Saturday, September 3, 2011

இலங்கையிடம் சரணாகதியடையப் போகும் திமுக!

மீண்டும் வசந்த காற்றாய்
நம்பிக்கை ரேகைகள்
தமிழர்
மேனியெங்கும் 
தழுவத் தொடங்கியிருக்கிறது,
இலவசமாய் எது கொடுப்பினும்
வாங்கி விட்டு
தன் இயல்புதனை உணர்த்துவான்
தமிழன் எனும் யதார்த்தம்
’ஐயாவின் ஆட்சி- 
அம்மாவின் வருகை மூலம்
தூக்கி வீசப்படுகையில்
கண்டு தெளிந்தது தமிழகம்- ஆனாலும்
இலவசங்கள் கொடுத்தால்
வாடிய பயிர்கள் எல்லாம்
தம்மை வாழ வைக்கும் என
வாசல் வந்து
கரங் குவித்து
தம் கையில் நிறைந்திருந்த
செங்குருதி மணம் கழுவப்படாமல்
வெற்றிலையில் சுண்ணாம்பிட்டு;
பிச்சையிடுகின்றோம்- எம்
நன்றி கடன் மறவாதேம்
என வந்தவர்க்கு,
தக்க நேரத்தில் தமிழன்
தன் நிலையினை மீண்டும்
நிரூபித்துள்ளான்!

ஆடி மாதம் 
வாடிப் போன 
தமிழன் வரலாறு
இரு சேதிகள் வாயிலாக
இந் நாளில்
புதுப்பிக்கப்பட்டிருக்கிறது,
ஜெயலிதாவின் பக்கமிருந்து
மெல்லிய அசைவொன்று
எம் மீதான 
சுவாசத்திற்கு வேண்டிய
ஒட்சிசனாய் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது,

கருணாநிதி வடிவில்
களையப்பட்ட 
தமிழ்த் தாயின் துகில்
மெது மெதுவாக
இன உணர்வெனும் வெளியீடு கொண்டு
போர்த்தப்படுகிறது- தன் நிலை 
உணர்ந்து கொள்ளும்
காலம் இது வென கலைஞர்
கண்டு தெளிந்து விட்டதாய்
நாளாந்தம் மாறும் காட்சிகள்
கட்டியம் கூறுகின்றன!

தான் வளர்த்த
கடாக்கள்- தமிழ்ப் பாலூற்றி
சீவப்பட்ட கொம்புகளோடு
சொத்துக்கள் எனும்
மானத்தை சூறையாடி
பங்கு போட்டு
திமுக வை 
திக்குமுக்காட செய்கையில்
வேறு வழியின்றி
முன் வினைப் பயனை 
உணர்ந்து தள்ளாடும் வயதினிலும்
தத்தளிக்கிறார் தாத்தா!

அம்மாவின் கரங்கள்
ஈழ மக்கள் நோக்கி
காலச் சுழற்சியின்
சந்தர்ப்ப பிறழ்வுகளால்
மேலும் வீரியமாய் 
சில வேளை நீளலாம்!

அந் நேரம் தான் செய்த
தவறுகளை நினைத்து 
கண்ணீர் வடிப்பாரா கலைஞர்- இல்லை
மகிந்தவுடன் கரங்கோர்த்து 
ஈழ மக்கள் விடிவிற்காய் 
புது கூட்டணி தொடங்குவாரா?

தூர நோக்கு அரசியலில்
கலைஞரின் தந்திரங்கள்
வியப்பினைத் தருவதால்.
இலங்கையிடம்
கரங் குவித்து
சரணாகதியடைந்தாலும்
ஆச்சரியப்பட ஏதுமில்லைத் தானே!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...