்தாய் எனபதை ஜெயலலிதா கூட மறுக்க மாட்டார். உன் நட்பு சங்கமத்தை எப்படி காப்பாற்ற மறந்தாய்? புகழ் உன் கண்களை மறைக்கவில்லை, குருடாக்கி விட்டதோ!

கலைஞரின் மனமே! கலைஞர் டிவி யின் பணமே!!
ரியால்டி குழுமத்திலிருந்து பணம் மாறிய ரியால்டி உமக்கு தெரியாதா?
'கூட்டு சதி என்று சொல்வோரை மிதித்து விடு பாப்பா' என பாரதிப்பாடை மாற்றி பாடவதா,உன் கவி அழகு?

துரோகம் யாருக்கும் செய்தால் என்ன ! அது துரத்தி பிடிக்கும்..
அது நாய்க்கும் சரி... நமக்கும் சரி விதி ஒன்றுதான்.

ஓடிகிறாய்..ஓடிகிறாய்ய்...ஓணாய் போல சிறை வேலி  ஓரத்திற்கே ஓடிகிறாய்..
இந்த ஓட்டத்தை அப்பா தடுத்திருக்க வேண்டும்....
உன் முக வாட்டத்தை போக்கியிருக்க வேண்டும்..

சிறை எனபது அப்பாவுக்கு புதிதல்ல...ஆனால் மகளை அனுப்புவது புதிதுதானே! முதல் நாள் குழந்தையை பள்ளிக்கு அனுப்பும் பெற்றோருக்கு பிரிவு துயரம் இருப்பது பொதுபுத்திதான்!

அதுவும் நாள் கடந்து போகும் போது துருப்பிடித்த கத்தி தான்!  இதை ராசா விஷயத்தில் கண்டுக்கொண்டோம்...

அழாதே மகளே! சென்று வா!

முடிந்தால் வென்று வா!
இல்லை
முடிந்தளவு தின்று வா!

யாரும் கலங்கிவிட மாட்டோம்... காத்திருப்போம் உமக்காக அல்ல.உண்மைக்காக...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...