சென்ற வருடம் கலைஞர் வீட்டு வசதி திட்டத்துக்காக நன்றி சொல்ல நானும் எனது மகளும் உங்களை பார்க்க வந்திருந்தோம், எங்களை நினைவிருக்கிறதா என்று தெரியவில்லை. அன்று உங்களை நேரில் பார்த்தபோது நிறைய பேசவேண்டும் என்று ஆசைப்பட்டேன் ஆனால் உங்கள் முதல்வர் பதவி தடுத்துவிட்டது. இப்போது நீங்கள் ஒரு "டம்மி பீஸ்" என்பதால் உங்களிடம் நிறைய பேச முடியும் என்று நினைக்கிறேன.
மறைந்த நடிகர் எம்.ஜி.ஆர் அவர்கள் படகோட்டி, விவசாயி, தொழிலாளி போன்ற படங்களில் நடித்து வரிசையாக அனைத்து தரப்புமக்களையும் தன் வசப்படித்திக்கொண்ட போதிலும், கழகத்தில் இருந்து பிரிந்து அரசியல் கட்சி தொடங்கிய போதிலும் அசராமல் உங்கள் பின் இருந்த தொண்டர்களில் நானும் ஒருவன். அன்றில் இருந்து இன்று வரை ஒருகணம் கூட உங்களைப்பற்றி குறைவாக நான் நினைத்ததும் இல்லை உங்களை யாரும் குறைகூற விட்டதும் இல்லை. ஆனால் இன்று? ஊரே உங்களை "தமிழின துரோகி", "கொள்ளைக்கும்பல் தலைவன்", "விஞ்யானப்பூர்வ ஊழல்வாதி" என்று கூறும்போது அதை மறுத்துப்பேசவோ, அவர்களை கண்டிக்கவோ முடியாமல் ஊமையாகி நிற்கிறேன்.
நம் கட்சிக்கு இப்போது கிடைத்திருக்கும் தோல்விக்கு உங்கள் பிள்ளைகள் மட்டுமே காரணம் இல்லை நீங்களும்தான். இலங்கை தமிழர், தமிழக மீனவர்கள் போன்ற விவகாரங்களில் நீங்கள் மவுனமாக இருந்ததும் விலைவாசி உயர்வு, குடும்ப அரசியில், ஊழல் போன்ற குற்றச்சாட்டுக்கு நீங்கள் வெளியிட்ட அப்பாடக்கர் அறிக்கைகளும்தான் இப்போது நாம் அடைந்திருக்கும் மிகப்பெரிய தோல்விக்கு காரணம். விலைவாசி உயர்வைப்பற்றி நிருபர்கள் கேட்டபோது நீங்கள் கட்டுப்படுத்துகிறேன், பதுக்கலில் ஈடுப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மன்மோகன் சிங் போன்று ஒரு புருடா அறிக்கையாவது விட்டிருக்கலாம் அதைவிடுத்து அந்த மாநிலத்தில் இல்லையா இந்த மாநிலத்தில் இல்லையா என்று ஒரு ஒப்பீடு அறிக்கைகளை உங்களிடம் இருந்து யார் கேட்டது? குடும்ப அரசியலை பற்றி கேட்டபோது அதற்கு பதில் சொல்லாமல் மவுனமாக போயிருக்கலாம் ஏ.வி.எம் இல்லையா சிவக்குமார் இல்லையா என்று ஒரு ஒப்பீடு அறிக்கையை யார் கேட்டது? நீங்களும் சிவக்குமாரும் ஒன்றா? இல்லை உங்களைப்போன்று தான் உங்கள் வாரிசுகள் கதை, திரைக்கதை, வசனம் எழுதிக்கொள்வதோடு நிறுத்திவிட்டார்களா? எந்த இடத்தில் எப்படி பதில் சொல்லவேண்டும் என்று கூட சொல்லத்தெரியாத உங்களுக்கு எவன் பட்டம் கொடுத்தான் "வாழும் வள்ளுவன்", "முத்தமிழ் அறி ஞர்" என்று?
உங்களுக்காகவும், கட்சிக்காகவும் பல ஆண்டுகளாக உழைத்த தொண்டர்கள் எல்லாம் மேடைக்கு கீழே வரிசையில் அமர்ந்திருக்க கட்சியில் நேற்று இணைந்த குஷ்பு, வடிவேலு போன்ற தண்டங்களையும் வீணாப்போன முண்டங்களையும் நீங்கள் இருக்கும் மேடையில் ஏற்றி பேச வைத்தது ஏன் ? இவர்களுக்கு என்னதகுதி இருக்கு நம் இயக்கத்தைப்பற்றி, நம் கொள்கையை பற்றி மேடையில் பேச?
அண்ணா கட்சியை தொடங்கியப்போது இருந்த "திராவிடர் நலன்" என்பது மாறிப்போய் இன்று தி.மு.க என்றால் அது உங்கள் குடும்ப நலனுக்கான இயக்கம் என்றே மாறிப்போனதற்கு யார் காரணம்?. அன்றிலிருந்து இன்று வரை கழகத்துக்காகவும் உங்களுக்காகவும் கொடிபிடித்து அலைந்த எங்களுக்காக நீங்கள் என்ன செய்தீர்கள்? எந்த கழகம் தமிழர்களை பார்த்து "நான்சன்ஸ்" சொன்னதற்காக காங்கிரஸ் கட்சியை எதிர்த்து போராட்டாம் நடத்தியதோ இன்று அதே இயக்கத்தை கையில் வைத்துக்கொண்டு இந்தியா முழுக்க தமிழர்களை பார்த்து நான்சன்ஸ் என்று சொல்லவைத்துவிட்டது அதே காங்கிரஸ். இதற்கெல்லாம் காரணம் யார்? நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் மட்டுமே.
இன்று உங்கள் மகள் திகார் சிறையில் வாடுவதாக கண்கலங்கும் நீங்கள் சட்டசபையில் பல்லாயிரம் தமிழர்கள் இறந்ததற்காக ஒருத்துளி கண்ணீர் கூட விடாதது ஏன்? நீங்கள் கைக்காட்டி இருந்திராந்தால் அந்த இடத்தில் நாங்கள் இலங்கை தமிழர்களுக்காக போராடி இருப்போம், ஆர்ப்பாட்டம் செய்திருப்போம் ஏன் சாகவும் துணிந்திருப்போம். ஆனால் நீங்களும் அமைதியாக இருந்து எங்களையும் அமைதியாக இருக்கவைத்து பல்லாயிரம் தமிழர்களை கொன்றுகுவித்த ராஜபக்சேவுக்கு துனைப்போகவைத்துவிட்டீர்கள். இப்போது நாங்கள் தமிழின துரோகியாக நிற்கிறோம் உங்களுடன். இதற்கெல்லாம் என்னபதில் சொல்லபோகிறீர்கள்? இதோ இன்று ஜெயலலிதா கச்சத்தீவை மீட்க வேண்டும், ராஜபக்ஷேவை போர் குற்றவாளியாக அறிவிக்கவேண்டும் என்று சட்டசபையில் தீர்மானம் இயற்றிவிட்டார் இப்போது உங்கள் "தமிழின தலைவர்" பட்டத்தை எங்கே வைத்திருக்கிறீர்கள்? கொண்டுவாருங்கள் அதை தீயில் போட்டு கொளுத்துகிறேன்.
நீங்கள் என்னதான் சாதனைகள் செய்திருந்தாலும் உங்கள் குடும்பத்தினரின் கொள்ளைகளையும், இலங்கைத்தமிழர் விவகாரத்தில் நீங்கள் அமைதிகாத்ததையும் பார்க்கும்போது எங்களுக்கு வேதனையே. இவ்வளவு அநீதிகளையும், அக்கிரமங்களையும் உங்கள் குடும்பத்தாரோடு சேர்ந்து நீங்கள் செய்துவிட்டு "உங்களுக்கு ஏற்ற வேலைக்காரன் நான்தான்" என்றும் எனக்கு வாக்களித்து முதல்வராக்குங்கள் என்றும் நீங்கள் திருவாரூரில் சொன்னபோது எனக்கே எனக்கே கோபம் பொத்துக்கொண்டு வந்தது. நல்லவேளை அந்தகூட்டாத்தில் நான் இல்லை இருந்திருந்தால் அடுத்தகணமே உங்களுடைய இந்தவார்த்தையை கேட்டு அழுகிப்போன முட்டையைகொண்டு உங்கள் மண்டையில் எறிந்திருப்பேன்.
இதுவரை கழகம் அடைந்த தோல்விக்கெல்லாம் காரணம் வேறு, ஆனால் இன்று நாம் அடைந்திருக்கும் தோல்விக்கு முழு முதல் காரணம் நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் மாட்டுமே. உங்களுக்கு கட்சியின் நலனை விட குடும்ப நலன் தான் பெரிதாக தெரிகிறது. இப்படிப்பட்ட உங்களுக்கு இனியும் கட்சித்தலைவர் பதிவியில் இருக்க தகுதி இல்லை. உடனே தோல்விக்கு பேறுப்பெற்று கட்சித்தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யுங்கள். இது உங்களால் ஆரம்பிக்கப்பட்ட இயக்கமும் இல்லை, உங்கள் குடும்பத்துக்காக நேந்துவிடப்பட்ட கழகமும் இல்லை என்பதை முதலில் உணருங்கள்.
உங்கள் குடும்பத்தார் அடித்த கொள்ளையை மறைக்க கட்சியை காங்கிரெஸ்சிடம் அடகு வைத்ததர்க்காகவும், தமிழர்களை கொன்று குவித்ததை வேடிக்கைப்பார்த்ததர்க்காகவும், கட்சியை உங்கள் குடும்ப நலனுக்காக பயன்படுத்தியதர்க்காகவும் ஒரு தொண்டனான நான் கட்சித்தலைவர் பதவியில் இருந்து உங்களை டிஸ்மிஸ் செய்கிறேன்.
இப்படிக்கு,
ஆனந்தி அப்பா.
(கழக உறுப்பினர்)
No comments:
Post a Comment