Friday, September 23, 2011

"ஜன் லோக்பால் இருந்தால் சிதம்பரம் சிறையில் இருந்திருப்பார்'

ராலேகான் சித்தி: ""ஜன் லோக்பால் மசோதா ஏற்கனவே அமலாகி இருந்தால், ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆளாகியிருக்கும் சிதம்பரம் இந்நேரம் சிறையில் அடைக்கப்பட்டிருப்பார்,'' என, சமூக சேவகர் அன்னா ஹசாரே கூறியுள்ளார். "2ஜி' ஊழல் புகாரில் சிக்கிய சிதம்பரம் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்றும், தன் சொந்த கிராமமான ராலேகான் சித்தியில் நிருபர்களிடம் பேசிய அவர் கூறினார்.

பா.ஜ., செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது: "2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை ஏல முறையில் விற்கும்படி, அப்போதைய நிதி அமைச்சர் சிதம்பரம் வலியுறுத்தி இருந்தால், ஸ்பெக்ட்ரம் ஊழலே நடந்திருக்காது' என, பிரதமர் அலுவலகத்துக்கு, நிதி அமைச்சகம் எழுதிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் பெரிய சர்ச்சையை கிளப்பிய நிலையிலும், சிதம்பரத்தை அமைச்சர் பதவியில் இருந்து நீக்காமல், பிரதமர் ஏன் மவுனமாக இருக்கிறார் என, ஆச்சர்யமாக இருக்கிறது. யாருடைய வேண்டுகோளின் பேரில், பிரதமர் அலுவலகத்துக்கு, நிதி அமைச்சகத்தால் இந்த கடிதம் அனுப்பப்பட்டது? இதை தெரிந்து கொள்வதற்கு நாட்டு மக்களுக்கு உரிமை உள்ளது. பிரதமர் அலுவலகம் தான் இந்த விவரங்களை கேட்டது என்றால், அதற்கு பின் நடவடிக்கை எடுக்காதது ஏன்?


"2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேட்டில் தனக்கு தொடர்பு இல்லை என, பிரதமர் மன்மோகன் சிங், இரு முறை கூறியுள்ளார். இதே நடைமுறை தான் தற்போதும் நடக்கிறது. இந்த விவகாரத்தில், இன்னும் எத்தனை நாட்களுக்கு நீங்கள் அமைதியாக இருக்க முடியும். இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் கூறினார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...