Wednesday, September 21, 2011

என்னது வைகோவும் ராமதாசும் கூட்டணியா?


ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோவும், பா.ம.க., தலைவர் ராமதாசும், இன்று உலகத் தலைவர்களாக வலம் வருகின்றனர். பிரதமர் மன்மோகன் சிங்கையும், சோனியாவையும் தெரியாதவர்கள் கூட, வைகோவையும், ராமதாசையும் நன்கு தெரிந்து வைத்திருக்கின்றனர்.

"டிவி' செய்திகள் மூலம், உலகத்தின் மூலை முடுக்கெல்லாம், வைகோவின் செல்வாக்கும், ராமதாசின் மகத்தான சாதனையும் சென்றடைந்திருக்கின்றன. இன்று, முதல்வர் ஜெயலலிதாவும், தி.மு.க., தலைவர் கருணாநிதியும், இந்த இரண்டு தலைவர்களின் புகழையும், பெருமையையும் எண்ணி, மிரண்டு போய் பதுங்கி இருக்கின்றனர்.அஞ்சி நடுங்கிக் கொண்டிருக்கின்றனர்.!

தமிழகத்தில், சட்டசபைக்குத் தேர்தல் நடந்தால், ம.தி.மு.க., 170 இடங்களிலும், பா.ம.க., 64 இடங்களிலும் தனித்துப் போட்டியிட்டாலும், நிச்சயம் அமோக வெற்றி பெறும்! அ.தி.மு.க.,வும், தி.மு.க.,வும், டெபாசிட் இழந்தாலும் ஆச்சரியமில்லை. 

அப்படிப்பட்ட பெரும் செல்வாக்கு உள்ள வைகோவும், ராமதாசும், "திருச்சி மேற்கு தொகுதியில் நடக்கவிருக்கும் இடைத் தேர்தலைப் புறக்கணிப்போம்' என, கூறியிருப்பது, மிகவும் வேதனை அளிக்கிறது. 

திருச்சி தொகுதி மக்கள், சொல்லொணாத் துயரில் ஆழ்ந்து போயுள்ளனர். இப்போது அங்கு, வைகோவும், ராமதாசும் பிரசாரம் செய்யாமலேயே, மாபெரும் வெற்றி பெற முடியும் என்ற சூழ்நிலை உருவாகியிருக்கிறது. 

எனவே வைகோவும், ராமதாசும், தங்களின் தேர்தல் புறக்கணிப்பு முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என, ம.தி.மு.க., - பா.ம.க., தொண்டர்கள் ஆவலோடு எதிர்பார்க்கின்றனர். செய்வார்களா?

போங்கடா நீங்களும் உங்க அரசியலும் ...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...