தமிழக பொதுப்பணித் துறை அமைச்சர் கே.வி. ராமலிங்கம், நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் பழனிசாமி ஆகியோர் மேட்டூர் அணையின் மேல்மட்ட மதகுகள் வழியாக காலை 10 மணியளவில் தண்ணீர் திறந்து விட்டனர். பொதுப்பணித்துறை அமைச்சர் பூக்கள் தூவினார் என்று செய்திகள் சொல்லுகின்றன.
வழக்கமாக ஜூன்12க்கு பிறகு தான் திறக்கப் படும். சுதந்திர இந்தியாவில் இப்போதுதான் முதல்முறையாக ஜுன்12க்கும் முன் திறந்தைருக்கிறார்கள்.
இப்போது திமுக ஆட்சி இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்று ஒரு கற்பனை.
சென்னையிலிருந்து மேட்டூர் வரை கட்சிக் கொடிகளும், கட் அவுட்களும் பற்ந்து கொண்டிருக்கும். அமைச்சர்பெருமக்கள் அனைவரும் அங்கே கூடி இருப்பார்கள். க்லைஞர் பிறந்த நாள் அன்று தண்ணீர் திறந்து விடப் பட்டிருக்கும். காவிரி டெல்டா பகுதியில் உள்ள அனைத்து விவசாயிகளும் மேட்டூருக்கு அழைத்து வரப் பட்டிருப்பார்கள்.
சுதந்திர இந்தியாவில் தண்ணீருக்கு சுதந்திரம் கொடுத்த தானைத் தலைவனை புகழ்ந்து வைரமுத்து கவிதை எழுதி வாசித்திருப்பார்.
உன்னிடம் கவிதை
ஊறுகிறது
உன்னாட்சியில்
நீரே ஊறுகிறது.
ஏனென்றால்
நீயே ஒரு ஊற்று
ஊற்றுக்கெல்லாம்
ஊற்று’
ஊருக்கெல்லாம்’
ஊற்று
என்று வாசித்திருப்பார்.
காவிரி விவசாயிகளின் கண்ணீர் துடைக்க இன்று இலவச நதிநீர் வழங்கும் விழாவிற்கு வருகை தரும் அனைவரையும் வருக வருக என்று ஒரு அமைச்சர் வழ்ங்கிக் கொண்டிருப்பார்.
காவிரிப் படுகையில் விளையும் ஒவ்வொரு நெல்மணியும் கலைஞருக்கு நன்றியோடு இருப்பதாகவும் இந்த நெல்மணீயை சாப்பிடும் ஒவ்வொருவரும் கலைஞருக்கு விசுவாசமாக இருப்பார்கள் என்றும் இன்னொரு அமைச்சர் முழங்கிக் கொண்டிருப்பார்.
இதைவிட பிரமாண்டமாக எப்படி வைகை அணை திறப்பது என்று மற்றவர்கள் யோசித்துக் கொண்டிருப்பார்கள்.
ம் வட போச்சே இப்ப பெருமூச்சு விட்டு என்ன பண்றது
No comments:
Post a Comment