Saturday, May 21, 2011

கலைஞரே போதும்?இன்னும் மவுனம் ஏன்??

போதும் கலைஞரே,போதும்....இனியும் திமுகவை அழிக்காதீர்கள்.

தயவு செய்து கட்சி பணியிலிருந்து விலகி, அண்ணாவின் கட்சியை
காப்பற்ற உதவுங்கள்.அது தான் தி.மு.க உடன் பிறப்பின் எதிர்பார்ப்பு.
இனியும் உங்கள் குடும்ப ஊழல்களுக்கு கட்சியை பலிகடா ஆக்காதீர்கள்.


இந்த மாபெரும் இயக்கத்திற்கு வந்த பழிச்சொல் உங்களுடன் களையட்டும்.
சுமரியாதையை இழந்து இனியும் தமிழினத்தை அவமானப்படுத்தாதீர்.

கட்சியின் அடுத்த தலைவனை உடன்பிறப்பு தேர்ந்தெடுக்கட்டும்,
இதுதான் உண்மையான தி.மு.க தொண்டணின் விருப்பம்.அதனால்

தயவு செய்து அரசியலிலிருந்து விலகுங்கள்.

இனியும் "ஒருவர் சிறை சென்றுவிட்டதாலேயே குற்றவாளியாகிவிடமாட்டார்"
என நாக்கை சுழற்றாதீர்.

நாங்கள் பட்டது போதும்...கலைஞரே!!!!

புதிய தலைமைச் செயலகம் விற்பனைக்கு?



ஆமாம்.புதிய சட்டசபை, பழைய கட்டிடமான புனித ஜார்ஜ் கோட்டைக்கே போக உள்ளது.மேலும் இந்த புதிய கட்டிடம் அதிமுக அம்மாவுக்கு
புதுச்சேரி போலிசுகாரரின் "தொப்பி"போலுள்ளதால் பிடிக்கவிலையாம்.


அதனால் அம்மா இந்த கட்டிடத்தில் நுழைவது என்பது கடினமே.ஆகையால்
விற்பனைக்கு வர உள்ளது.

"சர்க்கசு வியாபாரிகள்" யாராவது ஆசைப்பட்டால் குறைந்த
வாடகைக்கும் கிடைக்கும்.

கடைசி வெறி:
மக்களின் வரிப்பணம் எப்படி பாழாய்ப்போகிறது பாருங்கள்.

ராஜாவை கைகழுவும் கலைஞா்… பேட்டி இதோ!




  •  கலைஞா் அளித்த பேட்டி:
    • ராஜ்யசபா உறுப்பினர் கனிமொழியின் ஜாமின் மனு டில்லி கோர்ட்டால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதே; அதுபற்றி?

      அது கோர்ட் விவகாரம்; நான் கருத்து சொல்ல விரும்பவில்லை.

      காங்கிரஸ் உடன் உங்கள் உறவு தற்போது எப்படி இருக்கிறது?

      எல்லாருடனும் நல்ல உறவு இருக்கிறது.

      இந்தத் தீர்ப்பால் காங்கிரசுடன் உங்களுக்கு உள்ள உறவு பாதிக்குமா? என்ன முடிவு எடுக்கப் போகிறீர்கள்? இதற்காக கட்சிக் கூட்டம் நடைபெறுமா?

      தி.மு.., ஒரு ஜனநாயக இயக்கம்; நான் மாத்திரம் எந்த முடிவும் எடுக்க முடியாது. எங்கள் கட்சியில் செயற்குழு, பொதுக்குழு கூடி தான் எந்த முடிவையும் எடுக்க வேண்டும்.

      செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தை எப்போது கூட்டப் போகிறீர்கள்?

      தேவைப்படும் போது கூட்டுவோம்.

      உங்கள் மகள் கனிமொழியின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதே; உங்கள் மனநிலை எப்படி உள்ளது?

      உங்களுக்கு ஒரு மகள் இருந்து, செய்யாத குற்றத்துக்காக அவருக்கு, இதுபோன்ற ஒரு தண்டனை கிடைத்தால், உங்கள் மனம் அப்போது என்ன பாடுபடுமோ, அந்த மனநிலையில் என் மனம் உள்ளது.

      இந்த தீர்ப்பு குறித்து டில்லி ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப் போகிறீர்களா?

      சட்ட வல்லுனர்களை ஆலோசித்து முடிவெடுப்பேன்; பொறுத்திருந்து பாருங்கள்.

      உடனே டில்லி போகிறீர்களா?

      இப்போது நான் போகவில்லை.

      தேர்தலில் உங்களுக்கு கிடைத்த முடிவு பற்றி என்ன கருதுகிறீர்கள்?

      மக்கள் நல்ல ஓய்வு கொடுத்துள்ளனர். இவ்வாறு கருணாநிதி பதிலளித்துள்ளார்.

      குறிப்பு : அப்படியெனில் குற்றம் செய்தது…  ராம்ஜெத்மலானியின் கருத்தை இவா் வழிமொழிகிறாரா?,இல்லை… இவா் கருத்தை ராம்ஜெத்மலானி வழிமொழிந்தாரா?
      எப்படியாயினும் ராசாவின் நிலை படுபரிதாபம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...