மத்திய மந்திரி ப.சிதம்பரம் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது பிரதமர் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

முதல்-அமைச்சர் ஜெயலலிதா நேற்று போயஸ் கார்டனில் இருந்து தலைமை செயலகம் புறப்பட்ட போது நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-
கேள்வி:-மத்திய மந்திரி ப.சிதம்பரமும் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேட்டில் ஈடுபட்டிருக்கலாம் என்று நிதித்துறை அமைச்சகத்தில் இருந்து பிரதமர் அலுவலகத்திற்கு ஒரு குறிப்பு போயிருக்கிறதே?
பதில்:-இந்திய அரசுக்கு ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியிருப்பதாக கணக்கு தணிக்கை அதிகாரி அறிக்கையில் கூறப்பட்டிருக்கும் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் ப.சிதம்பரம் அதிகமாக ஈடுபட்டிருக்கிறார் என்பது இதிலிருந்து தெளிவாக தெரிகிறது.
சிதம்பரம் தனது பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். இல்லையென்றால், பிரதமர் அவரை உடனடியாக மத்திய மந்திரி பதவியிலிருந்து நீக்க வேண்டும். அதோடு சி.பி.ஐ. ராசாவுக்கு எதிராக மேற்கொண்ட நடவடிக்கை போல சிதம்பரத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கேள்வி:-இது ராசா, கனிமொழி ஆகியோரை காப்பாற்ற உதவியாக இருக்கும் என்று தி.மு.க. வட்டாரத்தில் கூறப்படுகிறதே?
பதில்:-இதுகுறித்து நான் கருத்து கூற விரும்பவில்லை. நான் ஏற்கனவே சொன்னதோடு நிறுத்திக் கொள்கிறேன்.
இவ்வாறு ஜெயலலிதா கூறினார்.
No comments:
Post a Comment