Saturday, September 17, 2011

முதல்வர் 'ஜெ' க்கு ஒரு பாராட்டு, ஒரு குட்டு...!?



'வகுப்புக் கலவர தடுப்பு மசோதா' என்ற செய்தி, பத்திரிகைகளில் வெளிவருவதற்கு முன், அதனால் ஏற்படும் பின் விளைவுகள் குறித்து, தமிழக முதல்வர் எச்சரித்தது, அனைவருக்கும்  நினைவிருக்கும்.

வகுப்புக் கலவர தடுப்பு மசோதா, சோனியா தலைமையிலான தேசிய ஆலோசனை கவுன்சில் வடிவமைத்தது. 

இந்தியாவில் எங்கு மதக் கலவரம் நடந்தாலும், அதற்கான காரணங்கள் எதுவாக இருந்தாலும், அதற்கு, அப்பகுதியில் பெரும்பான்மையாக உள்ள இந்துக்கள் மீது மட்டும் வழக்கு பதிவு செய்ய, இம்மசோதாவின் ஒரு பிரிவு அனுமதிக்கிறது. 

இதனால், இம்மசோதாவில் உள்ள பாதுகாப்பை பயன்படுத்திக் கொண்டு, சிறுபான்மையினர் கலவரத்தை தூண்டி விட்டாலும், அவர்கள் பாதுகாக்கப்படுவதுடன், பெரும்பான்மை இந்துக்கள் தான் பாதிக்கப்படுவர். 

அதாவது, விசாரணைக்கு முன்பே, தீர்ப்பு வாசிக்கப்படுவதைப் போல! மேலும், இம்மசோதா, சட்டமாக்கப்பட்டால், காங்கிரஸ் ஆட்சியில் இல்லாத மாநிலங்களில், சட்டம் - ஒழுங்கு கெட்டு விட்டது என்று, அம்மாநில அரசை கலைத்துவிட்டு, கவர்னர் ஆட்சியை பிரகடனப்படுத்த முடியும்.

எந்தவொரு கலவரத்தையும் அடக்குவதற்குத் தேவையான காவல்துறையை, அந்தந்த மாநில அரசே தன் வசம் வைத்துள்ளது. (பரமக்குடி கலவரம் வழக்கில் உள்ளதால் அதைப் பற்றி தீர்ப்பு வந்தவுடன் பேசுவோம் - குட்டு) மேலும், இது, அம்மாநிலத்தின் உள்விவகாரம். தேவைப்பட்டால், மத்திய அரசிடம் கேட்டு, துணை ராணுவத்தின் உதவியைப் பெற முடியும். 

எனவே, இம்மசோதாவே தேவையற்றது. இந்த தேசிய ஆலோசனை கவுன்சில் என்பதே, அரசியல் சட்டத்துக்கு முரணானது. அரசியல் சட்டத்தால் அங்கீகரிக்கப்படவில்லை. மத்திய அரசின் அமைச்சரவை அங்கீகரித்த எந்த ஒரு சட்டமும் அல்லது முடிவும், இந்த தேசிய ஆலோசனை கவுன்சிலில் வைத்து, அதன் அங்கீகாரத்தை பெற்ற பின் தான், அதை நடைமுறைப்படுத்த முடியும். 

இந்தியாவில், இந்த தேசிய ஆலோசனை கவுன்சில் என்பது, வல்லரசு நாடுகளின், 'வீட்டோ பவர்' அதிகாரத்துக்கு சமமானது என்றால், அரசியலை ஒரு பாடமாக விரும்பிப் படித்த பட்டதாரிகளுக்கு எளிதில் புரியும். இது, சட்ட முன்வடிவு பெறுவதற்கு முன், பார்லிமென்டில் எதிர்ப்பு தெரிவிக்க, தன் கட்சி பார்லிமென்ட் உறுப்பினர்களுக்கு, தமிழக முதல்வர் அறிவுரை வழங்கியுள்ளார்.

'வரும் பொருள் உரைத்தல் மந்திரிக்கழகு' என்ற பழமொழியின்படி, தமிழக முதல்வர் ஜெ.,யின் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை பாராட்டத்தக்கது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...