ஒரு பெரிய குழப்பாமான சூழலில் தற்போது திமுக எதிக்கொண்டுள்ளது. ஆட்சியை காப்பாற்ற அல்லது அதை தக்கவைக்க கலைஞர் அவர்கள் எந்த ஒரு முடிவையும் எதிர்கொள்வார் ஆனால் அதை தக்க வைக்க தற்ப்போது எந்த ஒரு பிடிப்பு இல்லாமல் இருக்கிறார். அவர் இதுவரை மேற்க்கொண்ட சாணக்கயத்தனத்திற்க்கான உதாரணங்கள்...
"மறைந்த பிரதமர் இந்திராவினாலேயே தி.மு.க.,வை ஒன்றும் செய்ய முடியவில்லை. அதற்காக தன் வருத்தத்தை தெரிவித்துக் கொண்டார்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி திருவாய் மலர்ந்திருக்கிறார். "தி.மு.க.,வை எந்தக் கொம்பனாலும் அழிக்க முடியாது' என்றும் கூறுகிறார். அவர் எப்படி தி.மு.க.,வை இதுவரை காப்பாற்றினார் என்பதற்கு சில உதாரணங்கள்:
"இந்திராவை சேலை கட்டிய ஹிட்லர்' என, கூட்டத்திற்கு கூட்டம் வர்ணித்த கருணாநிதி, சர்க்காரியா கமிஷனை எதிர்கொள்ள, கூட்டணிக்கு அவர் காலில் விழுந்து, "நேருவின் மகளே வருக; நிலையான ஆட்சியைத் தருக' என, முழுக்கமிட்டு தி.மு.க.,வைக் காப்பாற்றினார்.
எம்.ஜி.ஆர்., மறைவு வரை, "கூடா நட்பு' காங்கிரசின் ஆதரவில் தி.மு.க.,வைத் தன் பக்கம் வைத்துக் கொண்டார். எம்.ஜி.ஆர்., மறைவுக்குப் பின், அ.தி.மு.க.,வை உடைத்து, அ.தி.மு.க., (ஜெ) என்றும் அ.தி.மு.க.,(ஜா) என்றும் நாமகரணம் சூட்டி மகிழ்ந்து காப்பாற்றிக் கொண்டார்.
அதற்குப் பின் மூப்பனாருடன் கைகோர்த்து, ஆட்சியைப் பிடித்து, தன்னை ஸ்திரப்படுத்திக் கொண்டார். கூடாநட்பு காங்கிரசுடன் எக்காரணத்தைக் கொண்டும் அ.தி.மு.க., சேரவிடாமல், ஜெயலலிதா எப்போதோ சோனியாவை விமர்சித்துப் பேசியதை, இவரும், இவரது அடுத்த மட்ட தலைவர்களும், "ரிபீட்' செய்து பேசி, காங்கிரசை தந்திரமாக, அ.தி.மு.க., கூட்டணியில் சேர விடாமல் தடுத்துத் தன் கட்சியைக் காப்பாற்றிக் கொண்டார்.
தி.மு.க., தன் சொந்த பலத்தில் நின்று ஜெயித்ததாக வரலாறு கிடையாது. இப்போது தி.மு.க., தன் கடைசி கட்டத்தை எதிர் நோக்கியிருக்கிறது. தன் மகன்களே தனக்கு எதிராக செயல்படுவது, கழகக் கண்மணிகள் ஒவ்வொருவராக அந்தந்த மாவட்ட சிறைக்குச் செல்வது, கூடா நட்பு காங்கிரஸ் தன்னை விட்டு விலகி நிற்பது,
சோனியா இவரைச் சட்டை செய்யாதது, பா.ம.க., மற்றும் விடுதலை சிறுத்தை கட்சித் தலைவர்கள் மணிக்கொருதரம் கோபாலபுரம் செல்லும் நிலை மாறி, அவர் முகத்தைக் கூட பார்க்க துணியாதது என, பல சம்பவங்கள் நடந்துவருகின்றன. அரசியல் புயலில் தி.மு.க., நிலைத்து நிற்க, பெரிய அளவில் சுயபரிசோதனை தேவை.
No comments:
Post a Comment