Monday, September 5, 2011

நில அபகரிப்பு வழக்கில் தலைமறைவான முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தம்பி கைது; கொச்சி விமானநிலையத்தில் சுற்றிவளைப்பு



நில அபகரிப்பு வழக்கில் தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பி ராம ஜெயம் வெளிநாடு தப்ப முயன்ற போது இன்று காலை கொச்சி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.   திருச்சி சத்திரம் பஸ்நிலையம் அருகே உள்ள கலைஞர் அறிவாலயம் கட்டுவதற்காக ரூ.10 கோடி மதிப்புள்ள 13 ஆயிரம் சதுர அடி நிலத்தை தன்னிடமிருந்து மிரட்டி அபகரித்து கொண்டதாக துறையூரை சேர்ந்த டாக்டர் சீனிவாசன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் நில மோசடி தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.
 நில அபகரிப்பு வழக்கில் தலைமறைவான
 
 முன்னாள் அமைச்சர்
 
 கே.என்.நேரு தம்பி கைது;
 
 கொச்சி விமானநிலையத்தில்
 சுற்றிவளைப்பு
இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, லால்குடி சட்ட மன்ற உறுப்பினர் சவுந்திர பாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ. அன்பில் பெரிய சாமி, துணை மேயர் அன்பழகன், நேருவின் தம்பி ராமஜெயம், ஜவுளிக்கடை அதிபர் சுந்தர்ராஜூலு, செரீப், குடமுருட்டி சேகர், மாமுண்டி உள்பட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.  
 
இதில் முதல்கட்டமாக கடந்த 25-ந்தேதி முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, அன்பில்பெரியசாமி, ஜவுளிக் கடை அதிபர் சுந்தர்ராஜூலு, துணைமேயர் அன்பழகன், சவுந்திரபாண்டியன் எம்.எல்.ஏ. உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கடலூர், திருச்சி, சேலம் ஆகிய பல்வேறு சிறைகளில் தனித்தனியாக அடைக்கப்பட்டுள்ளனர்.
 
இந்தநிலையில் தலைமறைவாக இருந்த நேருவின் தம்பி ராமஜெயத்தை போலீசார் தேடி வந்தனர். அவர் வெளிநாடு தப்பி சென்றிருக்கலாம் அல்லது வெளிநாட்டிற்கு தப்பி செல்ல முயற்சிக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் அவரது பாஸ்போர்ட்டை முடக்கி வைத்திருந்தனர்.
 
இந்தநிலையில் இன்று காலை ராமஜெயம் கொச்சி விமானநிலையத்தில் இருந்து வெளிநாட்டிற்கு தப்பி செல்ல இருப்பதாக விமான நிலைய இமிக்கிரேசன் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் தொடர்ந்து போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அப்போது கொச்சி விமானநிலையத்திற்கு வந்த ராமஜெயத்தை இமிக்கிரேசன் போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர்.
 
பின்னர் இதுபற்றி உடனடியாக திருச்சி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் அவரை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருச்சி கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கருத்து
 
CAUVERY
இவர் வெளிநாட்டில் ஒரு குட்டி தீவு வைத்துள்ளார். திருச்சி தில்லை நகர், சாஸ்த்ரி நகர் மேலும் லால்குடி, தஞ்சாவூர், ஸ்ரீரங்கம், திருவானியாகோயில் போன்ற இடங்களில் பினாமி பேரில் சொத்துவைத்துல்லன்.
 
வானம் said:
இவர்களுக்கும் இந்தியாவில் கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவிட்டு வெளிநாடு தப்பி செல்லும் கிரிமினல்களுக்கும் என்ன வித்தியாசம்?. அவர்களுடைய வரிசையில் திமுகவினரும் வந்துவிட்டனர். இவர் அண்ணன் முன்னாள் மந்திரி இப்படி செய்ய அறிவுறித்தினாரா அல்லது கட்சி தலைமை அறிவுறித்தியதா? கட்சியினரின் திகார் சங்கமத்தில் இருந்து வெளிநாட்டிற்கு தப்பி செல்லும் முயற்சி வரை நடைபெறும் நிகழ்வுகளை பார்த்தால் இது ஒரு அரசியலைப்பில் உள்ள ஒரு கட்சியா அல்லது கிரிமினல்கள் நிறைந்த ஒரு இயக்கமா என்று எண்ண தோன்றுகிறது. நல்ல வேலை விரட்டப்பட்டார்கள்.
 lara said :
இதுக்கு பெயர்தான் சட்டப்படி எதிர் கொள்ளுவோம் என்பதா?

S.Govindarajan said :
தவறு செய்யாதவர் வெளி நாட்டிற்கு தப்பி ஓட முயற்சிப்பதேன்.அடுத்தவன் சொத்திற்கு ஆசைப்பட்டால் இப்படித்தான் நடக்கும் .
 

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...