2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள் குறித்து சுப்ரீம்கோர்ட்டு மேற்பார்வையில் சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது.
தயாநிதிமாறன் தொலைதொடர்பு மந்திரியாக இருந்தபோது 2006-ம் ஆண்டு ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளை மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்குமாறு அதன் உரிமையாளர் சிவசங்கரனை தயாநிதிமாறன் வற்புறுத்தியதாகவும், அப்படி விற்கப்பட்ட பின்னர்தான் ஏர்செல் நிறுவனத்துக்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும் அதற்கு பிரதிபலனாக மேக்சிஸ் நிறுவனம் தயாநிதி மாறனின் குடும்ப நிறுவனத்துக்கு பெருந்தொகை முதலீடு செய்ததாகவும் சி.பி.ஐ. தனது விசாரணை அறிக்கையில் குற்றம் சாட்டி இருந்தது.
இந்த குற்றச்சாட்டால் எழுந்த சர்ச்சையால் தயாநிதி மாறன் தான் வகித்து வந்த ஜவுளித்துறை மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.
இந்த நிலையில் சி.பி.ஐ. சார்பில் கடந்த 1-ந்தேதி மற்றொரு விசாரணை அறிக்கை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது. விசாரணையின்போது சி.பி.ஐ. சார்பில் ஆஜரான வக்கீல் வேணுகோபால் கூறுகையில், ஏர்செல் நிறுவனத்தை மலேசியா நிறுவனத்துக்கு விற்பனை செய்ததில் தயாநிதி மாறனின் பங்கு குறித்த வலுவான ஆதாரம் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை என்று குறிப்பிட்டார்.
இந்நிலையில் இன்று சிபிஐ உச்சநீதிமன்றத்தில் ஸ்பெக்ட்ரம் ஊழலில் தயாநிதிமாறன் பங்கு குறித்த நிலை அறிக்கையினை தாக்கல் செய்தது. மேலும் தயாநிதி மாறன் மீது இம்மாத இறுதிக்குள் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்படும் என சி.பி.ஐ. தெரிவித்தது.
No comments:
Post a Comment