Friday, September 30, 2011

உங்களைப்பற்றி அறிய ஒரு இணையதளம்.


எல்லோருக்குமே மற்றவர்கள் தங்களை பற்றி என்ன நினைக்கின்றனர் என்பதை அறிவதில் ஆர்வம் இருக்கும்.சிலர் வெளிப்படையாகவே கேட்டு விடுவார்கள்.இன்னும் சிலர் மற்றவர்கள் நினைக்காததை எல்லாம் நினைப்பதாக நினைத்து கொண்டு கவலைப்பட்டு கொண்டிருப்பார்கள்.
மற்றவர்கள் நினைப்பது பற்றி அலட்டிக்கொள்ளாதவர்களும் இருக்கவே செய்கின்றனர்.இவை ஒருபுறம் இருக்க ,உங்களை பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கின்றனர் என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிட்றீர்களா? அப்படியென்றால் அதற்காக என்றே ஒரு இணைய்தளம் இருக்கிறது.
ஜட்ஜ்.மீ என்னும் அந்த தளம் சக இணையவாசிகள் உங்களை பற்றி என்ன நினைக்கின்றனர் என்பதை தெரிந்து கொள்ள வழி செய்கிறது.
மற்றவர்களின் எண்ணங்களை அறிய நிங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இந்த தளத்தில் உங்கள் புகைப்படத்தை இடம்பெறசெய்வது மட்டும் தான்.அதன் பிறகு உறுப்பினர்கள் உங்களை பற்றிய அபிப்ராயத்தை தெரிவிப்பார்கள்.
பர்ஸ்ட் இம்ப்ரஷன் ஈஸ் தி பெஸ்ட் இம்ப்ரஷன் என்று ஆங்கிலத்தில் ஒரு சொல் வழக்கு உண்டல்லவா?அதே போலவே உங்களை பார்த்ததும் தோன்றக்கூடிய சித்திரத்தை இந்த தலத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொருவருக்கும் உங்களை பார்க்கும் போது எத்தகை எண்ணம் ஏற்படுகிறது என்பதை அவர்கள் உங்கள் புகைப்படத்தை பார்த்ததும் தெரிவிக்கும் கருத்துக்கள் வழியே அறிந்து கொள்ளலாம்.
எப்படியும் தினந்தொறும் நம்மை எத்தனையோ பேர் பார்க்கின்றனர்.அவர்களுக்கு எல்லாம் நம்மை பறி ஒரு அபிப்ராயம் தோன்றும்.அந்த அபிப்ராயங்களை தெரிந்து கொள்ள இந்த தளம் உதவுகிறது.
அபிபாராயம் என்பதும் பக்கமாக கருத்துக்களோ அல்லது விமர்சன கனைகளோ கிடையாது.அபிப்ராயங்கள் அழகாக வரைபடத்தின் வாயிலாக உணர்த்தப்படுகின்றன.
ஒவ்வொரு புகைப்படத்தின் அருகிலும் இந்த வரைபடம் தோன்றுகிறது.சகஜமாக பேசக்கூடியவர்,கூச்ச சுபாவம் உள்ளவர்,புத்திசாலியானவர்,அழுத்தமானவர் என நான்கு காரணிகளின் அடிப்படையில் வரைப்படத்தில் ஒருவரை பற்றிய மதிப்பீடு காட்டப்படுகிறது.புகைப்படத்தை பார்த்ததும் தோன்றக்கூடிய எண்ணங்களை இனையவாசிகள் வரைபடத்தின் மீது கிளிக் செய்து உணர்த்தலாம்.
இணையவாசிகளின் அபிப்ராயம் சேர வரைபடத்தில் அவற்றின் முடிவுகளையும் அழகாக காணலாம்.தேர்தல் போன்ற நேரங்களில் கட்சிகளின் செல்வாக்கு அலசி ஆராயப்பட்டு வரைபடத்தின் மீது காட்டப்படுவது போல நீங்களும் உங்களைப்பற்றிய அலசலை வரைபடமாக காணலாம்.
ஆரவம் உள்ளவர்கள் இந்த தளத்தில் புகைப்படத்தை சமர்பித்து மற்றவர்களின் கருத்துக்களை அறிந்து கொள்ளலாம்.அதே போல இந்த தளத்தில் சமர்பிக்கப்பட்டுள்ள மற்றவர்களின் புகைப்படங்களையும் பார்த்து தங்களுக்கு தோன்றும் முதல் எண்ணத்தை தெரிவிக்கலாம்.
இந்த மதிப்பீட்டு தளத்தை பார்க்கும் போது மற்ற மதிப்பீட்டு தளங்களுக்கு எல்லாம முன்னோடியாக கருத்தப்படும் ‘ஹாட் ஆர் நாட்’ தளத்தின் நினைவு வரலாம்.
ஹாட் ஆர் நாட் தளம் ஒருவர் அழகாக இருக்கிறாரா இல்லையா என்பதை தெரிந்து கொள்வதற்காக அவ்ர்களின் புகைப்படத்தை பார்த்து மற்றவர்கள் மதிப்பெண்கள் அளிப்பதை அடிப்படையாக கொண்டது.இந்த தளம் சுவாரஸ்யமானது என்றாலும் இதன் மீது பல்வேறு விமர்சனங்கள் உண்டு.
ஆனால் ஜட்ஜ்.மீ தளம் அவ்வாறு இல்லாமல் எவருக்குமே ஆர்வம் இருக்ககூடிய தங்களைப்பற்றிய மற்றவ்ர்களின் முதல எண்ணங்களை அறிய உதவுகிறது.இதனடைப்படையில் ஒருவர் பொதுவாக தங்களைப்பற்றி அறிந்து கொண்டு தேவை என்றால் தங்களை மாற்றி கொள்ளவும் முற்படலாம்.

மாறிவரும் தமிழகம்! மனிதாபிமானத்தை முன்னிறுத்துகிறது

தமிழகத்தில் தற்போது ஒரு மென்புரட்சி மௌனமான கட்சி, இன, மத பேதமின்றி அரங்கேறி வருவதற்கான காரணிகளாக பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோர் உள்ளதை தற்போதைய கள நிலைமைகள் எடுத்துக் காட்டுகின்றன.
தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆதரவு என்று நோக்காமலோ, ராஜீவ் காந்தியின் கொலை என்று நோக்காமலோ ஏன் இந்த மூவரும் தூக்கிலிட்டு அநியாயமாகக் கொல்லப்பட வேண்டும் என்ற கருத்துக் களம் ஆழமாக தமிழகத்தின் அனைத்துத் தரப்பினரிடையேயும் எழுந்துள்ளதாக தமிழகத்தின் மிகவும் பிரபல்யமான நாளிதழ் ஒன்று நாடிபிடித்து அறிந்துள்ளது.
குறிப்பாக சாந்தன் வெளிநாடு செல்வதற்காக தனது குடும்பச் சொத்தான காணியை ஈடு வைத்து சென்னை வந்தவர் என்பதையும், அவர் ஒரு தீவிர இந்துமதப் பற்றாளர் என்பதையும்,
அவர் கைது செய்யப்பட்டு இன்று வரையான 21 வருடங்களாக அவரைப் பார்ப்பதற்கு வருவதற்கு பண வசதியில்லாத அவரின் பெற்றோரால் முடியவில்லை என்பதையும் அண்மையில் ஜூனியர் விகடன் பத்திரிகை மிகவும் உருக்கமான முறையில் வெளிக் கொணர்ந்திருந்தது.
இது இவர்கள் நிரபராதிகள் தான் என்ற கருத்தை அல்லது சிந்தனை மாற்றத்தைத் தமிழகத்தில் ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக பிராமணர் சமூகத்தின் இக் கொலைத் தண்டனை தொடர்பான பார்வையிலும் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்துக் கருத்துத் தெரிவித்த ஒரு தமிழக மூத்த பத்திரிகையாளர், ஒரு வயதான பிராமணர் புத்தகக் கடையொன்றில் “இவாளுக்கும் (பேரறிவாளன், முருகன், சாந்தன்) ராஜீவ் காந்தி கொலைக்கும் சம்பந்தமேயில்லையாமே, அப்படின்னா எதுக்கு இவாளைத் தூக்கிலிடணும்?” என தனது அதிருப்தியை அக் கடையிலிருந்தோருடன் பகிர்ந்தது தமிழகத்திற்கு புதியதொரு விடயம் எனவும் தனக்கே இந்த மாற்றம் ஆச்சரியமானதாக இருக்கிறது என்றும் தெரிவித்தார்.
அத்தோடு தமிழர்களின் தலைவி என தன்னை செயற்பாடுகளின் மூலம் நிலைநிறுத்தி வரும் தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஜெயராம் கூட மிகவும் அரசியல் முதிர்ச்சியைக் காட்டும் வகையிலான செயற்பாடுகளை மேற்கொண்டு வருகிறார் என்பதையும் இவரது அரசு தற்போதைய வழக்கிற்கு பதில் வழங்கும் காலக்கெடுவை நீட்டி நீதிமன்றத்தின் மூலமே இந்த வழக்கை நியாயமற்றது என்பதை நிரூபிக்க முயலும் என்றும் தெரிவித்தார்.
ஒட்டுமொத்தமாக தமிழகம் ஜீவகாருண்யம், மனிதாபிமானம் என்பவற்றை ஒரு குறுகிய வட்டத்திற்குள் நிறுத்தாமல் இவை தொடர்பான விடயங்களில் உலகோடு ஒத்துச் செயற்படும் நிலைக்கு தன்னை ஒரு மௌனப் புரட்சி மூலம் உயர்த்தியுள்ளது என்றும் மேற்படி பத்திரிகையாளர் தெரிவித்தார்.

வெளிவராத இரகசியங்கள்



மறைந்த பாராதப் பிரதமர் ராஜீவ் காந்தியின் மரணம் தொடர்பாக திருச்சி வேலுச்சாமி குமுதம் இணையத்தளத்திற்கு வழங்கிய செவ்வியில் இதுவரை வெளிவராத இரகசியங்கள் பலதை வெளியிட்டுள்ளார்.
ராஜீவ்காந்தியைக் கொல்வதற்கு வெடிகுண்டு கட்டிச் சென்ற பெண் என்று கூறப்படும் தனுவின் நெற்றியில் உள்ள பொட்டை முக்கிய தடயமாக அவர் முன் வைத்தார்.
வெடிகுண்டு வெடிப்பதற்கு சுமார் 15 நிமிடங்கள் முன்பு எடுக்கப்பட்ட புகைப்படத்தில் சிவராசனுக்கு அருகில் மாலையுடன் நிற்கும் தனுவின் நெற்றியில் பொட்டு இல்லை.
வெடிகுண்டு வெடித்து சிதறிக்கிடக்கும் தனுவின் சிதறிய உடலின் நெற்றியில் பொட்டு காணப்படுகிறது. இரண்டு படங்களையும் அவர் பகிரங்கமாகக் காட்டினார். பின் முக்கியமான கேள்வி ஒன்றை எழுப்பினார்.
பொட்டு வைத்தபடி குண்டைக் காவிச்சென்ற தனுவின் நெற்றியில் இருந்த பொட்டு குண்டு வெடிப்பில் அழிந்துவிட்டதென்றால் அதில் ஒரு நியாயம் இருக்கிறது. ஆனால் இறந்த பின்னர் அவருடைய நெற்றியில் பொட்டு வந்ததென்றால் அதில் என்ன நியாயம் இருக்கப்போகிறது..?
கொலையாளி ஒரு தமிழ் பெண்தான் என்று காட்டுவதற்காக அந்தப் பொட்டு அணிவிக்கப்பட்டதா..?
இல்லை சிதறிக் கிடக்கும் உடலம் தனுவின் உடலம் இல்லாமல் வேறொரு பெண்ணின் உடலமா..?
இல்லை புகைப்படம் எடுத்த பின் தனு பொட்டு வைத்தாரா..? அப்படி வைத்தால் அந்த நேரம் அவருக்கு எங்கிருந்து வந்தது பொட்டு..?
மேலும்…
சம்பவம் நடைபெற்றபோது ஒரு ஒளிப்படம் எடுக்கப்பட்டதாகவும், அதை இன்றுவரை உள்துறை செயலராக இருந்த கே.ஆர்.நாராயணன் விசாரணைக்காக ஒப்படைக்கவில்லை என்றும், இந்த வழக்கின் மர்மமே அதில்தான் புதைந்துள்ளதாகவும், சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோர் குற்றமற்றவர்கள் என்றும் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து மேலும் பல கேள்விகளை அவர் எழுப்பினார்.
கேள்வி 01. அன்று ராஜீவ்காந்தி விசாரணைகளுக்கு பொறுப்பாக இருந்த ப.சிதம்பரம் அந்த விசாரணை அறிக்கைகள் முற்றாக தொலைந்துவிட்டதாகக் கூறினார்.. இது சரியா..?
கேள்வி 02. கம்யூனிஸ்டான தா. பாண்டியன் அந்தச் சம்பவத்தில் காயமடைந்தவர். அவர் ப.சிதம்பரத்திடம் இதுபற்றி கேட்டபோது மழுப்பலான பதிலையே கொடுத்துள்ளார் ஏன் மழுப்பினார்..?
கேள்வி 03. அரசியலை விட்டு முற்றாக ஒதுங்குவதாகக் கூறிய நரசிம்மராவ் ராஜிவ் இறந்ததும் எப்படி மறுபடியும் பிரதமரானார்..?
கேள்வி 04. கொலை நடைபெற்று விசாரணைகள் தொடங்கவில்லை அதற்குள் புலிகளே காரணம் என்று சுப்பிரமணியசாமி முடிவுகட்டி சொன்னது எப்படி..?
கேள்வி 05. சாதாரண பஞ்சாயத்து தலைவராகக்கூட இல்லாத சுப்பிரமணியசுவாமிக்கு இன்றுகூட பூனைப்படையின் பாதுகாவல் எதற்கு..?
கேள்வி 06. ராஜிவின் சொத்துக்களையும் அரசியல் பலத்தையும் அனுபவிக்கும் முக்கியமான நால்வர் இந்த விவகாரத்தில் தொடர் மௌனம் காப்பது எதற்கு..?
கேள்வி 07. இந்த விவகாரத்தின் முக்கியமான சந்தேக நபர்கள் எல்லாம் உயர்ந்த பட்டம், பதவிகளில் தொடர்ந்து நீடிப்பது எப்படி..?
கேள்வி 08. சந்திராசாமிதான் அன்றைய வெடிகுண்டு பெல்டை பூசை செய்து சிவராசனிடம் எடுத்துக் கொடுத்தார் என்ற விவகாரத்தை சொன்ன நபரை கார்த்திகேயன் ஏன் தாக்கி பற்களை உடைத்தார்?
கேள்வி 09. கார்த்திகேயன் புலிகளை மட்டும் குற்றவாளிகளாகக் காட்டுவதற்கு மேல் விசாரணைகளை முன் நகரவிடாது ஏன் தடுத்தார்..?
மேற்கண்ட ஒன்பது கேள்விகளும் மேலும் பல புதிய கேள்விகளுக்கு தூண்டுதலாக அமைகின்றன. நேற்று முன்தினம் தமிழக முதல்வர் ஜெயலலிதா குறிப்பிட்டபோது பேரறிவாளன் உட்பட மூவருக்கும் தூக்குத்தண்டனை வழங்கலாம் என்ற முடிவை மு.கருணாநிதியே எடுத்தார்…என்றார். அப்படியானால் அந்த முடிவை அவர் எப்படி எடுத்தார். அவருக்கு பின்னால் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் இருந்தாரா..?
கேள்வி 10. விடுதலைப்புலிகள் இதில் எப்படி மாட்டுப்பட்டார்கள்..? புதுமாத்தளன் இறுதி நேரத்திலாவது இந்த உண்மையை விடுவிக்காமல் அவர்கள் ஆடுகளத்தில் இறுகிய மௌனமாக இருநத்து ஏன்..?
கேள்வி 10. தென்னாசிய அரசியலில் என்ன நடக்கிறது.. என்ன நடந்தது.. ஈழத் தமிழர்கள் இதில் ஏன் பகடைக்காய்கள் ஆனார்கள்..?

Thursday, September 29, 2011

அவர் போட்ட கணக்கொன்று – இவர் போட்ட கணக்கொன்று -

அவர் போட்ட கணக்கொன்று -
இவர் போட்ட கணக்கொன்று -


இது சோனியா காந்தியின் கணக்கு -

ராகுல் காந்தி தான் பிரதமர். ஆனால் இன்றைய கூட்டணி
கூட்டத்தை வைத்துக்கொண்டு அவரால் பிரதமராக
சமாளிக்க முடியாது. எனவே அடுத்த தேர்தலில் -
காங்கிரஸ் கட்சிக்கு இன்னும் அதிக அளவில் எம்பி க்களை
பெற்று – இப்போது இருக்கும்  சீனியர் அமைச்சர்களை
எல்லாம் தூர விலக்கி விட்டு, ராகுலுடைய கட்டுப்பாட்டிற்குள்
வரக்கூடியவர்களை மட்டும் வைத்துக்கொண்டு,
ராகுலை பிரதமர் ஆக்க வேண்டும்.

அதுவரை ஆபத்தில்லாத  மன்மோகன்சிங்கை  பிரதமராக
வைத்துகொண்டு, லகானை தன்னிடம் வைத்துக்கொள்ள
வேண்டும்.

ஆனால்,   வர வர மன்மோகன் சிங்கால்,  ஆட்சியும்,
கட்சியும் – அபாயகரமான முறையில் பலவீனத்தை
வெளிப்படுத்திக் கொண்டிருப்பதால்  சிங்குக்கு மாற்றாக -
தற்காலிகமாக  பிரனாப் முகர்ஜியையோ, ப.சி.யையோ
பிரதமர் ஆக்கலாமா என்று  சோனியா யோசிக்கத்
துவங்கவே  ஆளாளுக்கு  தனித்தனியே கணக்குப்
போடத் துவங்கி விட்டனர் !


ப.சி.யின் கணக்கு -

சோனியா காந்தி முகர்ஜியை விட தன்னைத் தான்
அதிகம் நம்புவார் என்பது தெரியும். எனவே
எப்படியாவது முகர்ஜியை  ஒதுக்கி விட்டால்,
தனக்கு  வாய்ப்புகள் அதிகம்.  நிதிமந்திரியாக
இருக்கும் முகர்ஜியின்  பலவீனத்தை  கண்டு பிடித்து
வெளிப்படுத்தினால் – தன் ரூட் க்ளியர்.
விளைவு -
முகர்ஜியின் அலுவலகத்தில் – ஒட்டுக்கேட்கும்
முயற்சிகளும், சாதனங்கள் கண்டுபிடிக்கப்பட்டதும்.


பிரனாப் முகர்ஜியின் கணக்கு -

இந்திரா காந்தியின் காலத்திலிருந்தே
நம்பர் 2  வாகவே இருக்கிறோம்.  இப்படியே
இருந்தால் – நாளை  ராகுல் காந்தியின் கீழ்
நம்பர் 2 வாக கூட இருக்க முடியாது. எனவே கிடைக்கும்
சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு - ப.சி.யை
அகற்றி விட்டால் -  தன் ரூட் க்ளியர்.
தான் தான் அடுத்த பிரதமர் ?
தயாரானது உள்ளடி வேலைகள் .  விளைவு -
பிரதமருக்கு மார்ச்சு 25, 2011 தேதியிட்ட கடிதத்தின்
வெளிப்பாடு.


மன்மோகன் சிங்கின்  கணக்கு -

ஆளாளுக்கு கணக்கு போட்டுகொண்டிருந்தால் -
சிங்  என்ன மாங்கா மடையரா ?
சிங்கைப் பற்றி  எல்லாருமே  தப்பாகவே  எடை
போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர் ஒரு அப்பாவி-
ஒன்றும் தெரியாதவர் என்று.

ஒன்றும் தெரியாத சிங்கைப் பற்றி
ஒன்றை நினைத்துப் பாருங்கள் -
எண்பது வயதாகப்
போகும்  ம.ம.சிங்  இன்று வரை சும்மாவே இருந்ததில்லை !
சாமர்த்தியம் இல்லாமலா  
எப்போதும் – எங்கேயும் -எதாவது  ஒரு பதவியில் ?
முதலில் 35 ஆண்டுகள் மத்திய அரசுப் பணியில்,
பின்னர் திட்டக்குழுவில்,
பின்னர்  உலக வங்கியில்,
பின்னர் நரசிம்ம ராவ் மூலம் மத்திய நிதியமைச்சராக -
பின்னர் மீண்டும் உலக வங்கியில் -
அடுத்த முறை  சூப்பர் லக் –
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மூலமாக !
(அப்துல் கலாம் -சோனியா காந்தி பிரதமராக பொறுப்பேற்க
அரசியல் சட்ட விதிகள் அனுமதிக்கவில்லை என்று
சுட்டிக்காட்டியதன் விளைவாகத் தானே  
சோனியா  தனக்கு ஒரு நம்பிக்கையான OPS ஐ
தேட நேர்ந்தது ? )

இப்போது  -சோனியா காந்தி தனக்கு பதிலாக  முகர்ஜியையோ,
ப.சி.யையோ பிரதமர் ஆக்குவது பற்றி யோசிக்கிறார் என்று
தெரிந்த பிறகு  ம.ம.சிங்கால் சும்மா இருக்க முடியுமா ?

ராகுல் காந்தியைத் தவிர வேறு யாருக்காகவும் அவர்
நாற்காலியை விடத்தயாரில்லை. (ராகுல் இப்போதைக்கு
தயார் ஆக மாட்டார் என்பது அவரது அசைக்க முடியாத
நம்பிக்கை ! )

எனவே – அவர் கணக்கு -
முகர்ஜியையும், ப.சி.யையும்
மோத விட்டு, இரண்டு பேரையுமே அகற்றி விட்டால் -
தன் ரூட்  க்ளியர்.  அடுத்த தேர்தல் வரை பதவி உறுதி.
(அதன் பின்னர் ஒரு வேளை காங்கிரஸ் ஜெயித்து
அதிகாரத்திற்கு வந்தால் – இருக்கவே இருக்கிறது -
துணை ஜனாதிபதி  அல்லது ஜனாதிபதி பதவி !
அதற்கு தேவையான  ஒரே தகுதி -சோனியா காந்தியிடம்
விசுவாசம் – தன்னிடம் ஏற்கெனவே  இருக்கிறது !!
அதை நிரூபித்தும் ஆகி விட்டது !!! )

விளைவு -  எதோ ஒரு தகவலை/கடிதத்தை,
குருட்டாம்போக்கில் கேட்ட  RTI  ஆர்வலருக்கு -
500 பக்க  ஆவணங்களுடன்  நிதியமைச்சக
25 மார்ச்சு 2011 கடிதத்தையும் சேர்த்து  அனுப்பி
வைத்தது.

இப்படி ஆளாளுக்கு போடும் கணக்குகள் -
இவற்றில் யார் கணக்கு  ஜெயிக்கப்போகிறது ?

எல்லாமே  தோற்றால் ?-
தோற்றால் -
அதுவே இந்த நாட்டிற்கு
ஒரு விமோசனமாக  அமையக்கூடும் !

Wednesday, September 28, 2011

எம்.ஜி.ஆர்., தி.மு.க.,வில் சேர்ந்து வளர்ந்த வரலாறு........

வளர்ந்த வரலாறு........




நண்பர் செங்கோவி அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகியை விட ஜெயலலிதாவை மக்கள் எம்.ஜி.ஆரின் வாரிசாக ஏற்றுக்கொண்டது ஏன்? என்ற கேள்வியை அனுப்பியிருந்தார். அந்த கேள்விக்கான பதிலை மூன்று பாகங்களாக வெளியிட்டிருந்தேன்.

அதை தொடர்ந்து அடுத்ததாக எம்.ஜி.ஆர்.,எப்போது தி.மு.க.,வில் இணைந்தார்? தி.மு.க.,வில் அவர் முக்கிய புள்ளியா? அல்லது லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரனை(எஸ்.எஸ்.ஆர்) போல சாதாரண நபர்தானா? ஏன் அவரை கட்சியிலிருந்து நீக்கினார்கள்? என்று அதாவது எம்.ஜி.ஆர்., தி.மு.க.,வில் இணைந்தது முதல் விலகியது வரை உள்ள வரலாறை எழுதவும் என்று கேட்டிருந்தார். அதற்கான நீண்ட பதில்கள்தான் இது.......



 ம்.ஜி.ஆர்., ஆரம்பத்தில் காமராஜரின் தொண்டராகவும், காங்கிரஸின் அனுதாபியாகவும் தான் இருந்தார். மாடர்ன் தியேட்டர் படங்களுக்காகவும், ஜூபிடர் தியேட்டர் படங்களுக்காவும், கலைஞரும், எம்,ஜி.ஆரும் ஒன்றாக பணியாற்றியபோது அவர்களுக்குள் நட்பு ஏற்பட்டது. அந்த நட்பின் காரணமாக தி.மு.க.,வை பற்றியும், அண்ணாவை பற்றியும் எம்.ஜி.ஆரிடம் எடுத்து சொன்ன கலைஞர், அவரை தி.மு.க.,வில் சேரும்படி வற்புத்தினார்.


அதே நேரம், ஏற்கனவே தி.மு.க.,வில் இருந்த லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆரின் மைத்துனர் நடிகர் டி.வி.நாராயணசாமி அவர்கள், அறிஞர் அண்ணாவின்  நாடகம் ஒன்றில் நடிப்பதற்காக எம்.ஜி.ஆரை அண்ணாவிடம் அழைத்து சென்று அறிமுகப்படுத்தினார். ஏற்கனவே எம்.ஜி.ஆர்., நடித்திருந்த படங்களை பார்த்திருந்த அண்ணா, அவரை வரவேற்று கனிவுடன் பேசினார். எவ்வளவு பெரிய தலைவர்?, எவ்வளவு எளிமையாக இருக்கிறார்? என்று அண்ணாவின் பண்பினால் கவரப்பட்ட எம்.ஜி.ஆர்., 1952-ஆம் ஆண்டு தி.மு.க.,வில் தன்னை இணைத்துக்கொண்டார்.


அப்படி எம்.ஜி.ஆர்., தி.மு.க.,வில் சேர்ந்தபோது, அக்கட்சியின் பிரச்சார பீரங்கியாக இருந்தவர் எம்.ஜி.ஆரை விட செல்வாக்குமிக்க கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள்.
எம்.ஜி.ஆருக்கு சிலகாலம் முன்பே அதாவது, பராசக்தி வெளிவரும் முன்பே நடிகர் திலகம் சிவாஜி அவர்களும் தி.மு.க.,வில் இணைந்திருந்தார்.
தி.மு.க.,வில் இணைந்த எம்.ஜி.ஆரை வைத்தே தி.மு.க., மாநாட்டு மேடைகளில் நாடகம் போடப்பட்டது.

1957- ஆம் ஆண்டு தி.மு.க., முதன்முதலில் தேர்தலில் போட்டியிட்டபோது எம்.ஜி.ஆர்., சில தொகுதிகளில் பிரச்சாரம் செய்தார். எம்.ஜி.ஆர்., தி.மு.க.,வில் நெருக்கமாக இருந்த காலகட்டத்தில் கலைவாணர் என்.எஸ்.கே மரணமடைந்தார். நடிகர் சிவாஜியும் திருப்பதி போய்வந்த சர்ச்சையில் சிக்கி தி.மு.க.,வை விட்டு வெளியேறி காங்கிரசில் இணைந்தார். தனக்கு தடையில்லாத காரணத்தால் அண்ணாவை இன்னும் நெருங்கினார் எம்.ஜி.ஆர்.,
நாடோடி மன்னன் எம்.ஜி.ஆரின் சொந்தப்படம். தனது சொந்த கம்பெனிக்கு ஆணும்,பெண்ணும் தி.மு.க., கொடியை பிடிப்பதுபோல் ஒரு சின்னத்தை உருவாக்கியிருந்தார் எம்.ஜி.ஆர்,. தொடர்ந்து தி.மு.க.,கொடியையும், உதயசூரியன் சின்னத்தையும் தன் படங்களில் காட்டியதன் மூலம், தன்னை ஒரு தீவிர தி.மு.க., அபிமானியாக காட்டி தி.மு.க., தொண்டர்களின் மனதில் இடம்பிடித்தார்.

நாடோடி மன்னன் வெற்றிவிழா நடந்தபோது அண்ணா கலந்துகொண்டு, “எம்.ஜி.ஆர். ஒரு வீரர்., விவேகம் நிரம்பிய தோழர். இந்தக்கனி தங்கள் மடியில் விழாதா என்று எல்லோரும் காத்திருந்தனர். ஆனால், இந்தக்கனி என் மடியில் விழுந்தது. நான் எடுத்து என் இதயத்தில் பத்திரப்படுத்திக்கொண்டேன்”,.என்று புகழாரம் சூட்டினார். அதன்பின் அண்ணாவின் இதயக்கனி ஆனார் எம்.ஜி.ஆர்.




1957- தேர்தலில் அதிகம் பிரச்சாரம் செய்யாத எம்.ஜி.ஆர்., 1962 தேர்தலில் தி.மு.க.,விற்காக மின்னல் வேக பிரச்சாரம் செய்தார். ஒரே நாளில் முப்பது பொதுக்கூட்டங்களுக்கு மேல் பேசினார். செல்லுமிடமெல்லாம் ரசிகர் பட்டாளம் கூடியது. அந்த தேர்தலில் தி.மு.க., ஐம்பது தொகுதிகளை கைப்பற்றியது. அதன் பின் எம்.ஜி.ஆரை சட்ட மேலவை உறுப்பினராக்கி(M.L.C.) கவுரவித்தார் அண்ணா.


அண்ணா மீதும், தி.மு.க.,வின் மீதும் இன்னும் ஈடுபாடு அதிகரித்தது எம்.ஜி.ஆருக்கு. காஞ்சித்தலைவன் என்று படமெடுத்து அண்ணா மீதுள்ள பக்தியை பறைசாற்றினார். எம்.ஜி.ஆரின் ரசிகர் மன்றங்கள் மிகப்பெரிய வளர்ச்சியடைந்தது அதன் பின் தான். எம்.ஜி.ஆரின் செல்வாக்கு இன்னும் வளர ஆரம்பித்தது. அந்த துணிச்சலில் தான் எம்.ஜி.ஆர். ஒரு காரியம் செய்தார். அதாவது....தனது எம்.எல்.சி பதவியை ராஜினாமா செய்து தி.மு.க.,வினரின் அதிருப்திக்கு ஆளானார். அந்த சம்பவத்தை தொடர்ந்து எம்.ஜி.ஆர்., நடிப்பில் வெளிவந்த என் கடமை திரைப்படம் தோல்வியை தழுவியது. தன் தவறை உணர்ந்த எம்.ஜி.ஆர்., சுதாரித்தார். அதனை தொடர்ந்து தி.மு.க.,வையும், அண்ணாவையும் மனதில் வைத்து மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் என்ற பாடலை தெய்வத்தாய் படத்தில் வைத்து தி.மு.க., வினரின் கோபத்தை தணித்தார்.

1967-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், முதன்முதலாக எம்.ஜி.ஆருக்கு போட்டியிட வாய்ப்பளித்தார் அண்ணா. அந்த தேர்தலில் பரங்கிமலை தொகுதியிலிருந்து போடியிட்டார் எம்.ஜி.ஆர்., அந்த சமயத்தில்தான் பெற்றால்தான் பிள்ளையா படப்பிரச்சினை மூலம்
எம்.ஆர்.ராதாவால் எம்.ஜி.ஆர்., சுடப்பட்டார். அதன் காரணமாக மருத்துவமனையில் இருந்ததால் பிரச்சாரத்திற்கு செல்லவில்லை அவர்.


ஆனால், எம்.ஜி.ஆர்., சுடப்பட்டு மருத்துவமனையில் இருக்கும் படம் தாங்கிய சுவரொட்டிகள் தமிழகம் முழுவதும் ஒட்டப்பட்டு மக்களை தி.மு.க.,வின் பக்கம் திருப்பியது.

அந்த தேர்தலில் தி.மு.க.,விற்கு அமோக வெற்றி. 138 இடங்களை பிடித்த தி.மு.க., முதன் முதலில் அரியனை ஏறியது. அதுவரை ஆளுங்கட்சியாக இருந்த காங்கிரசுக்கு 49 இடங்கள் மட்டுமே கிடைத்தது.

பரங்கிமலை தி.மு.க., வேட்பாளராக போட்டியிட்ட எம்.ஜி.ஆருக்கு 54,106 வாக்குகளும், அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ரகுபதிக்கு 26,432 வாக்குகளும் கிடைத்தது. தி.மு.க., வின் வெற்றிக்கு எம்.ஜி.ஆரும் ஒரு காரணம் என்று அறிந்திருந்த அண்ணா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆரிடம் உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டு ஆள் அனுப்பினார்.. எனக்கு ஒன்றும் வேண்டாம் என்று மறுத்த எம்.ஜி.ஆர் ஒரு வினோதமான கோரிக்கையை துண்டு சீட்டில் எழுதி அதை அண்ணாவிற்கு கொடுத்துவிட்டார்.  அது............
 
இன்னும் வ(ள)ரும்

அடுத்து வர இருப்பது...... 
கலைஞர் முதல்வராக வர உதவிய எம்.ஜி.ஆர். 

ஸ்பெக்ட்ரம் வழக்கு : இம்மாத இறுதிக்குள் தயாதிமாறன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ; சி.பி.ஐ. தகவல்

2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள் குறித்து சுப்ரீம்கோர்ட்டு மேற்பார்வையில் சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது.
 ஸ்பெக்ட்ரம் வழக்கு : இம்மாத இறுதிக்குள் தயாதிமாறன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ; சி.பி.ஐ. தகவல்
தயாநிதிமாறன் தொலைதொடர்பு மந்திரியாக இருந்தபோது 2006-ம் ஆண்டு ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளை மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்குமாறு அதன் உரிமையாளர் சிவசங்கரனை தயாநிதிமாறன் வற்புறுத்தியதாகவும், அப்படி விற்கப்பட்ட பின்னர்தான் ஏர்செல் நிறுவனத்துக்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும் அதற்கு பிரதிபலனாக மேக்சிஸ் நிறுவனம் தயாநிதி மாறனின் குடும்ப நிறுவனத்துக்கு பெருந்தொகை முதலீடு செய்ததாகவும் சி.பி.ஐ. தனது விசாரணை அறிக்கையில் குற்றம் சாட்டி இருந்தது.  
 
இந்த குற்றச்சாட்டால் எழுந்த சர்ச்சையால் தயாநிதி மாறன் தான் வகித்து வந்த ஜவுளித்துறை மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.  
 
இந்த நிலையில் சி.பி.ஐ. சார்பில் கடந்த 1-ந்தேதி மற்றொரு விசாரணை அறிக்கை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது.  விசாரணையின்போது சி.பி.ஐ. சார்பில் ஆஜரான வக்கீல் வேணுகோபால் கூறுகையில், ஏர்செல் நிறுவனத்தை மலேசியா நிறுவனத்துக்கு விற்பனை செய்ததில் தயாநிதி மாறனின் பங்கு குறித்த வலுவான ஆதாரம் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை என்று குறிப்பிட்டார்.
 
இந்நிலையில் இன்று சிபிஐ உச்சநீதிமன்றத்தில் ஸ்பெக்ட்ரம் ஊழலில் தயாநிதிமாறன் பங்கு குறித்த நிலை அறிக்கையினை தாக்கல் செய்தது. மேலும் தயாநிதி மாறன் மீது இம்மாத இறுதிக்குள் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்படும் என சி.பி.ஐ. தெரிவித்தது.
 

கனிமொழிக்கு தூக்கு தண்டனை கிடைக்கும் என்று செய்தி போடாதவரை மகிழ்ச்சி - கருணாநிதி!

கனிமொழிக்கு தூக்குத் தண்டனை கிடைக்கும் என்று செய்தி வெளியிடாதவரை மகிழ்ச்சியே என்று அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

கனிமொழி மீது தற்போது சி.பி.ஐ. சாற்றியிருக்கின்ற குற்றச்சாட்டு, பத்தாண்டுகள் தண்டனைக்குரியது என்று இன்று மாலைப் பத்திரிகைகளில் பெரிதாக வெளியிட்டிருக்கிறார்களே? என்று செய்தியாளர் கேட்ட கேள்விக்கு

''மாலை மலர், மாலை முரசு போன்ற நாடார் பத்திரிகைகள், கனிமொழி நாடார் வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் இந்த அளவிற்கு சாதிப் பற்றோடு அந்தச் செய்திக்கு முக்கியத்துவம் ஆயுள் தண்டனை கிடைக்கும் என்றெல்லாம் செய்தி வெளியிட்டிருக் கிறார்கள். அவர்கள் தூக்குத்தண்டனை கிடைக்கும் என்றுபோடவில்லை. அதுவரை மகிழ்ச்சி.'' என்று பதில் அளித்தார்.

அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில் நீதிபதிகளுக்குப் பதிலாக பத்திரிக்கையாளர்களே நீதிபதிகளாக மாறி தீர்ப்பு வழங்குவது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல என்று கருணாநிதி மேலும் தெரிவித்தார்.

தமிழக உள்ளாட்சித் தேர்தல் சொல்லப்போகும் சேதிதான் என்ன?

.தி.மு.க-  
அதிமுக ஆட்சியில் முதல்வர் ஜெயலலிதா நல்ல ஆட்சி கொடுக்க முனைப்பாக இருக்கிறார். நில அபகரிப்பில் நடவடிக்கை எடுத்தது பொது மக்களிடம் நல்ல பெயர் கொடுத்துள்ளது. இதுவரையில் பெரிய தவறுகள் எதுவும் செய்யவில்லை, ஆளும் கட்சி என்பது அவர்களுக்கு ஒரு பிளஸ், ஜெயிப்பது உறுதி

தி.மு.
தன் தவறை இன்னும் உணரவில்லை, திரும்பவும் ஊழலை பெரிதாகவே செய்வார்கள் அவர்கள் பெரிய தோல்வி அடையவேண்டியது அவசியம், அது மற்ற கட்சிகளுக்கு பாடமாக இருக்கும்.

தி மு க-
வைகோ ஈழ தமிழர்களுக்கு  ஆதரவு அளிப்பவர் அதனால் தமிழர்களுக்கு எவ்வித நன்மையும் இல்லை மனச்சாட்சியுடன் வாக்களித்தால் வைகோவின்
தி மு விற்கு வாக்களிக்க வேண்டும் தமிழக மக்கள் செய்வார்களா பார்ப்போம்

தே.மு.தி.க-
சினிமா நடிகர் கட்சி கருணாநிதியை திட்டி திட்டியே எதோ இவர் வந்து பெரிய புரட்சி பண்ணப்போகிறவர் மாதிரி பில்டப் பண்ணி, சினிமா வசனங்களை பேசி எதிர்க்கட்சி தலைவர் என்ற பதவியை வாங்கி விட்டார்!  சட்டசபைக்கே செல்லாமல் இந்த மகா நடிகர் என்ன கிழித்துக் கொண்டிருக்கிறார் என்று மக்கள் பேசி தலையை சொரிந்துகொண்டிருக்கிறார்கள்!

 காங்கிரஸ்
கூட்டணி என்ற போர்வைக்குள்  இத்தனை நாட்களாக சுகமாக உறங்கிக்கொண்டிருந்தது! இனிமேல் இந்த தேர்தலுக்கு பின்னர் படுப்பதற்கே இடம் இருக்காது!

பா..., வி.சி. புதிய தமிழகம்-
நாங்களும் கச்சேரிக்கு போகிறோம் போன்ற கட்சிகள். ஜாதி கட்சிகள், பிரிவினைவாத கட்சிகள் அழிவது தமிழகத்திற்க்கு நல்லது.பெரிய அளவில் தோல்வி அடையவேண்டியது அவசியம், அது மற்ற கட்சிகளுக்கு பாடமாக இருக்கும்.

Tuesday, September 27, 2011

"ஆவீன மழை பொழிய......."

 
ன் டிவியின் தலைமை நிர்வாக அதிகாரி ஸாக்ஸேனா கைது செய்யப்பட்டதை அந்த டிவியின் செய்திகளில் மிகப்பெரும் அநீதியாகவும் பழிவாங்கும் நடவடிக்கையாகவும் சித்திரிப்பது நகைப்பை வரவழைக்கின்றது. ஸாக்ஸேனா மீது 420(மோசடி), 406(கையாடல்), 385(மிரட்டல்), 506(2)(கொலை மிரட்டல்) ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. நாட்டு நடப்பை உற்று நோக்கிக் கொண்டிருப்பவர்களுக்கு இது அநீதியாகவோ பழிவாங்கும் நடவடிக்கையாகவோ தெரியாது.

மேலும் ஜெயலலிதா அரசு பழிவாங்குவதாகச் சொல்லும் அளவுக்கு சன் டிவி நிர்வாக அதிகாரி அரசியல்வாதியோ அல்லது ஜெயலலிதா எப்பொழுதும் எதிரியாகவே பார்க்கும் திமுக தலைவர்களுள் ஒருவரோ அல்லர். ஸாக்ஸேனா மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு வலுவான ஆதாரங்கள் இருப்பதாகக் காவல்துறை சொல்கின்றது. அவர் கைது செய்யப்பட்ட செய்தி அறிந்ததும் திரைப்படத் துறையினர் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர் என்ற செய்தி, திரைத்துறையினரை சன் டிவி மற்றும் சன் பிக்சர்ஸ் குழுவினர் எப்படி நடத்தினர் என்பதற்குச் சான்று.

இன்றுதான் என்றில்லை. சன் டிவி முன்பிருந்தே இந்த அராஜகத்தைக் கையாண்டே வந்துள்ளது. தங்கள் டிவிக்குப் புதிய படங்களைக் குறைந்த விலைக்கு உரிமை கோருவது, அப்படித் தர ஒப்புக்கொள்ளாத தயாரிப்பாளர்களின் படங்களை 'டாப்டென்' தர வரிசை என்ற பெயரில் மிகக் கேவலமாக விமர்சித்துக் கடைசி வரிசைக்குத் தள்ளுவது போன்ற திமிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தது. இந்தத் திமிருக்குக் காரணம் மத்தியிலோ மாநிலத்திலோ அமைச்சர்களாக திமுகவினர் - குறிப்பாக முரசொலி மாறனும் கருணாநிதியும் இருந்ததுதான். அதிகார மமதையில் ஆட்டம் போட்டவர்கள் இன்று "அநீதி அக்கிரமம்" எனக்கூச்சல் போடுவது அபத்தம்.

திமுக ஆட்சியில் இருக்கிறது என்ற திமிரில் ஸாக்ஸேனாவின் ரவுடிப்பட்டாளம் சென்னையில் செக்கர்ஸ் ஹோட்டலிலும் ஒரு அப்பாவிப் பெண்மணியின் வீட்டிலும் நடத்திய அராஜகம் அன்றே புலனாய்வு இதழ்களில் வெளியானதுதான். இப்போதும் தம்மைக் கைது செய்ய முனைந்த காவல் துறையினரிடமும் பழைய நினைப்பிலேயே பேசியுள்ளார் ஸாக்ஸேனா.

காவல்துறை நடவடிக்கை ஸாக்ஸேனாவுடன் நிற்காது. கலாநிதி மாறனும் உள்ளே போவது உறுதி. திரைப்படத் தயாரிப்பாளர்களை மிரட்டியது, மோசடி செய்தது போன்ற குற்றங்களுக்காக மாநிலக் காவல்துறையும் சிவசங்கரனை மிரட்டி ஏர்செல் பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவன அதிபர் அனந்த கிருஷ்ணனுக்கு விற்றதால் சன் டிவி குழுமத்தின் சன் டிடிஎச் நிறுவனத்தில் அவர் ரூ. 600 கோடி முதலீடு செய்துள்ள வழக்கில் மத்தியப் புலனாய்வுத் துறையும் கலாநிதியைக் கைது செய்யும். மேலும் சன் எப்.எம் இல் ரூ. 100 கோடி வரை மேக்சிஸ் நிறுவனம் முதலீடு செய்துள்ளதையும் விசாரித்தால் கலாநிதி தப்புவது கடினமே.

"குடைநிழல் அமர்ந்து குஞ்சரம் ஊர்ந்தோர் நடை மெலிந்து ஓரூர் நண்ணினும் நண்ணுவர்........."
"ஆற்றங்கரை மரமும் அரசறிய வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே ...." என்றெல்லாம் சின்ன வகுப்பில் பள்ளியில் படித்த நீதி வெண்பாக்கள் நினைவுக்கு வருகின்றன.

இதையெல்லாம் கருணாநிதி தம் வாழ்நாளிலேயே காண நேர்ந்தது அவரது விதி என்றே சொல்லவேண்டும். லட்சக்கணக்கான தொண்டர்களின் வியர்வையிலும் உழைப்பிலும் கிடைத்த நிதியில் கட்டப்பட்ட கட்சிச் சொத்தை அடகு வைத்துத் துவங்கப்பட்ட சன் டிவி, பேரன்களின் அராஜகத்தால் முடங்கப் போவதை அவர் பார்க்கப் போகிறார். தாம் ஆட்சியை இழந்த உடன் 'ஜெ டிவி' முடக்கப்பட்டதை மறவாத ஜெயலலிதாவும் சன் டிவியின் முடக்கத்தை எதிர்பார்த்துள்ளார்.


ஆட்சியை இழந்து, மனைவி மீது குற்றப்பத்திரிகை வழங்கப்பட்டு, பாசமகள் சிறையிலடைக்கப் பட்டு, அணுக்கத் தொண்டன் அமைச்சர் பதவியிழந்து சிறையில் வாட, பேரனும் அமைச்சர் பதவியிழந்து அடுத்ததாகச் சிறைக்குப் போக இருக்கும் சூழ்நிலையில் கருணாநிதியைப் பார்த்தால்
ஆவீன மழைபொழிய இல்லம் வீழ
அகத்தடியாள் மெய்நோவ அடிமை சாக
மாவீரம் போகுதென்று விதைகொண் டோட
வழியிலே கடன்காரன் மறித்துக் கொள்ளச்
சாவோலை கொண்டொருவன் எதிரே தோன்றத்
தள்ளவொணா விருந்துவர சர்ப்பந் தீண்டக்
கோவேந்தர் உழுதுண்ட கடமை கேட்கக்
குருக்கள்வந்து தட்சணைகள் கொடு என்றாரே!


எனும் பாடல் நினைவுக்கு வருகிறது; இன்றைய நிலையில் அது அவருக்குப் பொருத்தமாகவும் அமைகிறது.

Monday, September 26, 2011

இப்போது நமக்குத் தேவை, ஒரு நல்ல தலைமை! நேர்மையும் தெளிவான பார்வையும்!



இந்திய வரைபடத்தைக் கொஞ்சம் உற்றுப் பார்த்தால், சுற்றிலும் இந்தியாவைத் தங்கள் எதிரியாகவே கருதும் நாடுகளால் சூழப் பட்டிருப்பதைக் காண முடியும்

பாகிஸ்தான்வங்காள தேசம்பாகிஸ்தான் வசமுள்ள காஷ்மீர்ஆப்கானிஸ்தான்,மியான்மார் என்று தற்போது அழைக்கப் படும் பர்மாஇலங்கை,நேபாளம்இந்த நாடுகள் அனைத்துமே தோற்றுப் போன அரசு அமைப்புக்கள்அல்லது ரவுடி அரசு அமைப்புக்களாக (Rogue States) இருப்பதைப் பார்க்க முடியும்

இயல்பாகவே இந்தியாவோடு விரோதம் பாராட்டி வரும் இந்த நாடுகளில்திட்டமிட்டு இந்திய இறையாண்மைக்கு எதிரான சதிகளைபாகிஸ்தானும்,சீனாவும் தூண்டிவிட்டுக் கொண்டு இருப்பதைசெய்தித் தாட்களை வழக்கமாகப் படிக்கும் ஒரு சிறுவன் கூட சொல்லிவிட முடியும்.

ஆனால், ஒரு சிறுவனுக்குத் தெரிகிற அளவு கூட நமது அரசியல் வாதிகளுக்கு இவை புரிவதில்லை. அவர்களுக்குத் தங்கள் சொந்தக் கல்லாவைப் பெருக்கிக் கொள்வதற்கே நேரம் சரியாக இருக்கிறது. 

அதிகாரிகளுக்கோ, அமைச்சர்களுக்குக் காசுபார்த்துக் கொடுக்கும் சாக்கில், தங்களுடைய பைகளையும் நிரப்பிக் கொள்ளவே நேரம் போதவில்லை. இந்தியக் குடிமகனுக்கோ, எதை எடுத்தாலும் அரசு அல்லது ஒரு தலைவன் தான் வந்து செய்ய வேண்டும்! தானே தனக்காகச் செய்து கொள்கிற சாமர்த்தியம் இன்னமும் வராத நிலையில் தான் சராசரி இந்தியக் குடிமகன் இருக்கிறான் என்றுதான் தோன்றுகிறது.

அற்பப்புழு மீதுள்ள ஆசையால் தூண்டிலில் சிக்கிக் கொள்கிற மீன் மாதிரி, இலவசங்களைக் காட்டி ஏமாற்றுகிற தலைவர்களை இந்தியக் குடிமகன்கள் நம்புகிறார்கள் என்று சொல்லிவிட முடியாது, ஆனால் அந்த மோசடிக் காரர்களை யாரோ ஒரு ஹீரோ அல்லது வேறொரு தலைவர் வந்து தான் தட்டிக் கேட்கவேண்டும், தாங்கள் செய்வதற்கு ஒன்றுமில்லை என்கிற மாதிரி, பொழுது தவறாமல் மானாட, மயிலாட, சினிமாக் காரிகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பார்த்துக் கொண்டு மிச்சமிருப்பதையும் தொலைத்துக் கொண்டு இருக்கிறார்கள். 

அறுபது வருடங்களுக்கு முன்னால்விடுதலை பெற்ற இந்த நாடுகள்பிரதேச ஆதிக்கப் போட்டியில் எவ்வளவு மோசமான எதிரிகளாக மாறிப் போயின என்பதையும்ஒவ்வொரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும் கணக்கில் எடுத்துக் கொண்டு பார்க்கும் போது தான்எவ்வளவு ஆபத்தான சூழலில் நாம் இருக்கிறோம் என்பது புரியும்

பிரிட்டன் தனது காலனி ஆதிக்கத்தை விட வேண்டிய நிர்பந்தம் வந்தபோதுஒவ்வொரு இடத்திலும் எவ்வளவு குட்டையைக் குழப்ப முடியுமோ அந்த அளவுக்குக் குழப்பி விட்டுஇருக்கிறவர்கள் அடித்துக் கொண்டு சாகட்டும் என்று குள்ளநரித் தனமாக வெளியேறியது என்பதையும்

இரண்டு உலகப் போர்கள்,அதன் பின்னால்ஆங்கிலேயர்களுடைய மவுசு காலிப் பெருங்காய டப்பா என்ற அளவுக்கே சுருங்கிப்போன நிலையில்புதிய வில்லனாக அமெரிக்கா சர்வ தேச நிகழ்வு ஒவ்வொன்றிலும் நாட்டாமை செய்ய ஆரம்பித்ததையும் சேர்த்துப் பார்க்கத் தெரிந்தால்நம்முடைய நாடு எதிர்கொள்ள வேண்டி இருக்கிற சவால்களைப் புரிந்து கொள்ள முடியும்.

எதிரிகள் என்று சொல்லும் போதுவெளியே இருக்கும் எதிரிகள்நமக்குள்ளேயே இருந்து கொண்டு அற்பத்தனமான காரணங்களுக்காக தேசத்தைத் துண்டாட நினைக்கும் எதிரிகள் என்று பிரித்துப் பார்க்க வேண்டும்

இங்கே எழும் கலகக் குரல்கள் ஒவ்வொன்றின் பின்னாலும் ஒரு வெளி எதிரியின் தூண்டுதல்பங்கு,பயிற்சிபண உதவி இப்படி நிறைய இருக்கிறது 

ஒரு அரசை நடத்துகிற அடிப்படைத் தகுதி கொஞ்சமும் இல்லாத நபர்களைத் தேர்ந்தெடுத்த ஒரே பாவம்பொறுப்பு இல்லாத நிர்வாக இயந்திரம் என்று பிரச்சினைகளை இன்னமும் பூதாகாரமாக்கிக் கொண்டிருக்கும் அவலத்தைத் தொட்டுச் சொல்கிற முகமாகத் தான்சீனப் பெருமிதம் வயது அறுபது என்ற தலைப்பில் ஒரு பதிவை எழுதினேன்.

மகாத்மா காந்தியைஇங்கே ஒருவர் தீவீரமாக வெறுத்தாலும் சரிஆதரித்தாலும் சரி, காந்திஜி தவிர்க்க முடியாத ஆளுமையாக இந்த தேசத்தின் சமீப கால வரலாறோடு பின்னிப் பிணைந்திருக்கிறார்

காந்தியின் ஆளுமையின் மீது சவாரி செய்து ஆட்சிப் பொறுப்பை ஏற்ற ஜவஹர்லால் நேருஅடிப்படையில் நல்ல எண்ணம் உள்ளவராக இருந்தபோதிலும்ஜனநாயகத்தை மதித்து நடந்த போதிலும்அவருடைய சில பலவீனங்கள்தேசத்திற்கு பெருத்த சேதத்தை ஏற்படுத்தின.இன்னமும் சேதங்கள் தொடர்கின்றன.
இது தான் சுதந்திர இந்தியாவின் நவீன சிற்பி நேருவின் பதினேழு ஆண்டு கால சாதனை

நேருவிடம் இருந்த தனிநபர் ஆளுமைபிறரது எண்ணங்களை வெளிப் படையாகச் சொல்ல முடியாத சூழ்நிலையைக் காங்கிரஸ் கட்சிக்குள்ளும்,ஆட்சியிலும் ஏற்படுத்தியதுகாந்திஜியின் மீது இருந்த அபிமானத்தால் நேருவோடு முரண் பட்டவர்கள், காந்திஜி மனம் புண் பட்டுவிடக் கூடாதே என்று ஒதுங்கிப் போன தருணங்கள்சுதந்திர இந்தியாவின் வரலாற்றில்,மாறாத வடுக்களாக இன்றைக்கும் இருக்கின்றன. 

நல்லதை நினைத்தவர்கள் ஒதுங்கிப்போனார்கள்சம்சா அடித்தேஆளுபவரைஅதிகார மையத்தில் இருப்பவரைச் சுற்றியே கும்மியடிக்கும் பேர்வழிகள் காங்கிரசுக்குள் அதிகமாகப் புகுந்து கொண்டார்கள் 

காங்கிரஸ் கட்சியின் வரலாறேஆளுபவரோடு இசைந்து போய்க் கொஞ்சம் சலுகைகளைக் கூட்டிக் கொடுக்க முடியுமா என்று பவ்யமாகப் பணிந்து கேட்கும் மிதவாதத்தினரால் நிரப்ப பட்டது தான்!

1937 களில் இந்தப் போக்கிற்கு நேருவின் தந்தை மோதிலால் நேருவே முன்னணியில் இருந்து நடத்தியதும், இங்கே நிறையப் பேருக்குத் தெரியாத தியாக வரலாறு! 

காங்கிரசில் விரல் விட்டு எண்ணக் கூடிய சிலரேசுதந்திரத்தைப் பற்றிப் பேசினார்கள்அப்படிப்பட்ட சிலருமே,கண்முன்னால் இருந்த யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளாமல்வெவ்வேறு வழிகளில் பயணப்பட்டுக் காணாமலும் போனார்கள்

காங்கிரசின் பழைய வரலாறு, முரண்பாடுகளின் மொத்த உருவம். அத்தனை கோளாறுகளையும் மீறி, காந்தி என்றொரு ஆளுமை, ஜனங்கள் அவர் சொன்னதை அப்படியே கேட்டு நடந்த விந்தை தான், காங்கிரசை இன்றைக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்த கட்சியாகச் சொல்லிப் பெருமிதப் பட்டுக் கொள்ள முடிகிறது. ஆனால், சுதந்திரத்தைக் காப்பாற்றிக் கொள்ள வழிநடத்தும் தலைவர்கள் கிடைத்தார்களா என்று பார்த்தால், காந்தியை மறந்த காங்கிரஸ் ஜீரோவாகி நிற்கிறது.

நேருவின் ஆட்சிக் காலத்தில் ஆரம்பித்துஇன்று வரை தீர்வு காணப் படாமல்பெரும் அச்சுறுத்தலாகக் கூட மாறிக் கொண்டு வரும் பிரச்சினைகள்இன்றைய ஆட்சியாளர்களுடைய திறமைக் குறைவுஅலட்சியத்தால் தேசத்திற்கு ஏற்படக் கூடிய சேதம் இவைகளைத் தொட்டும் எழுத வேண்டும் என்ற எண்ணத்தில் தான் சென்ற அக்டோபரில் மூன்று பதிவுகளுமே ஒரு அச்சாரமாக ஆரம்பித்தன.


காந்தி பிறந்த அதே நாளில் தான்முப்பத்தைந்து வருடம் கழித்து 1904 ஆம் வருடம்  அக்டோபர் இரண்டாம் தேதிலால் பஹதூர் சாஸ்திரியும் பிறந்தார்நேருவின் மறைவுக்குப் பின்னால்அடுத்த பிரதமராகப் பெருந்தலைவர் காமராஜர் அவர்களால் அடையாளம் காட்டப்பட்டவர்பதவியில் இருந்த காலம் சிறிதே என்றாலும் கூடநேருவின் காலத்தில் இருந்த தரித்திர இமேஜை உடைத்துஇந்தியா அவ்வளவு எளிதில் புறக்கணித்துவிட முடியாத ஒரு நாடுவருங்காலத்தில் வலிமையான நாடாக வளரக்கூடிய நாடு என்பதைச் செயலில் காட்டிய மிக உயர்ந்த மனிதர்

ஜெய் ஜவான்ஜெய் கிசான்! என்ற கோஷம் அவருக்குப் பின் கொஞ்ச காலம் வரை நினைவு இருந்தது

நல்லவர்களைத் தான் நாம் சீக்கிரம் மறந்து விடுவோமே!

நேருவைப்போல மிகப் பெரிய பணக்காரக் குடும்பத்தில் பிறக்கவில்லைஏழ்மையில் மிகவும் கஷ்டப்பட்டு முன்னேறியவர் சாஸ்திரிஅரசியலில் கூடநேருவுக்குக் கிட்டத்தட்டமுடிசூடா இளவரசர் அந்தஸ்தை காந்தி வழங்கியிருந்ததுபோலசாஸ்திரிக்கு எவரும் காட்பாதர் ஆக இருந்ததில்லைஆனாலும்நேர்மையான செயல்பாடுகள்திறமை மதிக்கப்பட்ட காலம் அது என்பதனால்விடுதலைப்போராட்டத்தில் மிகவும் கவனிக்கப் பட்ட தலைவராக வளர்வதில் லால் பஹதூர் சாஸ்திரிக்கு எந்தத் தடையும் இருக்கவில்லை.

இன்றைய நவீன இந்தியாவின் சிற்பியாக நேருவை மட்டுமே காங்கிரஸ் கட்சி முன்னிறுத்துகிறதே தவிர,லால் பஹதூர் சாஸ்திரி மாதிரித் திறமையான நபர்களின் பங்களிப்பைஅவர்கள் இந்த தேசத்தின் முன்னேற்றத்திற்கு ஆற்றியிருக்கும் பணிகளை வாய் விட்டுக் கூட நாலு வார்த்தை சொல்வதில்லை.




ஆகஸ்ட் 31, 1965-நூறு டாங்குகளுடன் பாகிஸ்தான் காஷ்மீரின் சம்ப் பகுதிக்குள் ஊடுருவி விட்டதாகத் தகவல் வருகிறதுகுறைந்த நேரத்திற்குள்ளாகவேஇந்தியாவிலிருந்து காஷ்மீரைத் துண்டித்து விட முடிகிற நோக்கத்தோடு பாகிஸ்தான் படைகள் தயாராகதிட்டமிட்டு நடத்திய தாக்குதல் அது

நேருவின் மறைவுக்குப் பின்னால்லால் பஹதூர் சாஸ்திரி பிரதமர் பொறுப்பை ஏற்றுக் கொண்டு முழுதாக அப்போது மூன்று மாதங்கள் கூட ஆகியிருக்கவில்லை!

குள்ளமான மனிதர் தான்இமயமலையை விட உயர்ந்து நின்ற உறுதியோடு கூடிய பிரதமர் அவர் என்பது பாகிஸ்தானுக்கு மட்டும் அல்ல இந்தியாவிலேயே நிறையப்பேருக்குத் தெரியாமல் தான் இருந்ததுபுதிய தாக்குதல் முனை ஒன்றை ஆயத்தம் செய்ய உத்தரவிட்டார்லாகூர் மீது தாக்குதல் நடத்துவது என்று முடிவெடுக்க ஐந்தே நிமிடங்கள் தான் ஆனது.

1965 ஆம் ஆண்டு இந்திய பாகிஸ்தான் யுத்தம் ஒருவிதமான முடிவுக்கு வந்தபோதுமேற்கத்திய நாட்டின் தூதர் ஒருவர் இப்படிச் சொன்னதாகஅமெரிக்க டைம் பத்திரிக்கைஅக்டோபர் முதல் தேதியிட்ட இந்த செய்தியில் எழுதுகிறது:

”It used to be you could feed the word 'India' into the machine and it would spit out 'Maharajahs, snakes, too many babies, too many cows, spindly-legged Hindus.' Now it's apparent to everybody that India is going to emerge as an Asian power in its own right."

ரயில்வே ஸ்டேஷனில் எடைகாட்டும் மெஷினில் காசைப் போட்ட டன் அட்டையைத் துப்புவது போல,இந்தியா என்று சொன்ன டனேயேமகாராஜாக்கள்பாம்பாட்டிகள்எக்கச் சக்கமாகக் குழந்தைகள்ஏகப்பட்ட பசுமாடுகள்தொடைகள் வலுவில்லாத கால்களோடு கூடின இந்துக்கள் என்று தான் நினைப்பு வரும். தன்னளவிலேயே ஆசியாவின் சக்தி வாய்ந்த நாடாக இந்தியா உருவாகப் போகிறது என்பது எல்லோருக்குமே இப்போது புரிகிறது.

காந்தியைப் பற்றிஅவர் நடத்திய சத்தியாக்கிரகப்போராட்டத்தைப் பற்றிக் கொஞ்சம் மரியாதையுடனேயே மேற்கத்திய நாட்டவர் பேசினாலும் கூடஇந்தியா என்றால் பாம்பாட்டிகள்சாமியார்கள்மகாராஜாக்கள்,பிச்சைக்காரர்கள்கசகசவென்று எங்கு பார்த்தாலும் சனத்தொகைக் கூட்டம்நாகரீகமற்றவர்கள் என்ற எண்ணம் தான் இருந்தது.

போதாக்குறைக்கு 1948 இல் பாகிஸ்தானுடனான காஷ்மீர் ஆக்கிரமிப்புஅதில் சமாதானத் தூதுவராகக் காட்டிக் கொள்ள நேரு செய்த அசட்டுத்தனம் அப்புறம்,1962 சீனாவுடன் எல்லைத் தகராறு இதெல்லாம் சேர்ந்து இந்தியர்கள் என்றாலே தொடை நடுங்கிகள்  (ஸ்பின்ட்லி லெக்ட் என்ற வார்த்தைப் பிரயோகம் )அப்படித்தான் பொருள் தருகிறது.) நேருவின் பலவீனங்களை வைத்தே அப்படி எடைபோட்டார்கள் என்றும் சொல்லலாம். 

அப்படித்தான் நினைத்துக் கொண்டிருந்தார்கள்!

வீரர்கள் பரம்பரையாகத் தங்களை எண்ணிக் கொண்டதும்இந்தியர்கள் கோழைகள் என்று கருதியதுமே நடந்து முடிந்த யுத்தத்தின் படிப்பினைகள் என்று புலம்புகிறது பாகிஸ்தானிய டிஃபென்ஸ்  ஜார்னல் கட்டுரை ஒன்று!



கோழைத்தனமான தலைமை மாறினதும் அதே இந்தியாவைப் பற்றிய கண்ணோட்டமே தலைகீழாக மாறிப்போனது என்பதற்காக மட்டுமே இதைச் சொல்கிறேன்.

உள்ளது உள்ளபடிஅறிந்துகொள்வதற்கான ஒரு படிக்கட்டு மட்டுமேசாஸ்திரி எனும் அற்புதமான மனிதரை இன்னமும் அறிந்துகொள்ள வேண்டும் !

தொடர்ந்து பேசுவோம்!

**சென்ற வருடம் அக்டோபரில் எழுதியதன் மீள்பதிவு இது. சென்ற பதிவில் தினமணி தலையங்கத்தைத் தொட்டு எழுதிய பதிவில் திரு சக்ரபாணி எழுப்பிய கேள்விக்குப் பதில் சொல்வதற்காக என்று அல்ல. மிகச் சமீப காலத்திய வரலாற்றையே எவ்வளவு தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறோம் அல்லது எதுவுமே தெரியாமல் இருக்கிறோம் என்பதற்காக, கொஞ்சம் தேவையான திருத்தங்களுடன்!



*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...