கரூர் அருகே காவிரி ஆற்றில் அனுமதி இல்லாமல், சுமார் 230 கோடி ரூபாய்
அளவுக்கு விதிமுறைகளை மீறி மணல் எடுக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இக்குற்றச்சாட்டு தொடர்பில் கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் கீழ் பொதுப்பணி துறை அதிகாரிகள் நடத்திய முதல் கட்ட விசாரணையில் கடந்த திங்கட்கிழமை திமுக எம்.எல்.ஏ.கே.சி.பழனிசாமி கைது செய்யப்பட்டிருந்தார்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சுமார் 238 கோடி ரூபாய் மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளதாகவும் திமுக ஆட்சியின் போது பொதுப்பணித்துறை, கனிம வளத்துறை அதிகாரிகளாக இருந்தவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காவிரி ஆற்றில் மேற்கொள்ளப்பட்ட மணற்கொள்ளைகள் குறித்த தகவல்களை, காவிரி ஆற்று படுகை இளம்பொறியாளர் அறிவொளி மாயனூர் போலீஸ் நிலையத்தில் அளித்துள்ளார். அத்தகவல்களின் படி
மாயனூர் காவிரி ஆற்று படுகை மற்றும் வெளியில் அரசின் புறம்போக்கு நிலத்தில் உரிய அனுமதி இல்லாமல் 1.12.2009 முதல் 13.5.2011 வரையிலான கால கட்டத்தில் 378 ஏக்கரில் சுமார் 15.74 லட்சம் யூனிட் மணல் எடுக்கப்பட்டு உள்ளது. இதில் அரசு கணக்கீட்டின்படி ஒரு யூனிட்டுக்கு ரூ.310 வீதம் அரசுக்கு ரூ.49.50 கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளது. அதனை 2-வது விற்பனையாக செய்யும் பட்சத்தில் யூனிட்டுக்கு ரூ.1500 வீதம் ரூ. 238 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
மாயனூரில் மட்டும் இவ்வளவு கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் நடைபெற்று இருக்கும் பட்சத்தில் கரூர், திருச்சி மாவட்டத்தில் அமராவதி ஆறுகளில் கடந்த 5 ஆண்டுகளில் பல ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு மேல் முறைகேடு நடைபெற்று இருக்கலாம் எனவும் அறிவொளி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஏ.கே.பழனிசாமி மற்றும் அவருக்கு ஆதரவாக இருந்தவர்கள் மீது பொலிஸார் வழக்கு செய்துள்ளனர். மேலும் தற்பொது திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கே.சி.பழனிசாமியை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி போலீசார் குளித்தலை கோர்ட்டில் மனுதாக்கல் செய்து உள்ளனர்.
No comments:
Post a Comment