Friday, June 10, 2011

சட்டமன்றத் தேர்தல் தோல்விக்கு திமுகதான் காரணம் என்று காங்கிரஸ்

தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் தோல்விக்கு திமுகதான் காரணம் என்று காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ஏடு கூறியுள்ளது.

சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பின் முதன் முறையாக திமுக உயர்மட்டக் குழுக் கூட்டம் இன்று மாலை நடைபெற்று வரும் நிலையில், இன்று காலை வெளியான காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ஏடான "காங்கிரஸ் சந்தேஷ்" ஏட்டில் எழுதப்பட்டிருந்த தலையங்கத்தில், தென் மாநிலங்களில் கூட்டணிக் கட்சியினரின் தவறுகளால் காங்கிரஸ் கட்சி தோற்றுவிடாதவாறு, கட்சி தன்னுடைய வியூகங்களை வகுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற தேர்தலில் மற்ற கட்சிகளிடம் காங்கிரஸ் தோற்க வேண்டி வந்தது என்றும் அந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

அதே இதழில் வெளியான மற்றொரு கட்டுரையில், தென் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி தன்னுடைய வியூகத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். கூட்டணிக் கட்சிகளின் தவறுகள் காரணமாக காங்கிரஸ் தன்னுடைய வாக்கு வங்கியை இழந்துவிடக் கூடாது என்று எழுதப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...