Monday, September 12, 2011

இந்த மானங்கெட்ட காங்கிரஸ்காரனை என்ன பண்ணலாம்?


"நான், பார்லிமென்டை நம்புகிறேன், அதன் உறுப்பினர்களை அல்ல' என, காந்தியவாதி அன்னா ஹசாரே கூறியுள்ளார். இதைக் கிண்டல் செய்யும் விதமாக, அமைச்சர் சிதம்பரம் பேசும்போது, "பார்லிமென்ட் என்பது, அதன் தூண்களும், விதானமும், சுவர்களும், தரையும்தானா, அதன் உறுப்பினர்கள் இல்லையா' என, பெரும் தோரணையுடன் கேட்டு, சுற்றிப் பார்த்து, வெற்றிப் புன்னகை செய்தார்.


ஆமாம், உறுப்பினர்களும் சேர்ந்ததுதான் பார்லிமென்ட்; ஒத்துக்கொள்வோம். அன்றைய பூலான் தேவிகளும், இன்றைய மகாத்மாக்களான ராஜாக்களும், கனிமொழிகளும், கல்மாடியும், தயாநிதிகளும் சேர்ந்தது தான் பார்லிமென்ட்! 

ஏன், பார்லிமென்டில் கேள்வி கேட்பதற்கு, லஞ்சம் வாங்கியவர்களும், நம்பிக்கை ஓட்டளிக்க, கோடிகள் பெற்றுக் கொண்டோரும் சேர்ந்ததுதான் பார்லிமென்ட். இந்த மெஜாரிட்டி தம்மிடம் உண்டு என்பதால்தான் சிதம்பரத்தின் பேச்சு இப்படி உள்ளது.

"பார்லிமென்டே சுப்ரீம்' என, இவர்கள் முழங்குவதற்கு இந்த மெஜாரிட்டிதான் காரணம். இத்தகைய மெஜாரிட்டி இயற்றும் சட்டத்தின் நாளைய கதி என்ன? மக்கள் வெள்ளம் இவர்களைப் புரட்டிப்போட்டு வேறொரு மெஜாரிட்டியை உருவாக்கும்போது, வரலாற்றுக்குள் இந்த சட்டம் சமாதியாகும் வாய்ப்பு உண்டு. 

எமர்ஜென்சி காலத்து சட்டங்களுக்கு என்ன நேர்ந்தது? "சட்டத்தை மீறுவதற்கு முன்பே அன்னாவை ஏன் கைது செய்தீர்கள்' என, மேலும் எகத்தாளமாக கேட்கிறார். "ஏன், அன்று லாலுவையும், அத்வானியையும் கைது செய்யவில்லையா' என, எமர்ஜென்சி காலத்தை நினைவு கூரியும் பேசுகிறார். 

அந்த நகைப்பை அப்பாவித்தனமாக உறுப்பினர்கள் சிலரும் பகிர்ந்து கொண்டனர். உலகமே காரியுமிழ்ந்து கண்டித்த, ஒரு கீழ்த்தரமான காரியத்தை செய்துவிட்டு, அதன் காரணமாகவே மண்ணைக் கவ்விய வரலாற்றை, அதையே மார்தட்டி பெருமைப்படும் உதாரணமாகக் காட்டி பேசுவதை எப்படி வர்ணிப்பது?

சொல்லுங்கள் நண்பர்களே ?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...