Sunday, September 4, 2011

கோவை, சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் ரூ.162 கோடி ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்பு

தமிழக முதல்- அமைச்சராக ஜெயலலிதா பதவி ஏற்றதும் நில மோசடி தொடர்பாக விசாரிக்க மாவட்டம் தோறும், தனிப்பிரிவை தொடங்கினார். அதைத் தொடர்ந்து நில மோசடி தொடர்பாக ஒவ்வொரு மாவட்டத்திலும் புகார்கள் குவிந்தன.
 கோவை, சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில்
ரூ.162 கோடி ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்பு
கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர், சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய போலீஸ் மேற்கு மண்டலத்தில் 15.5.2011 முதல் நேற்று முன்தினம் வரை 4 ஆயிரத்து 820 நில மோசடி புகார்கள் வந்துள்ளன.
 
கோவை மாவட்டத்தில் 341 புகார்களில் 21 மனுக்கள் மீது எப்.ஐ.ஆர்.பதிவு செய்யப்பட்டு 78 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 3 பேர் அரசியல்வாதிகள் ஆவார்கள். 320 புகார்களுக்கு ரசீது கொடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் 159 மனுக்கள் விசாரணைக்கு ஏற்றதல்ல என்று தெரியவந்துள்ளது.
 
மற்ற 161 மனுக்கள் பரிசீலனையில் உள்ளன. 21 எப்.ஐ.ஆரின்படி 93 ஏக்கர் நிலம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.   ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 748 புகார் மனுக்களில் 8 மனுக்கள் மீது எப்.ஐ.ஆர்.பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
நீலகிரி மாவட்டத்தில் 106 புகார் மனுக்களும், திருப்பூரில் 433 புகார் மனுக்களும், சேலத்தில் 867 புகார் மனுக்களும், நாமக்கல்லில் ஆயிரத்து 24 மனுக்களும், தர்மபுரியில் 606 மனுக்களும், கிருஷ்ணகிரியில் 695 மனுக்களும் வந்துள்ளன. இதில் தகுதியான மனுக்கள் கோவை-21, ஈரோடு-8, திருப்பூர்-75, சேலம்-12, நாமக்கல்-20, தர்மபுரி-13, கிருஷ்ணகிரி-19 ஆக மொத்தம் 168 மனுக்கள் மீது எப்.ஐ.ஆர்.பதிவு செய்யப்பட்டு உள்ளது.
 
இந்த 168 எப்.ஐ.ஆர். மூலமாக 941 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் 147 பேர் கைது செய்யப்பட்டனர். ஆக மொத்தம் ரூ. 1000 கோடி மதிப்பிலான நிலத்தை அபகரித்து விட்டதாக 4 ஆயிரத்து 820 மனுக்களில் 4 ஆயிரத்து 652 மனுக்களுக்கு ரசீது கொடுக்கப்பட்டு உள்ளது. இதில் 2 ஆயிரத்து 519 மனுக்கள் விசாரிக்கப்பட்டு விட்டது. 2 ஆயிரத்து 133 மனுக்கள் பரிசீலனையில் உள்ளன.  
 
நாமக்கல் மாவட்டத்தில்தான் அதிக எண்ணிக்கையில் நிலமோசடி புகார்கள் வந்துள்ளன. ஆனால் இதில் எப்.ஐ.ஆருக்கு 20 தகுதியானதாகும். திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் வந்துள்ள 433 புகார் மனுவில் 75 மனுக்களுக்கு எப்.ஐ.ஆர். போடப்பட்டுள்ளது. இந்த 75 எப்.ஐ.ஆரிலும் 289 பேர் சிக்கி உள்ளனர்.
 
இதுவரை கோவை மேற்கு மண்டலத்தில் ரூ.162 கோடியே 45 லட்சத்து 20 ஆயிரத்து 100 மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டுள்ளது. எப்.ஐ.ஆரின் அடிப்படையில் 87 அரசியல்வாதிகள் சிக்கி உள்ளனர். மேற்கண்ட தகவல் கோவை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...