Thursday, June 9, 2011

திருந்திய தினத்தந்தி,நடுங்கும் சன் டிவி,ஊழலை எதிர்க்கும் கலைஞர்

கனிமொழி க்கு ஜாமீன் வழங்கப்படாததற்கு,காரணம் அவர் சாட்சிகளை கலைத்துவிடுவார்..ஆதாரங்களை கலைத்து விடுவார்..மேலும் ராசாவுக்கும் கனிமொழிக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு..மேலோட்டமாக பார்த்தாலே இதில் ஊழல் இருப்பது தெரிகிறது..எனவே ஜாமீன் கிடையாது என தினத்தந்தி முதல்பக்கத்தில் தெளிவாக செய்தி போட்டுள்ளது...தந்தி எப்போதும் ஆளுங்கட்சிக்கு விசுவாசமாக இருக்கும்..தினமலர் ஸ்கூப் நியூ யார் கொடுத்தாலும் சரி...இரண்டையும் பாலன்ஸ் செய்வார்கள்...

கலைஞர் அடிக்கடி பூணூலை கிண்டல் செய்வதாலோ என்னவோ...அவர் சம்பந்தமான நெகடிவ் செய்திகளை குஷியாக வெளியிடும்...தினத்தந்தி மட்டும் ஆட்சியாளர் யாராக இருந்தாலும் கர்ம சிரத்தையாக அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து.,செய்தி வெளியிடும்...தேர்தல் ரிசல்ட் வரை கலைஞர் சொன்னபடி செய்தி வெளியிட்ட தினத்தந்தி...ரிசல்ட் வந்ததும் அப்படியே அம்மா பிள்ளை ஆகிவிட்டது!
------------------------------
கலைஞர் பூணூலை பத்தி பேசியே பூணூலை ஓரங்கட்டி முண்ணனிக்கு வந்து ஆட்சியை பிடித்து..தன் மகளுக்கும் கற்று கொடுத்து..கலைஞர் மாதிரி தொழில் நேர்த்தி வராததால் திகார் ஜெயிலுக்கும் கனி போய்விட்டது!! 
--------------------
தயாநிதி மாறனால் சன் டிவிக்கும் அதன் நெட்வொர்க்கும் ஆபத்து வந்துவிடுமோ என கலாநிதி நடுங்குகிறார்..தனக்கும் தயாநிதிக்கும் சம்பந்தம் இல்லை என இப்போது அலறுகிறார்கள்....அவன் என் தம்பியே இல்லை..என சொன்னாலும் ஆச்சர்யமில்லை...தொழிலதிபர் அல்லவா இமேஜ்,பணத்திற்காக,தன்னை காப்பாற்றிக்கொள்ள எதுவும் செய்வார்கள்..!
--------------------------


போர் நிறுத்தம் ஏற்பட்டுவிட்டது' என்ற உண்மைக்கு மாறான தகவலைக் கூறி, இலங்கைத் தமிழர்களை, இலங்கை ராணுவத்திடம் கருணாநிதி காட்டிக்கொடுத்தார். "தமிழினப் பாதுகாவலர்' என்று தன்னைத்தானே கூறிக்கொண்டு, தமிழின படுகொலைக்கு துணை போயிருப்பதை பார்க்கும்போது, "உறவுபோல் இருந்து, குளவிபோல் கொட்டுவது' என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகிறது. இலங்கைத் தமிழர்கள் உயிரிழப்பதற்கு, முந்தைய அரசு காரணமாக அமைந்துவிட்டது.தி.மு.க., அரசின் சுயநலப்போக்கு மற்றும் கையாலாகாத்தனம் காரணமாக, பல்லாயிரக்கணக்கான தமிழர்கள், இலங்கை ராணுவத்தின் குண்டு மழைக்கு பலியாகினர். குண்டு மழைக்கு விலக்களிக்கப்பட்ட பகுதி மற்றும் மருத்துவமனைகள் மீதெல்லாம், இலங்கை ராணுவம் குண்டு மழை பொழிந்தது. நிவாரணப் பொருட்கள் சென்றடைவதை, இலங்கை அரசு தடுத்து நிறுத்தியிருக்கிறது. உணவு மற்றும் குடிநீர் பற்றாக்குறை காரணமாக, ஏராளமான தமிழர்கள் மரணம் அடைந்தனர். இதில், மனித உரிமை மீறல்கள் நடந்துள்ளன.

இவ்வாறு ஈழத்தமிழர் படுகொலைகளுக்கு கருணாநிதியே காரணம் என ஜெயலலிதா சட்டமன்றத்தில் குற்றம் சாட்டினார்....உப்பு தின்ற கருணாநிதி...ராஜபக்‌ஷேவுக்கு கோபம் வராமல் போராடுங்கள் என சொன்ன கலைஞருக்கு இது தேவைதான்!!
--------------------------------------------------------
அன்னா ஹசாரே, குரு பாபா ராம்தேவ் போன்றோர், கறுப்புப் பணத்திற்கும், ஊழலுக்கும் எதிராக இன்று போர் தொடுக்கிறார்கள். 1970ல் தி.மு.க., ஆட்சியின் போது, பொதுவாழ்வில் ஈடுபட்டோர் லஞ்ச ஊழல் குற்றத் தடுப்பு மசோதா கொண்டு வரப்பட்டது. 1973ல், சட்டம் இயற்றப்பட்டது
-மு.கருணாநிதி

இதையெல்லாம் கேட்கணும்னு எங்க தலையெழுத்து..அந்த சட்டம் என்னாச்சு..?அதனாலதான் இங்க ஊழல் பண்ண முடியாதுன்னு உங்க அமைச்சர்கள் மத்திய அமைச்சர் ஆனாங்களாக்கும்..அவ்வளவு ஸ்ட்ரிட்டு நீங்க..

இப்பவும் ஊழல் எதிர்ப்புக்காக நீங்கள் போராடலாம் திகார் வாசல்ல நின்னு!
ஊழல் எதிர்ப்புக்காக இன்னும் கனிமொழியும்,ராசாவும்தான் போராடலை...!!

 அமரர் எம்ஜிஆருக்கு தெரியும்... அந்த சட்டம் நிலுவையில் இருந்தால் நீங்கள் ஏழு வருடம் உள்ளே இருக்கவேண்டி வருமே என்று சட்டத்தை திரும்ப பெற்றுக்கொண்டார்கள். நாம்தான் எம்ஜிஆர் காலத்துக்கு பிறகு மூன்று முறை தமிழக முதல்வராக இருந்தோமே..1970ம் ஆண்டே சட்டம் இயற்றிய திமுக..எம்ஜிஆரால் திரும்ப பெற்ற சட்டத்தை மீண்டும் அமுல்படுத்தாமல் விட்டது ஏன், தன் மருந்தை தாமே சுவைக்க வேண்டிவரும் என்றா? எஜமான் படத்தில் உங்கள் கட்சியை சார்ந்த நடிகர் ஒருவர் சொல்வார், 'எழவு வீட்டில் அவர் பிணமாகவும், கல்யாண வீட்டில் அவர் மாப்பிள்ளையாகவும்' இருக்கவேண்டும் என்று.. ஏனோ அது இப்பொழுது நினைவிற்கு வருகிறது...

--------------------------------
இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்க இந்திய அரசு முன்வர வேண்டும் என தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்

-இதுதான் செம பாயிண்டு..ஒரே தீர்மானத்திலேயே இவர்களையும் முதல்வர் சந்தோசப்படுத்திட்டார்.உலகத்தமிழர்கள் மத்தியிலும் நல்ல பெயர் வாங்கிட்டார்....ராஜபக்‌ஷே வுக்கெல்லாம் நான் நடுங்க மாட்டேன்..என சிங்கள கூட்டத்திற்கு கிலி உண்டாக்கிவிட்டார்..சோனியாவுக்கும் செக் வெச்சிட்டார்...இனியும் கருணாநிதி வெளியே போகலைன்னா கூட்டணி கலகலக்கும்படி இலங்கைக்கு குடைச்சல் தொடரும்..பஞ்ச்சாயத்து எலெக்சன் வருது...தி.மு.க மேயர்களை எல்லாம் தூக்கணும்....மத்திய அரசு சப்போர்ட் வேணும்..அதுக்கு தி.மு.க வெளியே போகணும்..அதே சமயம் அ.தி.மு.க கூட்டணிக்கு உள்ளே போகாது..! இதான் ஜெ..கணக்கு ந்னு நினைக்கிறேன்..!.
-------------------------------------------------
பழ.கருப்பையா பல பத்திரிக்கைகளில் எழுதிய கலைஞர் எதிர்ப்பு கட்டுரைகள் எனக்கு பிடித்தமானவை..கருணாநிதி என்ன கடவுளா..? என்ற அவரது புத்தகம் அனைவரும் படிக்க வேண்டிய ஒன்று..இப்போது எம்.எல்.ஏவாக சட்டமன்றத்திலும் கலக்குகிறார்..அவர் சட்டமன்றத்தில் பேசியதிலிருந்து..இருந்து சில வரிகள்;.


கருணாநிதியின் குடும்பத்தினர் ஒரு கேபிள் இணைப்புக்கு மாதம் ரூ.200 வசூல் செய்தார்கள். ஒன்றரை கோடி தொலைக்காட்சிப் பெட்டிகளை போவோர், வருவோருக்கெல்லாம் விரட்டி, விரட்டி கொடுத்தார்கள். இதற்கு அரசுப் பணம் பல ஆயிரம் கோடி விரயம் செய்யப்பட்டது.
 ஒரு கேபிள் இணைப்புக்கு மாதம் ரூ.200 என்றால், ஒன்றரை கோடி கேபிள் இணைப்புக்கு மாதம் ரூ.300 கோடி வருவாய் கிடைக்கும். அப்படியானால், ஒரு ஆண்டுக்கு ரூ.3,600 கோடி கிடைக்கும்.
 

நல்லத் திட்டங்களையெல்லாம் கைவிட்டுவிட்டார்கள் என்று சொல்கிறார்களே, இது நாட்டுக்கு நல்ல திட்டமா, அல்லது அவர்களின் குடும்பத்துக்கு நல்லத் திட்டமா?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...