கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சினை தொடர்பாக தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில், கூடங்குளம் பகுதியில் உள்ள மக்களின் அச்சங்கள் தீர்க்கப்படும் வரை அணுமின் நிலைய பணிகளை மேற்கொண்டு தொடர வேண்டாம் என்று மத்திய அரசைக் கேட்டுக்கொள்ளும் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சினை குறித்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு கடந்த 19-ந் தேதி ஒரு கடிதம் எழுதினார். அந்த கடிதத்தில், தமிழக நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில், இந்த பிரச்சினையில் ஒத்த கருத்துடைய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் அடங்கிய குழு டெல்லி சென்று, பிரதமரை சந்தித்து, ஒரு கோரிக்கை மனுவை அளிக்கும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா தெரிவித்தார்.
மேலும், இந்த பிரச்சினையில் சுமூக தீர்வு எட்டப்படும் வரையில், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பணிகள் எதையும் மேற்கொண்டு தொடர வேண்டாம் என்றும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிரதமரை கேட்டுக்கொண்டார். அந்த கடிதத்தை படித்த பின், பிரதமர் மன்மோகன்சிங் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சினை தொடர்பாக, பிரதமர் அலுவலக மத்திய இணை மந்திரி நாராயணசாமியை அனுப்பி வைப்பதாக தெரிவித்தார்.
அதனையடுத்து, பிரதமர் அலுவலக மத்திய இணை மந்திரி வி.நாராயணசாமி 20-ந் தேதி தமிழகம் வந்து தலைமைச் செயலாளரை சந்தித்த பின், இடிந்தகரை சென்று, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை சந்தித்தார். அதன் தொடர்ச்சியாக, முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை நேற்று தலைமைச் செயலகத்தில், பிரதமர் அலுவலக மத்திய இணை மந்திரி நாராயணசாமி சந்தித்தார்.
அப்போது இடிந்தகரை சென்று போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை தான் சந்தித்தது பற்றி முதல்-அமைச்சரிடம் எடுத்துக்கூறினார். இந்த சந்திப்பின்போது, இந்திய அணுமின் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் டாக்டர் எஸ்.கே.ஜெயின், மத்திய அரசு அணுசக்தி துறையின் கூடுதல் செயலாளர் ஏ.பி.ஜோஷி, கூடங்குளம் அணுமின் நிலைய திட்ட இயக்குநர் ஆ.காசிநாத் பாலாஜி ஆகியோர் உடன் இருந்தனர்.
பின்னர், இடிந்தகரையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வரும் மக்களின் பிரதிநிதிகள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்தனர். அப்போது, கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சனை தொடர்பாக முதல்-அமைச்சர் எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு தங்களது நன்றியைத் தெரிவித்துக்கொண்டனர். மேலும், இதுதொடர்பாக தமிழ்நாடு அமைச்சரவையைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.
முதல்-அமைச்சர் ஜெயலலிதா அந்த கோரிக்கையை ஏற்று இன்று (வியாழக்கிழமை) தமிழக அமைச்சரவை கூட்டப்படும் என்றும், கூடங்குளம் பகுதியில் உள்ள மக்களின் அச்சங்கள் தீர்க்கப்படும் வரை அணுமின் நிலைய பணிகளை மேற்கொண்டு தொடர வேண்டாம் என தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும், பிரதமர் நிïயார்க்கிலிருந்து வரும் 27-ந் தேதி திரும்பிய பிறகு, அவரை சந்திப்பதற்கு வசதியான நாளைப் பெற்று, நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தமிழக குழு டெல்லிக்கு சென்று, பிரதமரிடம் கோரிக்கை மனு அளிக்கும் என்றும், பிரதமர் இந்தியா திரும்பிய பின், பிரதமருடன் முதல்-அமைச்சர் தொலைபேசியில் பேசுவதாகவும் தெரிவித்தார்.
முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் இந்த நடவடிக்கைகளுக்கு ஏற்ப, தற்போது இடிந்தகரையில் நடைபெற்று வரும் உண்ணாவிரத போராட்டத்தை உடனடியாக கைவிடுவதாக போராட்ட குழுவின் பிரதிநிதிகள் தெரிவித்தனர். முதல்-அமைச்சரின் நடவடிக்கைகளுக்கு அவர்கள் நன்றி தெரிவித்துக்கொண்டனர்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
கருத்து
இந்தியன் said:
ஏற்கெனவே சேது சமுத்திர திட்டத்தை கெடுத்தாச்சு. இப்போ இதையும் ஊத்தி மூடுங்க. அப்படியே மத்திய அரசின் நிறுவனங்கள் அனைத்தையும் குளோஸ் பண்ண வழி இருந்தா அதையும் செய்யுங்க. தமிழ்நாடு உருப்படும். வாழ்க.
தன தலையில தானே மண்ணை வாரி கொட்டிக்கரதுல தமிழ் நாட்டுக்காரன் மாதிரி யாருமே கிடையாது |
ஏற்கெனவே சேது சமுத்திர திட்டத்தை கெடுத்தாச்சு. இப்போ இதையும் ஊத்தி மூடுங்க. அப்படியே மத்திய அரசின் நிறுவனங்கள் அனைத்தையும் குளோஸ் பண்ண வழி இருந்தா அதையும் செய்யுங்க. தமிழ்நாடு உருப்படும். வாழ்க.
| ||
பதி மூணு ஆயிரம் கோடி ருபாய் செலவு பண்ணியாச்சு. வேலை ஆரம்பிச்சு 13 வருஷம் ஆயி மின் உற்பத்தி தொடங்க போவுது. இப்ப உண்ணாவிரதம் இருக்கற முண்டங்களுக்கு இத்தனை வருஷமா புத்தி எங்க போச்சு? 13000 கோடி யார் வீட்டு பணம்? ஜப்பான் ல சுனாமி வந்த மாதிரியே வந்து இவங்கள் எல்லாம் அழிஞ்சு போயிடுவானுங்கன்னு எதனா கியாரண்டி இருக்கா? அணு உலைய மூடின பிறகு சிக்கிம்ல வந்த மாதிரி பூகம்பம் அழிஞ்சு போனா என்னா பண்ணுவானுங்க? இயற்கை பேரழிவு வந்து சாகனும்னு இருந்தா அது எப்படி வேணும்னாலும் வரும் ! மீன் புடிக்கறவன் மட்டும் வாழ்ந்தா போதுமா? ஏற்கனவே மின் பற்றாக்குறையால மாநில வளர்ச்சியே பாதிக்கப்பட்டிருக்கு. இதுல இந்த முட்டாபசங்க கரண்ட் வர ஒரு வழியையும் அடைக்க பாக்குறானுங்க. இந்த உண்மையா சொன்னதுக்கு என்னை குறை சொல்லலாம்.ஆனால் இந்த போராட்டம் முட்டாதனமானது மற்றும் தேவை இல்லாததுன்னு மனசாட்சி இருக்கற எல்லாருக்கும் புரியும்.
|

2004 ம் வருடம் சுனாமி வந்ததால கடற்கரை ஓரம் நிறைய அழிவுகள் அதனால போராட்டம் நடதுரவுங்க எல்லாம் அந்த இடத்தை காலியா பண்ணாங்க இப்ப போராட்டன் நடத்தும் மக்கள் ... பூகம்பம் வந்தால் வீடு இடிந்த உயிர் போகும் ஆபத்து இருக்குன்னு வீடு கட்டமாய இருக்காங்க .. அந்த பகுதி மக்கள் இப்ப போராட்டம் நடத்துறது போல இந்தியா முழுவதும் அனல் மின் நிலையங்களை மூட சொன்னால் கரண்ட் இல்லாம எல்லாரும் திண்டாட தான் வேண்டும் ... ஏன் கூடம் குளம் மக்கள் கரண்ட் அவுங்க பகுதிக்கு தேவை இல்லன்னு சொல்ல வேண்டியது தானே ... அரசியல் தலைவர்கள் எல்லாம் நடிக்கிறாங்க வோட்டுக்காக ... முதல்ல நாட்டோட வளர்சிய பாருங்கள் ... தேவை இல்லாத போராட்டங்கள் முட்டாள் ஜனங்கள் இப்படியே எல்லா திட்டத்துக்கும் போரடுங்கட நாடு நல்லா பின்னேறும் முன்னேராம.... |
அணு உலையால் சாவு வரும் என்று நினைத்தால் மாரடைப்பு, புற்று நோய் , இரத்த அழுத்த நோய் அடிக்கடி வருதே பூகம்பம் எப்போதாவது தான் வரும் மின்சாரம் வருவதை தடுக்கும் ஒரு கூட்டம் இதுக்கு துணை போகும் அரசியல் வாதிகள் ரோடு இருந்தால் கூட விபத்து வரும் என்ன செய்வாய் |
No comments:
Post a Comment