கலைஞர் டிவிக்கு எப்படி இவ்வளவு பணம் வந்தது..?204 கோடியை எப்படி திருப்பி கொடுத்தீங்க..என்ற கேள்விக்கு சரியான பதில் வராததால் கலைஞர் டிவி சரத்குமார் வசமாக மாட்டினார்..நீராராடியாவுடன் உரையாடல்...போன்ற டேப் ஆதரங்களுடன்,டாட்டா நிறுவன நில விவகாரம்,போன்றவற்றின் மூலம்,கனிமொழி கூட்டு சதி என்ற பட்டப்பெயர் கொடுக்கப்பட்டு சிக்கினார்..இவர்கள் இருவரும் மீள் முடியாத சூழ்நிலையில் ,கலைஞரை சந்தித்த கலைஞர் டிவி சரத் மற்றும் அவர் மனைவி கலைஞர் காலை பிடித்து கதறி அழுதுள்ளனர்..இதற்கு,எம் மகளையே எப்படி காப்பாத்துறதுன்னு தெரியலைப்பா என் கண்கலங்கினாராம் முதல்வர்...
இநிலையில் கலைஞர் டிவி சொத்துக்கள் முடக்குவது பற்றியும்,கனிமொழி கைது பற்றியும் சி.பி.ஐ தீவிர டிஸ்கசனில் இருப்பதால்,கலைஞர் டிவி ஊழியர்கள்,தி.மு.க வினர் கலக்கத்தில் உள்ளனர்.நம்ம செய்தியை கொண்டு போக இனி சன் டிவியை தவிர வேறு கதி இல்லை..என தி.மு.க வினர் முணுமுணுக்கின்றனர்..அதே சமயம் அண்ணன் தம்பி ஆட்டம் இனி அதிகமாயிடும் என்றும் புலம்புகிறார்களாம்...
கலைஞர் பேரன்கள் தயாரித்த வானம்,மைனா போன்ற படங்கள் விஜய் டிவிக்கு சாட்டிலைட் உரிமை கொடுக்கப்பட்டது இன்னும் அவர்களை அதிர்ச்சியாக உள்ளதாம்..எப்படியும் கலைஞர் டிவியை முடக்கிருவாங்க..அதனால் நம்ம படத்துக்கு பாதிப்பு வந்துவிடக்கூடாது என புத்திசாலித்தனமா பேரன்களே செயல்படுவது கண்டு கலைஞருக்கு கடுப்புதானாம்.
கிரிமினல் வழக்குகளை பொறுத்தவரை ,குற்றத்திற்கான முகாந்திரம் இருந்தாலே கைது செய்து விடலாம்..கனிமொழி ,சரத்குமார் விவகாரத்தில் ஏராளமான ஆதாரங்களும் உள்ளன.,எனவே கைது தவிர்க்க முடியாதது..என்கிறது சி.பி.ஐ.(இந்த பேரா மட்டும்தான் ஜூனியர் விகடன்..காப்பி)
சட்டத்தின் ஓட்டைகளை பயன்படுத்தி,கனிமொழியை தப்பிக்க வைப்பது எப்படி..?என நேற்று மந்திரிகள் மற்றும் கி.வீரமணி போன்றோர்களை அழைத்து விவாதித்தார் முதல்வர் .கலைஞர் டிவி இயக்குனராக கனிமொழி இல்லை என நிரூபித்தால் கேஸ் உடைந்துவிடும் என்பது போன்ற மேதாவித்தனமான பதில்கள் வந்ததாம்.கலைஞர் திருப்தியில்லாமல்,ஜெயலலிதாவை போல கோர்ட்டில் ஆஜராகாமல் டிமிக்கி கொடுத்தால்..? என்றாராம் ஆர்வமாக.
அது நல்ல யோசனை...சம்மன் வரும்..ஆஜராகவில்லை என்றால் வாரண்ட் போடுவார்கள்..ஆனால் அத்ற்கு டைம் ஆகும் என்று சொல்லியிருக்கின்றனர்...
மே 6 ஆம்தேதி,கோர்ட்டில்,கனிமொழி ஆஜராகாமல் இருக்கும் வாய்ப்பு அதிகரிக்கிறது..காரணம் விசாரணைக்கு கனிமொழி ஆஜராகும் போது,கைது செய்யும் வாய்ய்ப்புகள் அதிகம்..ராசாவை போல கனிமொழி மன உறுதி காட்ட மாட்டார்.கட்சியை காட்டிக்கொடுக்கும் வாய்ப்பு அதிகம்..அதனால் கனிமொழியை காப்பாற்ற கலைஞர் துடிக்கிறார்.
தேர்தல் கமிசன் வரம்பு மீறி செயல்படுகிறது .இதற்கு கடிவாளம் போட வேண்டும் என்கிறார் கலைஞர்..பாரளுமன்றத்தை கூட்டி தேர்தல் கமிசனுக்கான உரிமைகள்,சுதந்திரம்,அதிகாரம் இவற்றையெல்லாம் கட்டுப்படுத்த வேண்டும்..பறிக்க வேண்டும்...என்கிறார்.அதாவது நல்லா ஓடும் குதிரைக்கு காயடிக்க வேண்டுமாம்..அப்பதானே இவர் ஈஸியா அது மேல உட்கார முடியும்.என்ன அநியாயம்..எத்தனை கோடி பணத்தை இந்த தேர்தலில் தேர்தல் கமிசன் கைப்பற்றி இருக்கிறது..?எத்தனை லஞ்சப்பணத்தை தடுத்திருக்கிறார்கள்..?வன்முறையை நிறுத்தி,சத்தத்தை குறைத்து அவர்கள் நடத்தியிருக்கும் புனித போரை முடக்க நினைக்கும் கலைஞரின் பொய் முகத்தை பாருங்கள் மக்களே..!
No comments:
Post a Comment