Thursday, June 9, 2011

22 கலைஞரே நியூட்டனின் 3வது விதி தெரியுமா? மக்களுக்கு தெரியும்!!!


   தி.மு.க.,வின் தேர்தல் தோல்வி பற்றி கருணாநிதி ஒரு அறிக்கையில் "என் மீதும், என் குடும்பத்தினர் மீதும், வஞ்சனையாளர்கள் பழி தீர்த்துக் கொண்டதன் விளைவு' என சொல்லியிருக்கிறார். "திராவிட இயக்கம் தழைத்த இடத்தில், தருப்பைப் புல்லை முளைக்கச் செய்யும் முயற்சி இது' என்கிறார். எழுபது ஆண்டு கால அரசியல் அனுபவத்தால் கலைஞர் கற்ற பாடம் இதுதானா? 
   ஓட்டுப் போட்டவர்கள் மக்கள். அவர்களா வஞ்சனையாளர்கள்? இவர் மீதும், இவர் குடும்பத்தினர் மீதும், வாக்காளர்களுக்கு அப்படி என்ன பகை, விரோதம் இருக்க முடியும்? நீங்களே சொல்லுங்கள் மக்களே... கலைஞருக்கு எதிராக ஓட்டு போட அவரின் இலவசங்கள் நம் கண்ணை திறக்க வில்லை. மின்சாரம் இல்லாத இருட்டு தான் நம் கண்ணை திறந்துள்ளது. விலை வாசி உயர்வு வேறு தலைமையை தேட சொல்லியது. அவர் குடும்பத்தார் செய்த ஊழல்கள் குக்கிராம மக்கள்களையும் விழிப்படைய செய்தது. இத்தனை வஞ்சனைகள் செய்தது கலைஞர் அரசு. நாம் அழிக்கவில்லை தி.மு.க வை, அவர்களின் அளவுகடந்த ஆசை அவர்களை அழிய வைத்தது.

 உண்மையைச் சொன்னால், மகாத்மா காந்தியோடு, உண்மையான காங்கிரஸ் இயக்கம் அழிந்து விட்டது. ஈ.வெ.ரா.,வின் திராவிட இயக்கத்தின் உயிர் முச்சு அடங்கிப் போய்விட்டது. அண்ணாதுரையுடன் அறிவில், தமிழன் யாருக்கும் இளைத்தவன் அல்ல என்ற தத்துவம், மங்கி மடிந்து விட்டது. 

    இப்போது கலைஞருக்கு ஆதரவாக இருந்தது நியூட்டனின் மூன்றாவது விதி. "பார் எவ்வெரி ஆக்ஷன், தேர் இஸ் ஆல்வேஸ் ஆன் ஈக்குவெல் அண்ட் ஆப்போசிட் ரியாக்ஷன்' என்பது தான், நியூட்டனின் மூன்றாவது விதி. வினை விதைத்தவர் வினை அறுப்பர்; தினை விதைத்தவர் தினை அறுப்பர்; இது தான் இயற்கை நியதி.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...